பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார் . வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த தேர்தலை சந்தித்ததோ அதே கூட்டணி தொடர்கிறது.
மறுப்பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த திமுக கூட்டணியை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்படுகின்றது. இதையடுத்து, திமுக கூட்டணியை வீழ்த்த விஜய் அக்கூட்டணியில் இணைவார் என தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் பதிலளித்தார். அப்போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா எனக் கேள்வி செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு, கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் எனவும் CTR. நிர்மல் குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. தவெக தலைவர் விஜய்தான். பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது. திமுகவுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.