மல்லிகார்ஜுன கார்கே: நரேந்திர மோடியை தொடக்கப் பள்ளிக்குதான் அனுப்ப வேண்டும்..!

இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தலுக்காக மகா விகாஸ் அகாதியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களைப் பிரிப்பதற்கானது இல்லை. இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

நரேந்திர மோடி இந்தச் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போன்ற புத்தகம் ஒன்றை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்க்கு நரேந்திர மோடி வழங்கினார். அதில் வெற்றுப் பக்கங்கள் இருப்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார்.

அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டுமொத்த அரசியலமைப்பு இல்லை. பாஜகவும், பிரதமரும் சித்தரிப்பது போல இது வெற்றுக் காகிதம் இல்லை. அவரை மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம். நாட்டைப் பிரித்து வைத்தால்தான் காங்கிரஸ் பலமடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் யோகி இடமிருந்து வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடியோ நீங்கள் தனித்திருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கூறுகிறார். இதில் எந்த கோஷம் வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தவரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்” என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

சுமார் 2 மணி நேரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை..! உயிரிழந்த சிறுவர்களை 15 கி.மீ தூக்கி சென்ற பெற்றோர்..!

அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்காததால் சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தினால் 15 கி.மீ வரை குழந்தைகளின் சடலங்களை தூக்கி சென்ற அவலம். பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் அகேறி என்ற பகுதியை அடுத்துள்ள பட்டிக்கான் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளன. இந்த சூழலில் இந்த குழந்தைகளுக்கு மிகவும் காய்ச்சல் அடிக்கிறது என்பதால் கடந்த 4-ஆம் தேதி ஜமீல்கட்டா ஆரம்ப சுகாதார நிலையம் த்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அங்கே மருத்துவர் இல்லாத காரணத்தினால், சுமார் 2 மணி நேரம் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் இரண்டு சிறுவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேரம் கழித்து வந்த மருத்துவர் சிறுவர்கள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் குழந்தைகளின் உடலை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முனைந்த பெற்றோர், அதற்காக ஆம்புலன்ஸை எதிர்ப்பார்த்துள்ளனர். ஆனால் ஆம்புலன்சும் இல்லாத காரணத்தினால் வேறு வழியின்றி சேறும், சகதியுமாய் இருந்த பாதையில் சுமார் 15 கி.மீ வரை தங்கள் தோள்களில் தங்கள் குழந்தைகளின் சடலங்களை கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Uddhav Thackeray: சிவாஜி சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26-ம் தேதி பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” என்று பெயரிடப்பட்டிருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், “நீங்கள் அந்த மன்னிப்பில் இருந்த ஆணவத்தை கவனித்தீர்களா? அது ஆணவத்தால் அடிக்கப்பட்டது.

அப்போது ஒரு துணை முதலமைச்சர் சிரித்துக் கொண்டிருந்தார். கீர்த்தி மிகுந்த வீரம்நிறைந்த மன்னர் அவமதிக்கப்பட்டிருப்பதை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ராமர் கோயில் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் கூரைகள் ஒழுகுவது மோடியின் பொய்யான உத்தரவாதத்துக்கு உதாரணங்கள்.

பிரதமர் எதற்காக மன்னிப்புக் கேட்டார்? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த சிலையைத் திறந்து வைத்ததற்காகவா? அதில் நடந்துள்ள ஊழலுக்காகவா? சிவாஜி மகாராஜாவை அவமதித்த சக்திகளை எம்விஏ கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அந்தச் சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு” என உத்தவ் தாக்கரே பேசினார்.

Narendra Modi: என் கடவுள் சிவாஜி மகாராஜாவிடம் தலை வணங்கி மன்னிப்புக் கேட்கிறேன்..!

மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 4-ம் தேதி 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்து வைத்தார். கடந்த 26-ஆ ம் தேதி கனமழை மற்றும் சூறாவளி காரணமாக இந்த சிலை சரிந்து விழுந்தது. நிறுவிய 8 மாதத்திலேயே சிலை விழுந்ததால் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் அரசைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், சிலை உடைந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலையை வடிவமைத்த கட்டட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை காவல்துறை கைது செய்த நிலையில் சிற்பி ஜெயதீப் ஆப்தே தலைமறைவாகி உள்ளார். கடற்படைதான் சிலையை நிறுவியது என விளக்கமளித்த நிலையில் ள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே “சத்ரபதி சிவாஜியின் பாதத்தில் 100 முறை விழுந்து மன்னிப்புக் கேட்கத் தயார்” என தெரிவித்தார்.

இந்நிலையில் சிலை உடைந்தது தொடர்பாக முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடிபேசியுள்ளார் . மகாராஷ்டிராவின் பால்கர் என்ற பகுதியில் பேசியபோது, “சத்ரபதி சிவாஜி மகாராஜா வெறும் பெயர் அல்ல, என் கடவுள் சிவாஜி மகாராஜாவிடம் இன்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்கிறேன். சிவாஜியை தங்கள் அடையாளமாகக் கருதுபவர்களிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சரத் பவார் தலைமையில் போராட்டம்..!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து இரு சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், பத்லாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 17ம் தேதி பத்லாபூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, மூன்று காவல்துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்த மகாராஷ்டிர அரசு, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்வத்தை கண்டித்தும், இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் தேசியவாத காங்கிரஸ் (எஸ்சிபி) கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் புனேவில் இன்று போராட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமானோர் கருப்புத் துணிகளை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சரத் பவார், “பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. பத்லாபூர் சம்பவத்தை மகாராஷ்டிர அரசு முக்கிய பிரச்சினையாகக் கருத வேண்டும். ஆனால், இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக அரசு கூறுகிறது. அரசு எவ்வாறு பொறுப்பற்றத்தனத்துடன் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது” என சரத் பவார் குறிப்பிட்டார்.

