நல்லசாமி: யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய் அரசியல் புரிதல் இல்லை…!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு நல்லசாமி பதிலளித்தார். அப்போது, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், ஏன் உலகளவில் எந்த நாட்டிலும்கூட கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47-வது பிரிவில் கள் ஒரு உணவுப்பொருள் என்று சொல்லி இருக்கிறது. இதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி கள் இறக்கினால், மதுவிலக்குசட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்துக்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் நல்லசாமி பேசிகையில், கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் உரிய தயாரிப்புகளுடன் வாதாட வரட்டும். நியாயமான வாதங்களை வைத்து, வெற்றி பெற்று விட்டால், அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.

கள் என்பது போதைப் பொருள் அல்ல. நமது உணவின் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இதையொட்டி, 2025 ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் வெற்றி பெறும். தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய். அவருக்கு அரசியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லை என நல்லசாமி தெரிவித்தார்.

நல்லசாமி: கள்ளுக்கான போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்போல ச்சயம் வெற்றிபெறும்..!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு நல்லசாமி பதிலளித்தார். அப்போது, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், ஏன் உலகளவில் எந்த நாட்டிலும்கூட கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47-வது பிரிவில் கள் ஒரு உணவுப்பொருள் என்று சொல்லி இருக்கிறது. இதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி கள் இறக்கினால், மதுவிலக்குசட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்துக்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் நல்லசாமி பேசிகையில், கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் உரிய தயாரிப்புகளுடன் வாதாட வரட்டும். நியாயமான வாதங்களை வைத்து, வெற்றி பெற்று விட்டால், அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.

கள் என்பது போதைப் பொருள் அல்ல. நமது உணவின் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இதையொட்டி, 2025 ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் வெற்றி பெறும் என நல்லசாமி தெரிவித்தார்.