தயாநிதி மாறன்: முதல்ல முறையாக சாலையை சரி பண்ணுங்க..! அப்புறம் சுங்க வரி வாங்குங்க..!

மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை தயாநிதி மாறன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையின் பரிதாப நிலையை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

இந்தப் பிரச்னையை நாங்கள் பலமுறை எழுப்பியும் எந்த முன்னேற்றமும் இல்லை. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்காப் பணிகளாலும், மிக சோமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

ஆகையால் சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலையை முறையாக சாலையை சரி செய்யவும் அல்லது அதை சரிசெய்யும் வரை சுங்கச்சாவடி வசூலிப்பதை நிறுத்தவும் என பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்: மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, மறுக்கப்பட்ட கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரம் இதையெல்லாம் போராடிப் பெற்ற இயக்கம், திராவிட இயக்கம்! பிற்படுத்தப்பட்ட மக்கள் – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் – ஆதிதிராவிட மக்கள் குறிப்பாக, அருந்ததியின மக்கள்- சிறுபான்மையின மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதியின் ஒளிவிளக்காகத் திகழும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி!

ஆனால், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பா.ஜ.க.வுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி! இந்தியா விடுதலை பெற்றபோது, பல நாடுகள் என்ன சொன்னார்கள்? ”பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு, அமைதியாக இருக்காது – பெற்ற சுதந்திரத்தை இவர்கள் ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்” என்று பல நாடுகள் கூறினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான்!

மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்! அதனால்தான் சொல்கிறோம். மோடி ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து! ஜனநாயகத்திற்கு ஆபத்து! ஒட்டுமொத்த நாட்டிற்கே பேராபத்து! ஏன் என்றால், பத்தாண்டுகாலமாக பா.ஜ.க. ஆட்சியைப் பார்த்துவிட்டோம்!

நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது! பெட்ரோல் – டீசல், கேஸ் – சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது! எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி வீழ்ந்துடுச்சு! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது! மோடி மறுபடியும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்! நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்! கலவரம் செய்வது என்பது பா.ஜ.க.வின் D.N.A.-விலேயே ஊறியது.

நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க.வினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள்! இதுதான் பா.ஜ.க. மக்களை மதிக்கும் இலட்சணம்! இதுதான் பா.ஜ.க பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு! மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பா.ஜ.கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு! என மு.க.ஸ்டாலின் பேசினார்.

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 15-வது வார்டு உறுப்பினரை தவிர மற்ற 14 வார்டு உறுப்பினர்களும் தி.மு.க.வில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். சென்னிமலை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கடந்த 26-7-2023 அன்று இரு சக்கர வாகன நிறுத்துமிடம் குறித்த ஏலத்திற்கு அங்கீகாரம் செய்து கொடுக்கப்பட்டது.

அந்த அங்கீகாரத்துக்கு இதுவரை பேரூராட்சி செயல் அலுவலர் சம்பந்தப்பட்ட குத்தகைதாரருக்கு உத்தரவு நகல் தரவில்லை எனக்கூறி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

`கவுன்சிலரிடம் மாமூல் கேட்ட நகராட்சி கமிஷனர்…!?’

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் இருக்கின்றன. இவற்றில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு கவுன்சிலர்; மீதமுள்ள 16 கவுன்சிலர்கள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். தி.மு.க-வைச் சேர்ந்த திருமூர்த்தி தலைவராகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்தி துணைத் தலைவராகவும் இருக்கின்றனர்.

திருவேற்காடு நகராட்சி கமிஷனராக, ஜஹாங்கீர் பாஷா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டார். அன்றிலிருந்தே கமிஷனருக்கும், பெரும்பாலான கவுன்சிலர்களுக்குமிடையே அடிக்கடி முட்டல் மோதல்கள்தான். அதன் உச்சமாக, `பெண் கவுன்சிலரின் கணவரிடம் கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா மாமூல் கேட்டார்; வழக்கறிஞரை ஒருமையில் பேசினார்’ என்பது போன்ற தகவல்களும் வீடியோவும் வெளியாகி, நகராட்சி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது!

நகராட்சியின் 2-வது வார்டு கவுன்சிலர் ஆஷாவின் தந்தையும், முன்னாள் கவுன்சிலருமான ஆசீர்வாதம் இது குறித்துப் பேசுகையில், “நான் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில், மக்கள் பிரநிதிகளிடம் அதிகாரிகள் மரியாதையாக நடந்துகொள்வார்கள். தற்போது, கமிஷனராக வந்திருக்கும் ஜஹாங்கீர் பாஷா, கவுன்சிலர்கள் தொடங்கி மனு கொடுக்க வரும் பொதுமக்கள் வரை அனைவரையும் அவமரியாதையாக நடத்தி, அலைக்கழிக்கிறார். டி.டி.எஸ் நகரில் சாலை பிரச்னை குறித்து கமிஷனரிடம் பேசினேன். என்னிடமும் அவமரியாதையாக நடந்துகொண்டார்.

நகராட்சிக் கூட்டத்திலும் ஒரு சில கவுன்சிலர்களைத் தவிர மற்றவர்கள் பேசுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க கவுன்சிலர் உள்ளிட்ட சிலருடன் கமிஷனருக்குத் தகராறு ஏற்பட்டு, பிரச்னை காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது” என்றார் ஆசீர்வாதம்.

காவல் நிலையத்தில் புகாரளித்தவர்களில் சரவணனிடம் பேசுகையில் “திருவேற்காடு, சுந்தரசோழபுரத்தில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் இடம் தொடர்பாக நகராட்சித் தரப்பிலிருந்து நோட்டீஸ் வந்திருந்தது. அதைப் பற்றி விசாரிக்க மாணிக்கமும் நானும் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்றோம். மணிக்கணக்கில் காத்திருந்த பிறகே கமிஷனர் வந்தார்.

மாணிக்கத்தையும் என்னையும் கமிஷனர் அலுவலக ஊழியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். இதனால் எனக்கும் கமிஷனருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘நீ வெளியே போ, நீ பெரிய வெங்காயமா…’ என்று என்னைத் திட்டினார். அதை வீடியோவாகப் பதிவுசெய்த நான், திருவேற்காடு காவல் நிலையத்தில் கமிஷனர், வீடியோ எடுத்த ஊழியர்கள் ஆகியோர்மீது புகாரளித்தேன். மறுநாள், கமிஷனர் தரப்பில் அரசு ஊழியரைப் பணிபுரிய விடாமல் தடுத்ததாக எங்கள்மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

தி.மு.க கவுன்சிலர் நளினியின் கணவர் குரு பேசுகையில், “நகராட்சியில் குப்பை அள்ளும் பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறேன். அதற்கான பில்லை பாஸ் செய்யாமல் கமிஷனர் இழுத்தடித்து வந்தார். அது குறித்துக் கேட்டபோது, ஓப்பனாகவே என்னிடம் மாமூல் கேட்டார். கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் கமிஷனர்மீது எந்தவித நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை. அவரின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் விரோதமானவையாகவே இருக்கின்றன” என தெரிவித்தார்.