அஸ்வத்தாமன் காட்டம்: அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருகிறது..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

அஸ்வத்தாமன்: எல்.முருகன் சட்டம் பயின்றவர்..! திருமாவளவன் மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றவர்..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக முதற்கட்டமாக காஞ்சீபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சீபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் நெறிவழி காட்டும் மையம், முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், ஆவின், தாட்கோ, மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் ஆதார் அட்டை அரங்குகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு திட்ட விளக்கவுரை வழங்கப்பட்டது. மேலும் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டாக்டர்கள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்த முகாமில் மொத்தம் 139 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும், 12 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட அட்டையும் வழங்கப்பட்டு, 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஆதார் அட்டையும் பதிவு செய்யப்பட்டது.

போலி ஆவணம் மூலம் ரூ.3 கோடி சொத்து அபகரித்த 2 பேர் கைது..!

சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் பி.எஸ்.கே.தெருவை சேர்ந்த லட்சுமி பாய் மற்றும் அவரது சகோதரி பத்மா பாய் ஆகியோர் புகார் ஒன்று அளித்தனர். அதில், எங்களுக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காக்ஸ் தெருவில் தலா 1083 சதுரடி கொண்ட இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை கலைச்செல்வி மற்றும் சுசீலா ஆகியோர் போலி ஆவணம் மூலம் அபகரித்து விட்டனர். எனவே அவர்களிடம் இருந்து எங்கள் வீட்டை மீட்டு தர வேண்டும் என்று புகார் அளித்தனர்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகேஸ்வரி குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், கலைச்செல்வி, சுசீலா மற்றும் அன்பு ஆகியோர் தங்களது பெயரில் போலியாக ஆவணங்கள் உருவாக்கி மோசடி செய்து ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகளை அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கொரோனா காலகட்டத்தில் கிருமி நாசினி வாங்கியதில் முறைகேடு: மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு!

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் மகேஸ்வரி, இதற்கு முன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றிய இவர் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி கடந்த 2020 முதல் 2021 வரை அதாவது கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக் பணிபுரிந்து வந்தார். அப்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில், முறைகேடு நடந்ததாகக் கூறி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்தினர்.

இதில், லைசால் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து 22.06.23 காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மகேஸ்வரி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த மூன்று மாதமாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், 23.06.23 காலை திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரியின் வீட்டில், டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூரில் உள்ள மகேஸ்வரியின் வீடு. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்கள் வீடு என மொத்தம் 5 இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.