ஓ. பன்னீர்செல்வம்: தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை வீதிகளுக்கேற்ப குறையுங்கள்..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையில், தமிழ்நாட்டில் வாழும் பொதுமக்கள் ஏற்கெனவே பல வரிகளால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கிள்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது பங்கிற்கு சுங்கக் கட்டணத்தை 01-09-2024 முதல் உயர்த்த இருப்பதாக வந்துள்ள செய்தி போதிச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, சுங்கக் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் போவையில் கொண்டு வரப்பட்ட ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு அவர்கள், 2008 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்பதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 15 அங்கச்சாவடிகள் தான் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இந்த விதியை மீறி பெரும்பாலான சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன என்றும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூன்றாண்டுகள் கழிந்தும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கவோ, சுங்கக் கட்டணத்தை குறைக்கவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, இன்று தமிழ்நாட்டில் 64 சுங்கச் சாவடிகள் இயங்கிக் கொண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் கட்டணமும் ஆண்டுக்காண்டு உயர்ந்த கொண்டே செய்கிறது. சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுவதன் நோக்கமே சாலை அமைப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்வதற்காகத்தான். இந்த இலக்கை எட்டிய பின், சாலை பராமரிப்புச் செலவிற்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இதன்படி பார்த்தால், கட்டணத்தை குறைப்பதுதான் முறையானது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்காண்டு உயர்த்துவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த ஆண்டைப் பொறுந்தவனாபில், மக்களவை தேர்தலுக்குப் பின் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 01-09-2024 முதல் தமிழ்நாட்டில் உள்ள 17 சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதாகவும், இதன் விளைவாக 150 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு, சுற்றுலாப் பயணிகள் செல்லும் வாகனங்களின் கட்டண உயர்வுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், சரக்கு லாரிகளின் கட்டண உயர்வுக்கும் வழிவகுத்து அதன்மூலம் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவும் வழிவகுக்கும். மேலும், ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணமும் உயரக்கூடும். சுங்கக் கட்டண உயர்வு என்பது ஒன்றுக்கொன்று பின்னிப் பினைணந்தது.

ஏழையெளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01-09-2024 முதல் உயர்த்தப்பட உள்ள சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சுங்கக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யவும், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை வீதிகளுக்கேற்ப குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பலாப்பழ சின்னத்திற்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு..!

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிந்தது. இந்நிலையில், சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை ஒரு தரப்பினர், ‘‘தேர்தலில் ஓபிஎஸ்சின் பலாப்பழம் சின்னத்திற்கு ஏன் ஓட்டு போடவில்லை’’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அவர்கள், தெருவிற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்ட சிலரை ஓட, ஓட விரட்டி வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வெள்ளத்தாய், செல்வி, சிவமுருகன், மணிகண்டன், இருளையா, முகேஷ் கண்ணன் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காயமடைந்தவர்களின் உறவினர்கள் கடுகுசந்தைசத்திரம் வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

J. P. Nadda: ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த மக்களுக்காக குரல் கொடுக்கு தலைவர்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா பரமக்குடியில் 3 கி.மீ. ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது, ரோடு ஷோ வில் பேசிய ஜகத் பிரகாஷ் நட்டா, ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவருக்கு மக்கள் ஆதரவு நல்க வேண்டும். மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அனுப்ப நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்பது தெரிகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க முடியும். ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் கொடுக்கக் கூடிய ஆட்சியாக மோடி அரசு உள்ளது. ஏழைகளுக்கு வீடு, மருத்துவக் காப்பீடு உள்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ரேசன் கடைகளில் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும் பருப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார் என ஜகத் பிரகாஷ் நட்டாதெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்: அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல..! அவரது தந்தையே வந்தாலும் முடியாது…!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது தந்தையே வந்தாலும் முடியாது. நாங்கள் பதிலடி கொடுத்தால் அண்ணாமலை தாங்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் உள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

லேகியம் விற்பவர் போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருக்கிறார். கவுன்சிலர் பதவி கூட அண்ணாமலை ஜெயிக்கவில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தான் பக்குவம் வரும். இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் இல்லை,என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் காட்டம்: எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரிகம் இல்லாமல் கீழ்தரமாக வி.கே. சசிகலாவை விமர்த்தார்..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்டங்கள் தோறும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடத்தி மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். அந்த வகையில் மதுரை தெப்பக்குளத்தில் மதுரை மாவட்ட தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு மாநகர மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்க புறநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன், எம்எல்ஏ ஐய்யப்பன் முன்னிலை வகித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவை எம்ஜிஆர் 1972-ம் ஆண்டு உருவாக்கியபோது பல சட்ட விதிகளை உருவாக்கினார். அதில் ஒரே ஒரு விதியை மட்டும் காலத்துக்கும் மாற்றமுடியாத வகையில் உருவாக்கினார். அது என்னவென்றால், தொண்டர்கள் மூலமாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், கே.பழனிசாமி சர்வாதிகாரி போல் எம்ஜிஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய எந்த காலத்திலும் மாற்றமுடியாத சட்டவிதியை காலில் போட்டு மிதித்து மாறிவிட்டார்.

