ஸ்டாலினுக்கு சவால் விட்ட சீமான்: கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா? களத்தில் பார்த்துடலாமா?

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகன என்பதை 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது.

இது குறித்து தருமபுரியில் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, நான் சென்னையில் இல்லை என்பது காவல்துறைக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா?

பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று காவல்துறையினர் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள். இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம்.

கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது? ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாலே நான் குற்றவாளி ஆகிவிடுவேனா. அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா?

234 தொகுதிகளிலும் 2026 -ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8-ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா என சீமான் தெரிவித்தார்.

சீமான் சவால் “நாதகவை தாண்டி தமிழகத்தில்இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்…!”

“தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்!” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்,  ஆற்காடு அடுத்த திமிரி தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பு மறுசீராய்வு மற்றும் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, மத்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் நாம் வரி செலுத்துகிறோம். ஆனாலும் நமக்கு போதிய நிதியை அவர்கள் அளிக்கவில்லை என்று திமுக ஆட்சியாளர்கள் புலம்புகின்றனர். இதற்கு ஏன் அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம். பிஹார் மாநிலத்தால் பெற முடிகிறது. உங்களால் முடியவில்லையா? நாதக ஒரு ஜனநாயக கட்சி. இதில், பொறுப்பாளர்கள் கொள்கை, கோட்பாடுக்கு உடன்பட்டு வருகிறார்கள். பின்னர், முரண்பாடு காரணமாக வெளியேறுகிறார்கள். இது கட்சி பிரச்சினை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம். மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்ற கட்சிகளை விடுங்கள். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள், பார்ப்போம்.

பாஜகவுடன் சேர்ந்து என் மொழியை அழித்தற்கு, திராவிட கட்சிகளுக்கும் பெறும் பங்கு உண்டு. பெரியார் குறித்து நான் அவதூறாக பேசவில்லை. அவர் பேசியதை எடுத்து பேசுகிறேன். அவரை பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் என் வீட்டின் மீது குண்டு போடுகிறார்கள். பேச ஆரம்பித்தால் என்னவாகும்? நான் இருக்கும்போது போடுங்கள், பார்ப்போம்.

2026-ம் ஆண்டு தேர்தல் பணிகளை ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். அதுகுறித்த விவரங்களை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம். தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், அதை மக்கள் சொல்லவில்லை. இவர்கள் மக்கள் ஆட்சியை துளியும் செய்யவில்லை. கட்சி, தேர்தல் அரசியல் செய்கிறார்கள். செயல், சேவை ஆட்சியை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை” என சீமான் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலினுக்கு அலிசா அப்துல்லா சவால்..!

என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும். திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத காரணத்தால் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.

நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். என்னுடைய ரேஸிங் துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால். நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன். நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர். அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை. என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள்.

நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?” என அலிஷா அப்துல்லா எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் சவால்: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்..!

அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. உ.பி. கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து அறிக்கையேதும் வெளியிடப்படவில்லை.

காசியில் தமிழக வீரர்கள் காசியில் தமிழக வீரர்கள் சிக்கி வரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தமிழகம் திரும்ப போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்ணாமலை சவால்: தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி என சொல்லட்டும் பார்ப்போம் ..!!

தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி கெட் அவுட் மோடி என சொல்லட்டுமே! உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார். மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீயசக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். கள்ளை குடித்த குரங்கு திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால் ஒரு பானையில் இருந்த கள்ளை குரங்கு குடித்து விடுகிறது. இதனால் தடுமாடிக் கொண்டிருந்த போது அதனை தேள் கொட்டி விடுகிறது. கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்துவிட்டால் அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் திமுக ஆட்சி இருக்கிறது.

தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதுவரையில் எந்த மேடையிலும் நான் யாரையும் அவமரியாதையாக பேசியதே இல்லை. ஆங்கிலத்தில் பேசிய மோடி 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக வென்று ஆட்சி அமைத்தால் பஞ்சம் பிழைப்பதற்காக நாம் எல்லாரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பிரதமர் மோடி இந்தியை எங்கே திணிக்கிறார், தமிழகத்திற்கு அவர் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.