Uddhav Thackeray: ‘காங்கிரஸ்., என்சிபி அறிவிக்கும் மகா விகாஸ் அகாதி முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு..!’

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல என உத்தவ் தாக்கரே பேசினார்.

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

மகா விகாஸ் அகாதியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன். காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல.

மேலும் அவர், நாட்டுக்கான மதசார்பற்ற சிவில் சட்டம் தேவை என்ற சுதந்திரதின உரையில் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி பேச்சுக்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே இந்த முறை இந்துத்துவாவை விட்டு விட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார். தொடர்ந்து வக்ஃபு வாரிய. சட்டத் திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே,”பாஜக பெரும்பான்மையுடன் இருக்கும் போது இதனைச் செய்யவில்லை என கேள்வி உத்தவ் தாக்கரே எழுப்பினார்.

காவல்துறை காவலரை தாக்கிய பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த மாநில துணை முதலமைச்சர்களில் ஒருவரான அஜித் பவார் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி முடிந்தது மேடையில் இருந்து இறங்கும் புனே கண்டோமன்ட் தொகுதி பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே சற்று நிலை தடுமாறுகிறார்.

துணை முதலமைச்சர் அஜித் பவார் மேடையில் இருக்கையில், கோபமடைந்த கண்டோமன்ட் தொகுதி பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே அங்கு பணியில் இருந்த காவல் காவலரை கன்னத்தில் தாக்கியது தெரிகிறது. தாக்கப்பட்டவர் பண்ட்கார்டன் காவல் நிலைய காவலர் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ சுனில் காம்ப்ளே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக எம்எல்ஏ, “நான் யாரையும் தாக்கவில்லை. நான் இறங்கி வரும்போது யாரோ குறுக்கே வந்தனர். நான் அவர்களைத் தள்ளிவிட்டு முன்னேறி வந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை அமைச்சர் பகீர் தகவல்

மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸை உடைத்து அஜித்பவார் ஆகியோரை இணைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வறட்சி, பசி அதிகரித்து விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி வருவாய் கோட்டத்தில் அதிக பட்சமாக 951 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குணால் பாட்டீல் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் வெளியான அறிக்கையில் அமராவதி வருவாய் கோட்டத்தில் 951 விவசாயிகளும், சத்ரபதி சம்பாஜி நகர் கோட்டத்தில் 877 பேரும், நாக்பூர் கோட்டத்தில் 257 பேரும், நாசிக் கோட்டத்தில் 254 பேரும், புனே கோட்டத்தில் 27 பேரும் தற்கொலை செய்துள்ளனர். ஆகமொத்தம் இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

பதவியை ராஜினமா செய்வதற்கு முன்பு தந்தையின் ஆசையை நிறைவேற்றிய உத்தவ் தாக்கரே..!

மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக அவர் தனது தந்தை பால்தாக்கரேவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவுரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய 2 நகரங்களின் பெயரை மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடனான கூட்டணியில் அதிருப்தி அடைந்த சிவசேனா எம்எல்ஏக்கள் 35க்கும் அதிகமானவர்கள் அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்றது மகராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை திரும்ப அழைக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. ஆகையால், மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களில் அரங்கேறிய போர்க்கொடிக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கனத்த இதயத்துடன் சிவசேனாவின் இரண்டரை ஆண்டு ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பபட்டுள்ளது.

மகாராஷ்டிரா ஆளுநர் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இரவில் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

முன்னதாக உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடத்தினார். தனது தலைமையில் நடைபெறும் கடைசி அமைச்சரவை கூட்டம் என்பதை அறிந்திருந்த உத்தவ் தாக்கரே இந்த கூட்டத்தின் வாயிலாக 2 நகரங்களின் பெயர் மற்றும் மும்பை விமான நிலையத்தின் பெயர்கள் மாற்றம் செய்ய ஒப்புதல் பெற்றார்.

அதன்படி முகலாய பேரரசர் அவுரங்கசீப் பெயரை குறிக்கும் வகையில் அவுரங்காபாத் நகரத்தை சம்பாஜி நகர் எனவும், ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான மீர் உஸ்மான் அலி கான் பெயரில் உஸ்மானாபாத் நகரத்தை தாராஷிவ் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தார். அதோடு நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் விவசாயிகள் சங்க கட்சி தலைவர் டிபி பாட்டீல் பெயர் சூட்ட கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றம் குறித்தும் தனது ராஜினாமா அறிவிப்பில் உத்தவ் தாக்கரே, ‛‛அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர், உஸ்மானாபாத் நகரை தாராஷிவ் எனவும் பெயர் மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 2 நகரங்களுக்கு இத்தகைய பெயரை வைக்க என் தந்தை ஆசைப்பட்டார்” என கூறினார். இதன்மூலம் உத்தவ் தாக்கரே தனது தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டு முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.