வானதி சீனிவாசன்: திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சி பயணிக்கிறது..!

இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது என கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 15-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகே இந்தியா சுதந்திரம் அடைந்ததாக RSS தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பது தேசத் துரோகம். ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என கூறியிருக்கிறார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் மாநிலத்தில் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்ட சோமநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கான முயற்சிகளை செய்தவர் அன்றைய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல். சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்பட்டதன் மூலம், இந்தியாவின் கவுரவம் மீட்டெடுக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரம் முழுமை அடைந்தது.

அதுபோலதான் அன்னிய மத படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் பெயரில் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இடத்தை, 500 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு சட்டப்படி மீட்டு, அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. 500 ஆண்டு காலம் கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைதான் RSS தலைவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அது ராகுல் காந்திக்கு வலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி, மற்றொரு கட்சியை எதிர்ப்பது, விமர்சிப்பது இயல்பானது. அதுதான் அரசியல். ஆனால், இந்திய அரசை எதிர்க்கிறோம் என, 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட குடும்பத்திலிருந்து ஒருவர் கூறுகிறார் என்றால் அதுதான் தேசத் துரோகம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது என ராகுல் காந்தி திரும்ப திரும்ப கூறி வருகிறார். நெருக்கடி நிலையை கொண்டு வந்து அரசியலமைப்பையே முடக்கிய தனது பாட்டி இந்திரா காந்தி பெயரில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு, அரசியலமைப்புக்கு ஆபத்து என ராகுல் காந்தி பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர். மறுபுறம், அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து ஆபத்து என வெற்று கூச்சலிடுகிறார்கள். இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுக்கும் திமுகவின் தேச விரோதப் பாதையில் காங்கிரஸ் கட்சியும் பயணிக்க தொடங்கி விட்டது என்பதையே ராகுல் காந்தியின் பேச்சு காட்டுகிறது. காங்கிரஸ், திமுக-விற்கு மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்” என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான்: அமைச்சர் மீது சேறு வீசியதற்காக காட்டும் வேகம் ..! குடிநீடில் மலம் கலந்தவர்கள் மீது ஏன் காட்டவில்லை..!?

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கை வயலில் குடிநீடில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப் புனிதரா? மகளுக்கும் ஆயிரம் – அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்து தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற திமுக அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது வேங்கை வயலில் மக்கள் குடிக்க பயன்படுத்திய குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா? ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மைச் செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீதா ஜீவன்: அதிமுக – பாஜக கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல்…!

அதிமுக – பாஜக கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல். இதைத்தான் கள்ளக் கூட்டணி என்கிறார்கள் தமிழக மக்கள்.என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன அதிமுகவும் பாஜகவும்.

திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் அளிக்கும் அபரிமிதமான ஆதரவு கண்டு வயிறெரியும் பாஜக – அதிமுக கள்ளக் கூட்டணி ‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனக் கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரத்தை நடத்தி வந்த நிலையில் அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும் மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம்தான் ‘யார் அந்த சார்?’ என்பது வெட்டவெளிச்சமானது. அதிமுகவை அடியொற்றி, அதன் கள்ளக் கூட்டாளி பாஜகவும் அடுத்து பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது. பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.எஸ்.ஷா கைதாகி இருக்கிறார்.

அதிமுகவின் வட்ட செயலாளர் சுதாகரும் பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தி போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம். இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ‘அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?

‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என வானத்துக்கும் பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதி காக்கிறார்கள். மதுரையில் நின்று கண்ணகியைப் போலச் சிலம்பு ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்ட குஷ்பு, பாஜகவின் எம்.எஸ்.ஷா கைதுக்கு என்ன செய்ய போகிறார்? கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பாஜக பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?

திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ்.ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? எம்.எஸ்.ஷா பின்னால் இருப்பவர் எந்த சார் எனக் கேட்டு பழனிசாமி போஸ்டர் அடிப்பாரா? தனது கள்ளக் கூட்டாளி பாஜகவின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா கோழை பழனிசாமி? கள்ள கூட்டணிக்காக பழனிசாமி நடத்தும் கள்ள மவுனமா இது?