ஆனால், அவரால் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது. தொண்டர்களுக்கு அவர் செய்த துரோகத்துக்காக அவரை அதிமுகவில் இருந்து மட்டுமில்லாது அரசியலில் இருந்தே ஓட ஓட விரட்டியடிப்பேன். ஜெயலலிதா என்னை இரண்டு முறை முதலமைச்சராக நியமித்தார். நானும், எப்படி அந்த பொறுப்பை கொடுத்தாரோ அப்படி அவரது காலில் விழுந்து ஆசீ பெற்று மீண்டும் ஒப்படைத்துவிட்டேன்.

அதுபோல், வி.கே. சசிகலா, கே.பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால், இவர் திருப்பி கொடுத்தாரா? அது கூட பரவாயில்லை. அரசியல் நாகரிகம் இல்லாமல் கீழ்தரமாக வி.கே. சசிகலாவை விமர்ச்சிக்கிறார். அவரை கட்சியில் சேர்க்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என கூறுகிறார்.

கே.பழனிசாமி பல தியாகங்களை செய்தாக கூறுகிறார். முதலமைச்சர் ஆகுவதற்கு முன் இவரை யாருக்காவது தெரியுமா? ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் கே.பழனிசாமியிடம் இணைந்தேன். அவரை கடந்த சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததுதான் நான் செய்த பாவம். இவரது தலைமையில் 8 முறை அதிமுக தேர்தலை சந்தித்துள்ளது. ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து வருவதால் தற்போது மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 5 பேர் கொண்ட குழு அமைத்துள்ளார்.

ஆனால், ஒரு கட்சி கூட அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. ஜெயலலிதா இருந்தபோது தேசிய தலைவர்கள் அவரது வீட்டுக்கு கூட்டணிக்காக தவம் கிடந்தார்கள். ஆனால், அப்படியிருந்த கட்சியின் கம்பீரத்தை கே.பழனிசாமி கபளீகரம் செய்து மதிப்பில்லாத கட்சியாக்கி வருகிறார். ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டனாக இருந்தபடியால் 12 ஆண்டுகள் அதிமுகவின் பொருளாளராக அவர் எனக்கு பொறுப்பு வழங்கினார்.

கே.பழனிசாமியின் தவறான வழிகாட்டுதல், குளறுபடிகளால் அதிமுகவை பல பிரிவுகளாக பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை அழிக்கப்பார்க்கிறார். தோல்விகளுக்கு பொறுப்பேற்று கே.பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் தொண்டர்கள் உங்களை தூக்கி எறிவார்கள். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை” என ஓபிஎஸ் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பான பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் !

2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இந்த இரு கட்சிகளும் கூட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் பாஜக உடன் கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டார்கள். அதேநேரம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தாங்கள் இன்னும் பாஜக கூட்டணியில் தான் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “இந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப் போகிறார். தேர்தலுக்கு முன்பு என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. மக்கள் தீர்ப்பு என்ன என்பது தேர்தலில் தெரியும். அதிமுக கொடி, சின்னத்தை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. தொண்டர்கள் பயன்படுத்துக கூடாது என்ற உத்தரவு எங்கும் இல்லை. எங்கள் தொண்டர்களின் வேகமும் உணர்வும் எப்படி இருக்கிறது என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும். எனக்குள் ஓடுவது அதிமுக ரத்தம்.. இந்த ரத்தத்தை மாற்றத் தீர்ப்பு அளிக்க முடியுமா..?

தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு, “இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை அது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அது தற்காலிக தீர்ப்பு மட்டுமே. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருப்பதால் எங்களால் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியும். அந்த உரிமையின் அடிப்படையில் கேட்போம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் தருவார்கள். மேலும், இந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் தனி சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று நமட்டு சிரிப்புடன் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு..!