விஜய் வித்யாஸ்ரம் பள்ளி உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு மூன்று மொழிகளை படிக்க வையுங்கள் என்பதைத்தான் மோடி சொல்கிறார். அவர் இந்தியை திணிக்கவில்லை. அன்பில் மகன் பிரெஞ்ச் படிக்கிறார். நடிகர் விஜய், படூரில் சொந்தமாக விஜய் வித்யாஸ்ரம் நடத்தி வருகிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.

போஸ் வெங்கட் சவால்: அண்ணா அறிவாலயத்தின் சுவரை சும்மா தொட்டுதான் பாருங்க..!

சென்னை திருவான்மியூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஒரு மனிதனுக்கு எப்போது வாய்க்கொழுப்பு அதிகரிக்கிறதோ, அப்போதே அழிவு ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். இன்னொரு கட்சியில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வாராம். உங்கள் கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க, உங்களுக்குப் பிறகு உதயநிதி, இன்பநிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க.

பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026-ல் சிறைக்குச் செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என அண்ணாமலை பேசியிருந்தார்.

இந்த அண்ணாமலையின் பேச்சுக்கு நடிகர் போஸ் வெங்கட் தமது எக்ஸ் பக்கத்தில், அறிவாலய சுவர் வெறும் செங்கலால் எழுப்பப்பட்டது அல்ல.. அது ஒவ்வொரு ஏழை தி. மு. க தொண்டனின் குருதி,நம்பிக்கை. நாளைய தலைமுறையின் அறிவுக்கூடம்.. வாருங்களேன் தோழர் அண்ணாமலை… /சும்மா தொட்டுத்தான் பாருங்களேன்.. / என நடிகர் போஸ் வெங்கட் எக்ஸ் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார்.

கஸ்தூரி திடீர் சவால்: இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன்…!

சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தம்மை தெலுங்கு மக்களிடம் இருந்து பிரிக்க நினைப்பவர்களுக்கு பதிலடியாக ஆந்திரா அரசியலில் தாம் குதிக்கப் போவதாக நடிகை கஸ்தூரி சொடக்குப் போட்டு ஆவேசமாக பேசினார்.

பிராமணர்களை வந்தேரிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள்தான். என்னை தெலுங்கு பேசும் மக்கள் மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடி ஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கோரி நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசுகையில், நான் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்து 4 வருஷம் ஆகுது.. இங்க சினிமாவை விடுங்க.. தொலைக்காட்சிகளில் நடுவர் ஆக கூட எனக்கு வாய்ப்பு தரக் கூடாது என மேலிடத்தில் இருந்து பிரஷர் தருவதாக சொல்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க..

அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க என்றார். மேலும் ஜம்மு காஷ்மீர் போல தமிழ்நாட்டில் பிராமணர்கள் இனப்படுகொலை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என கஸ்தூரி பேசியிருந்தார்.

இந்நிலையில் இவருடைய பேச்சுக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அது போல் பாஜக அமர் பிரசாத் ரெட்டியும், நடிகை கஸ்தூரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்லும் திக, திமுக, திமுகவுடன் வெட்கமே இல்லாமல் சேர்ந்திருக்கும் கட்சிகளைத்தான் அப்படி சொன்னேன். தெலுங்கு மொழி பேசும் மக்களை அப்படி நான் சொல்லவே இல்லை. நான் பேசியதை திரித்து எனக்கு எதிராக தெலுங்கு மக்களை திருப்பிவிட முயற்சிக்கின்றனர் என்றார்.

மேலும் இன்று முதல் நான் தெலுங்கானா சாரி.. ஆந்திரா பாலிட்டிக்ஸிலும் குதிக்கிறேன். நான் தமிழக பாலிட்டிக்ஸில் இன்னும் அறிவிக்கவில்லை. அதுக்கு முன்னாடி நான் ஆந்திரா பாலிட்டிக்ஸில் குதிக்கிறேன். என்னை ஏன் தெலுங்கு மக்கள் கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்தீங்கதானே.. ரொம்ப தேங்க்ஸ். வாய்ப்புக்கு நன்றி எனகஸ்தூரி தெரிவித்தார்.