10 வயது குழந்தையை பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்படும் போது பாஜக அமைதி காத்தது. பாஜக நிர்வாகி 15 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு கைதாகும் போது அதிமுக அமைதி காக்கிறது. இவ்வளவுதான் அதிமுக – பாஜக கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல். இதைத்தான் கள்ளக் கூட்டணி என்கிறார்கள் தமிழக மக்கள்.

திமுக அரசாங்கம் ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்த பிறகும் பிரச்சினை பெரிதாகிவிடாதா, அதில் குளிர்காய முடியாதா என ஏங்குவதுதான் இவர்களின் அரசியலாக இருக்கிறதே தவிர பெண்களின் பாதுகாப்பு குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற கொடூர குற்றவாளிகளை ஒடுக்கத்தான் தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கியுள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது.

பாலியல் குற்றவாளிகளை, அதிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் கொடூர மனநிலைக் கொண்டவர்களைத் தனது கட்சியின் பொறுப்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பெண்கள் மீது கொஞ்சம் கூட கவலையில்லை. அப்படி கவலை இருந்தால் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணியினர் என்பதால் மூடி மறைக்கின்றனர். இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். அதனால் இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது” என கீதா ஜீவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பழனிசாமி காட்டமான பேச்சு: 2026 திமுகவை வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும்..!

“2026-ம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்,” என்று சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த பொங்கல் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இந்த பொங்கல் விழாவில் நானும் ஒரு விவசாயியாக பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2026-ஆம் ஆண்டு தைத்திருநாள் தீய சக்தி திமுக வேரோடு அழிக்கும் ஆண்டாக இருக்கும். அதற்கு 2025-ஆம் ஆண்டு முன்னோட்டமாக இருக்கும்.

விவசாயிகளின் துன்பத்தை அறிந்தவன் என்பதால் அதை உணர்ந்து அவர்களுக்கு வேண்டிய ஏராளமான திட்டங்களை தந்தோம். அதன் காரணமாக அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் மத்திய அரசின் க்ரிஷ் கர்மான் விருதை பெற்றோம். கவர்ச்சிகரமான வாக்குறுதி கொடுத்து, கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த திமுக கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்காக எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களது குடும்பத்தினருக்கு தான் நன்மை கிடைத்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் பிரம்மாண்டமான கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம். அதனால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் திறக்காத திமுக அரசு என இன்றைய தினம் நான் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்துக்காக நேற்றைய தினம் திறந்து உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் கலப்பின பசுக்கள் உருவாக்கும்போது அது அதிகப்படியான பால் கொடுக்கும். அதிக எடை கொண்ட கலப்பின ஆடுகள், கோழிகள், பன்றிகள் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கும் போது விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். கிராம பொருளாதாரம் மேம்படைந்தால், நகரம் மேம்படையும். நகரத்துக்கும் கிராமத்துக்கும் பாலமாக அதிமுக அரசு இருந்தது.

24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம். அதை திமுக அரசு முடக்கிவிட்டது. குடிமராமத்து திட்டம் மூலம் ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கினோம். அதன் மூலம் விளைச்சல் அதிகரித்தது. எங்கெங்கு தடுப்பணை தேவையோ அங்கெல்லாம் தடுப்பணைகள் கட்டிக் கொடுத்து தண்ணீரை சேமித்தோம்.

கிராமத்தில் அதிகப்படியான அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக 7.5% உள்ள இட ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதன் காரணமாக 3,160 பேர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் தான் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் விலை இல்லாமல் வழங்கினோம். அனைத்தையும் முடக்கியது திமுக அரசு.

இப்போதுள்ள மகிழ்ச்சியோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை மகிழ்ச்சியோடு அமர்த்த வேண்டும். அதற்காக விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும்,” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்

தமிழிசை சவுந்தரராஜன்: திமுகவினர் முதுகில் குத்துபவர்கள்…! தேர்தலில் பாஜகவுடன் போட்டியிடும் தகுதி திமுகவுக்கு இல்லை…!

பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது இல்லத்தில், பொங்கல் விழாவைக் கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பொங்கல் பரிசோடு சாமானிய மக்களுக்கு பொங்கல் விழா ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்துடன் ஆரம்பித்து இருக்கிறது. கடந்த ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்போது ஒரு ரூபாய் கூட கொடுக்க முன்வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணித்திருக்கிறது. அந்தவகையில், திமுகவை அனைத்து கட்சிகளும் புறக்கணிக்கிறது.மேலும் தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து அமர்ந்து பேசி மாநில பிரச்சினைகளை பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

தெலங்கானாவில், சந்திர சேகரராவ் முதலமைச்சராக இருந்த போது, பிரதமர் வந்தால் வரவேற்க வரமாட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை போல, மத்திய அரசின் திட்டங்களையும் சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார். பல்வேறு ஆலோசனை, ஆய்வுக்கு பிறகு தான் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வருகிறது. எனவே, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்து திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக டெபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பாஜகவின் போட்டியை ஏற்றுக்கொள்ளும் தகுதி திமுகவுக்கு இல்லை.

திமுகவில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. திமுகவினர் முதுகில் குத்துபவர்கள். பெரியார் சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பாஜக தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கீதா ஜீவன் கேள்வி: தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?

கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா? என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன அதிமுகவும் பாஜகவும். திராவிட மாடல் ஆட்சிக்கு பெண்கள் அளிக்கும் அபரிமிதமான ஆதரவு கண்டு வயிறெரியும் பாஜக – அதிமுக கள்ளக் கூட்டணி ‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ எனக் கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரத்தை நடத்தி வந்த நிலையில் அவர்களின் லட்சணம், சென்னை அண்ணா நகரிலும் மதுரையிலும் அவலட்சணமாக அம்பலப்பட்டு இருக்கிறது.

சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம்தான் ‘யார் அந்த சார்?’ என்பது வெட்டவெளிச்சமானது. அதிமுகவை அடியொற்றி, அதன் கள்ளக் கூட்டாளி பாஜகவும் அடுத்து பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது. பாஜகவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷா நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் எம்.எஸ்.ஷா கைதாகி இருக்கிறார்.

அதிமுகவின் வட்ட செயலாளர் சுதாகரும் பாஜக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் எம்.எஸ்.ஷாவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தி போக்சோ குற்றவாளிகளாக இருப்பது பேரவலம். இத்தகைய பாலியல் குற்றவாளிகளின் கூடாரத்தை வைத்துக் கொண்டுதான், ‘அரசியல் கோமாளி’ அண்ணாமலை நடத்திய சவுக்கடி நாடகத்தை எண்ணி, இப்போது நாட்டு மக்கள் காறி உமிழ்கிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்துவிட்டாரா?

‘தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என வானத்துக்கும் பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதி காக்கிறார்கள். மதுரையில் நின்று கண்ணகியைப் போலச் சிலம்பு ஏந்தி அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்ட குஷ்பு, பாஜகவின் எம்.எஸ்.ஷா கைதுக்கு என்ன செய்ய போகிறார்? கண்ணகி நீதி கேட்ட மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பாஜக பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?

திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எஸ்.ஷா பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? எம்.எஸ்.ஷா பின்னால் இருப்பவர் எந்த சார் எனக் கேட்டு பழனிசாமி போஸ்டர் அடிப்பாரா? தனது கள்ளக் கூட்டாளி பாஜகவின் பாலியல் குற்றம் என்றதும் ஓடி ஒளிந்து விட்டாரா கோழை பழனிசாமி? கள்ள கூட்டணிக்காக பழனிசாமி நடத்தும் கள்ள மவுனமா இது?

10 வயது குழந்தையை பாலியல் சீண்டல் செய்த விவகாரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்படும் போது பாஜக அமைதி காத்தது. பாஜக நிர்வாகி 15 வயது பெண் குழந்தையை பாலியல் தொல்லைக்கு கைதாகும் போது அதிமுக அமைதி காக்கிறது. இவ்வளவுதான் அதிமுக – பாஜக கூட்டணியின் சில்லறைத்தனமான அரசியல். இதைத்தான் கள்ளக் கூட்டணி என்கிறார்கள் தமிழக மக்கள்.