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகளாக உடைந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த சட்டப்போராட்டங்கள் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று, அதிமுகவை தற்போது தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட சில மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், வருகிற மே மாதம் நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவை கழட்டி விட்டுவிட்டு, அதிமுக தனியாக நிற்கப் போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனால் டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்துள்ளாார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. கடந்த முறை தமிழகம் வந்த நரேந்திர மோடி ஓபிஎஸ்சை சந்திக்க நேரம் ஒதுக்காத இன்று பிற்பகல் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கிய சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறையில்..!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 26-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி வரை மாவட்டங்கள் வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனது சுற்றுப்பயணத்தை நேற்று கோயம்புத்தூரிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். கோவை மாவட்டம் கோயம்புத்தூரில் தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கழகத்தின் பொருளாளராக 12 ஆண்டுகள் இருந்தவன் நான். எங்களை கழகத்தில் இருந்து வன்முறையாக வெளியேற்றிவிட்டனர். வி.கே. சசிகலா உங்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தார்கள். அவர்களை நீங்கள் என்ன வார்த்தையில் பேசினீர்கள்?. 11 எம்.எல்.ஏ ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போயிருக்கும். நான் ஆதரவு கொடுத்ததால் ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட்டது. தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன். ஆனால் அதிகார போதை, பணத் திமிரில் எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அதனால் ஆட்சி போனது.

அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோற்றுப்போனதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக வர இருத்தை தடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தனிக்கட்சி துவங்கும் நோக்கமில்லை. கோரப் பிடியில் இருந்து அதிமுகவை கைப்பற்றி மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாவிடம் ஒப்படைத்தால்தான் நன்றியாக இருக்கும்.

முதலமைச்சர் பதவி மூன்று முறை கொடுத்தார்கள். நான் திருப்பி கொடுத்துவிட்டேன். என்னை யாரும் துரோகி என்று சொல்ல முடியாது. நாங்கள் செய்த குற்றம் என்ன? இன்னமும் கட்சி தொண்டர்களின் உரிமைக்காக பாடுபட்டு வருகின்றேன். ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் என தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு வார்னிங் தந்த ஓபிஎஸ் அணி.. !

அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி எதுவும் தெரியாத அண்ணாமலை, தேவையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான புகழேந்தியும், மருது அழகுராஜூம் அண்ணாமலையை வார்த்தைகளால் வெளுத்து எடுத்துள்ளனர். இதற்கு மூல காரணம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் முதலமைச்சர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டதே காரணமாகும்.

இதனிடையே இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் புகழேந்தி, அண்ணாமலை இனியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்றார். அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி கோர்ட் கூண்டில் அவர் நிற்க வேண்டிய சூழல் வரும் எனவும் புகழேந்தி எச்சரித்தார். மேலும் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்று தெரியாமல் ”நீ பேசக்கூடாது” என அண்ணாமலையை புகழேந்தி சாடினார். அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது தான் உண்மை என்றும் அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

டிடிவி தினகரன்: இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை..!, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை…!

1996-ம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது முதலே டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை ‘சேர்மன்’ என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர், முதலமைச்சர் என அடுத்தடுத்து பெரிய பதவிகளை அலங்கரித்த பிறகும் கூட பழைய பாசத்தோடு சேர்மன் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல நட்பு உண்டு. எனினும், ஜெயலலிதா – சசிகலா குடும்பத்தினர் இடையே சில ஆண்டுகள் இருந்து வந்த பிணக்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மேற்கொண்ட தர்ம யுத்தம் ஆகியவை காரணமாக பல ஆண்டுகளாகவே இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தனித்து இயங்கி வருகிறார்.

அப்போது முதல், டிடிவி தினகரனை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறி வந்தார். தினகரனும் அவ்வாறே கூறினாலும், பல மாதங்களாக அதற்கான சூழல் அமையவில்லை. அண்மையில் தான் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர். 2024 தேர்தலைக் குறிவைத்து, அதிமுக கூட்டணியில் இணையும் முடிவில் தினகரன் இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் உடன் பரஸ்பர நல்லுறவைக் கடைபிடித்து வருகிறார். இந்த நட்பு பாலத்திற்கு ஃபெவிகால் போடும் வகையிலேயே இன்று தேனியில் ஓபிஎஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ஓபிஎஸ் உடன் ஒரே மேடையில் பங்கேற்றுப் பேசினார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அதே இடத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு: டி.டி.வி.தினகரன் 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது, முதல் அறிமுகக் கூட்ட​ம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அத​ன் பிறகு அதே பங்களாமேடு பகுதியில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்துள்ள நெஞ்சம் நிறைந்த அருமை அண்ணன் நாமெல்லாம் இதய பூர்வமாக மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கும் டிடிவி தினகரன் சார் இங்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

மேலும், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும். இதுகுறித்து தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய தண்டனையை கோடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும், கொலையாளிகளுக்கும் பெற்றுத்தர வேண்டும்.” என்றார்.

டிடிவி தினகரன் பேசுகையில், “அருமை நண்பர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கின்றனர். இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். ஓபிஎஸ்ஸும் நானும் பதவிக்காக இணையவில்லை. நாங்கள் இணைந்தது இயற்கையாக நடந்திருக்கிறது. துரோகிகள் அபகரித்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட சின்னத்தை மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” எனப் பேசினார்.