திமுக அரசாங்கம் ஒருவனை கைது செய்து சிறையில் அடைத்த பிறகும் பிரச்சினை பெரிதாகிவிடாதா, அதில் குளிர்காய முடியாதா என ஏங்குவதுதான் இவர்களின் அரசியலாக இருக்கிறதே தவிர பெண்களின் பாதுகாப்பு குறித்தெல்லாம் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற கொடூர குற்றவாளிகளை ஒடுக்கத்தான் தமிழக முதல்வர் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கியுள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது.

பாலியல் குற்றவாளிகளை, அதிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்தும் கொடூர மனநிலைக் கொண்டவர்களைத் தனது கட்சியின் பொறுப்பாளர்களாக வைத்துக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பெண்கள் மீது கொஞ்சம் கூட கவலையில்லை. அப்படி கவலை இருந்தால் யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கூட்டணியினர் என்பதால் மூடி மறைக்கின்றனர். இப்படி தங்களுடைய அசிங்கமான அரசியலை எல்லாம் மூடி மறைக்கத்தான் கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். அதனால் இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது” என கீதா ஜீவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வைகோ காட்டம்: தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க சீமான் முயற்சி..!

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

தந்தை பெரியாரைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிர்வினையாக கட்சி வேறுபாடு இல்லாமல் தமிழகத்தில் போராட்டங்களும், நீதிமன்றங்களில் முறையீடு செய்வதும் நடந்து வருகின்றன.

சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தப் பிரச்சினையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அது தொடர்பான அறிக்கையை ஜனவரி 20 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக்கிளை, மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது இடத்தில் அமைதியை குலைத்தல், கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல் முதலான பிரிவுகளில் சீமான் மீது 60-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை எதனைப் பற்றியும் சிறிதும் பொருட்படுத்தாமல், அகம்பாவத்துடன் மேலும் மேலும் சீமான் உளறி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற குற்றம் சுமத்துவதற்கான முதல்கட்ட முயற்சியே இது. தமிழ்நாடு அரசு, இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றி, விசாரித்து, உரிய தண்டனையை உடனடியாக அளிக்க வேண்டும். நாகரிக அரசியலை விரும்புகிற அனைவரும் இத்தகைய ‘தீய சக்திகளுக்கு’ தக்க பாடம் புகட்டிட தொடர்ந்து அணிதிரள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு: பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்..!

தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும், என்பது உள்ளிட்ட 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக சட்டப் பேரவையில் தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 3 நாட்களில் மொத்தம் 25 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 10 உறுப்பினர்கள் 112 திருத்தங்களை வழங்கி இருக்கிறார்கள். இந்த அரசுக்கு உதவுகிறவகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

தங்களுடைய தொகுதிக்கான கோரிக்கைகளையும் முன்வைத்து இருக்கிறார்கள். அவை அனைத்தும் அமைச்சர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, அதில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும், என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முன்னதாக, 4 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு, முன்விடுதலை கிடைக்காதவகையில தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.

மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன. இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும்வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புர சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும். இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டு இருக்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும் புதியதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும், என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம்..! ஜெ. ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி..!

பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம் என மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா நினைவு தினத்தை யொட்டி பழனிசாமி உறுதி மொழிகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த உறுதிமொழியில், “தீயசக்தியை விரட்டியடிக்க, குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட கழகத்தை நிறுவிய நம் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அயராது உழைப்போம். கழகம் காக்க, கர்ஜிக்கும் சிங்கமெனத் திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் திமுக ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பிட, விண்ணை முட்டும் வீரர்களின், ஆர்ப்பரிப்பைப் பாரீர். பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதலமைச்சர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம்.

குடும்ப ஆட்சியில் தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மருமகன் அதிகாரம் செலுத்தும், போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம். மக்கள் விரோத திமுக ஆட்சியிலே, குடிநீர் கட்டண உயர்வு; கழிவு நீர் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப் பதிவில் வழிகாட்டி மதிப்பு உயர்வு, பேருந்து கட்டண மறைமுக உயர்வு, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும், ஈரமில்லாத, இரக்கமில்லாத தந்திர மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்.

திமுக ஆட்சியிலே, தொடர் கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுப் போச்சு! கள்ளச் சாராய மரணங்களால், ஏழை, எளிய மக்களின் குடும்பமே நிர்கதியாய் ஆச்சு. எங்கும் கஞ்சா போதைகளால், தமிழ் நாடே தத்தளித்துப் போச்சு. விடியா திமுக ஆட்சி தேவையா? என்று மக்கள் மனதில் எண்ணம் வந்திருக்கு. மக்கள் விரோத திமுக அரசை, வீட்டுக்கு அனுப்பும் வரை ஒயமாட்டோம்.

திமுக ஆட்சியில், குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை, தொடர் குற்றங்கள், இந்த ஆட்சியில் தொடர்கிறது. இங்கு தமிழகத்தில் ஆட்சி இருக்கிறதா ? இல்லையா? என்கிற கேள்வியை மக்கள் எழுப்பி வருகிறார்கள். தமிழ் நாட்டை, குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாற்றியிருக்கும் திமுக அரசே ராஜினாமா செய்.

அதிமுக ஆட்சியிலே சிறப்பான திட்டங்கள் மக்களுக்கு செழிப்பான திட்டங்கள் ஏழைகள் பசியாற, அம்மா உணவகங்கள் ஏழைகள் நலம் பெறவே, அம்மா மருந்தகங்கள் மாணவர்கள் பயன்பெறவே, மடிக் கணினி திட்டங்கள் தாலிக்குத் தங்கம் என்று, தாய்க்குலம் புகழும் திட்டங்கள் இத்திட்டங்களை நிறுத்திவிட்டால், ஜெயலலிதாவின் புகழை, மறைத்துவிடாலம் என்று தீய சக்தியாளர்கள் நினைக்கின்றார்கள். அவர்களின் கொட்டத்தை அடக்கிடுவோம்.

ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார்! கல்விக் கடன் ரத்தென்றார். விலைவாசி குறையும் என்றார். பொய் முதல்வர் செய்தாரா?. இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம் என்று உறுதி ஏற்கிறோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் களத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் நின்று, வென்று காட்டுவோம். தமிழகத்தில் கழக ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம்” என அந்த உறுதி மொழி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட “ஐ அம் சாரி ஐயப்பா..” பாடல் திமுக ஆட்சியில் பூதாகரமானது எப்படி..!?

அதிமுக ஆட்சியில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு “ஐ அம் சாரி ஐயப்பா..” என்ற பாடல் இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் மாட்டுக்கறி விஷயம் பெரிதான போது நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழுவில் ஏ அந்த கறி.. இந்த கறி.. எந்த கறிய துன்னா உனக்கென்னா… நீ யாரா வேணா இருடா எனக்கென்னா.? “பெரிய கறி” என்ற பாடலை பாடியதன் மூலம் வடசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கானா பாடகி இசைவாணி பெரிய அளவில் பிரபலமானார்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட சமூகத்தில் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் பொருட்டு நீலம் பண்பாட்டு மையம் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவாகி ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது.

“2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த சமயம், கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போது, ஐ அம் சாரி ஐயப்பா என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா…? நான் தாடிக்காரன் பேபி.. இப்ப காலம் மாறிப்போச்சு.. இனி தள்ளி வைத்தால் தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.. என்ற வரிகள் அதில் இருக்கிறது.

பொதுவாக ஐயப்பன் கோவிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில் இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் பாடல் பாடி இருக்கிறார் என்று இவர் மீது பலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் இந்த கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவானது.

சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.

இந்நிலையில், கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு,  ஐ அம் சாரி ஐயப்பா என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கூறுகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாக பாடல் பாடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. அதாவது, அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட பாடல் இன்று திமுக ஆட்சியில் பூதாகரமாக பரப்பப்பட்டு நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.