Rahul Gandhi: வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பரப்புங்கள், திமிராக இருக்காதீர்கள் பணிவுடன் இருங்கள்..!

4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ஆர்எஸ்எஸ், பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு இந்தியாவில் பாஜக தலைவர்கள் மத்தயில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வாஷிங்டனின் விர்ஜினியாவின் புறநகரான ஹெர்ன்டனில் இந்தியர்களுடனும், ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய ராகுல் காந்தி, இந்தியாவில் பிரதமர் மோடி பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, நிறைய பணம் செலவழித்து, அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி உருவாக்கி வைத்திருந்த அந்த பயம், மக்களவை தேர்தல் முடிவு வெளியான அடுத்த நிமிடமே மறைந்து போனது. 56 இன்ச் மார்பு, கடவுளிடம் நேரடியாக பேசுபவன் என்கிற பேச்சுக்கள் எல்லாம் போயே போய்விட்டன. அதெல்லாம் இப்போது காணாமல் போய் வரலாறாகி விட்டன.

இதோடு, பாஜகவின் கூட்டணியும் இப்போது இரண்டாக உடைந்து விட்டது. இனிவரும் தேர்தல்களில் அவரும் திணறப் போவதை நீங்கள் பார்ப்பீர்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். அவர்கள் 246 சீட்களை பெற்றதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். இதில் நிறைய பணம் விளையாடியிருக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படியே செயல்பட்டது. மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்யவசதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு, வேறு தேர்தல் தேதி வடிவமைக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்ட நிலையில் தேர்தலை எதிர்கொண்ட போதிலும், மோடியின் அடிப்படை சித்தாந்தங்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிரசாரத்தின் பாதியிலேயே தங்களால் 300, 400 சீட்களை எட்ட முடியாது என்பதை மோடி உணர்ந்து விட்டார். அதனால் தான் உளவியல் ரீதியாக குழம்பிப் போன அவர் கடவுளிடம் நேரடியாக பேசுபவன், நான் விசேஷமானவன் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். இப்போதும் நாடாளுமன்றத்தில் உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

தன்னை கடவுளுக்கு நிகரானவன் என்று சொல்லியும் கூட மக்கள் அவரை ஏற்காததால் விரக்தி அடைந்துள்ளார். பாஜகவால் இந்தியாவை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாகத்தான் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு, நம்பிக்கை, பாரம்பரியம், மொழி, உணவு எல்லாம் இருக்கின்றன. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஆனால், இதை பாஜகவால் ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் விட நாக்பூர் தலைமையகம் தான் பெரிது என எண்ணுகிறார்கள். வெறுப்பை பரப்பாதீர்கள், அன்பை பரப்புங்கள், திமிராக இருக்காதீர்கள் பணிவுடன் இருங்கள், மக்களை, பாரம்பரியத்தை, மொழி, மதத்தை அவமதிக்காதீர்கள், அனைவரும் மதித்திடுங்கள் என்கிறோம் நாங்கள் என ராகுல் காந்தி பேசினார்.

Gaurav Bhatia: இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி கரும்புள்ளி..!

‘இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி’ என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜக, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உதவியுடன், நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 2024-ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளைத் தங்களின் மாபெரும் வெற்றியாகக் காட்டி வருகிறது.

இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதை தேர்தல்களின் போது கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது என ராகுல் காந்தி கூறினார். “நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்புச் சட்டம். நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பாஜக தாக்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Gaurav Bhatia: சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சி..!

‘சீனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜக, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உதவியுடன், நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 2024-ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளைத் தங்களின் மாபெரும் வெற்றியாகக் காட்டி வருகிறது.

இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதை தேர்தல்களின் போது கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது என ராகுல் காந்தி கூறினார். “நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்புச் சட்டம். நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பாஜக தாக்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜெயக்குமார்: அட்டைக் கத்தி பாரதி கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது..!

வாய் வீச்சு, அட்டைக் கத்தி பாரதி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். பாரதி, முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு, தான் ஒரு வக்கீலுக்குப் படித்தவர் என்பதையும் மறந்து, நாலாந்தரப் பேர்வழியாக, தான் இன்னும் திமுக-வில் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது உணர்த்தும் விதமாக கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுக்கையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ் நாட்டிற்கு சாதித்தது என்ன? முழு விவரங்களை வெளியிட வலியுறுத்திய கழகப் பொதுச் செயலாளருக்கு முதலமைச்சரோ, தொழில் துறை அமைச்சரோ பதிலளிக்க திராணியில்லாமல், முந்திரிக்கொட்டை போல் திமுக-வில் தனது இருப்பை காட்டத் துடிக்கும் அட்டைக் கத்தி ஆர்.எஸ். பாரதி-யை அறிக்கை விடவைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

வாய் வீச்சு, அட்டைக் கத்தி பாரதி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். பாரதி, முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு, தான் ஒரு வக்கீலுக்குப் படித்தவர் என்பதையும் மறந்து, நாலாந்தரப் பேர்வழியாக, தான் இன்னும் திமுக-வில் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது உணர்த்தும் விதமாக கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது.

வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் முதலமைச்சர் ஆகியுள்ள மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டியும், டைட்டானிக் கப்பல் பட ஹீரோ போல் இரு கைகளையும் நீட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி, சுய விளம்பரம் தேடுவதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அதாவது 24.3.2022 முதல் 28.3.2022 வரை துபாய்; 23.5.2023 முதல் 31.5.2023 வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான்; 29.12024 முதல் 7.2.2024 வரை ஸ்பெயின் சுற்றுப் பயணம் செய்தும் தற்போது 4-ஆவது முறையாக மேற்கொண்டிருக்கும் அமெரிக்கா சுற்றுப் பயணம், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையும் குறிப்பிட்டு, முதலமைச்சரின் சுற்றுப் பயணத்தால் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், வேலை வாய்ப்புகள் பற்றி விளக்குமாறும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறும் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டியின்போது திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சர் உடல் நிலையை பரிசோதிப்பதற்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக பொதுமக்களிடத்தில் பரவலாக பேச்சுக்கள் வெளியாவதை சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவதாக ஆந்திரப் பிரதேசம், மூன்றாவதாக குஜராத், நான்காவதாக ராஜஸ்தான், ஐந்தாவது மாநிலமாக திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளன. தமிழகம் இப்பட்டியலில் இடம் பெற்றதாகவே தெரியவில்லை.

10 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், இந்தியாவின் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு தற்போது இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இதை நேரடியாக ஏற்கவோ, மறுக்கவோ வேண்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், திமுக-வில் தான் இருக்கிறேன் என்ற போர்வையில், நேரடியாக பதில் அளிக்க வக்கற்ற பாரதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டுவதை பார்க்கவில்லையா என்று எங்கள் கழகப் பொதுச் செயலாளரைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களுக்கு கண்கள் இரண்டும் தெளிவாக இருப்பதால் தான், அமெரிக்காவிலும் மோட்டார் வைத்த சைக்கிளில் மிதிப்பது போன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடிப்பதைப் பார்த்து விமர்சனங்கள் எழுந்துள்ளதை பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஆர்.எஸ். பாரதி அங்கம் வகிக்கும் கட்சியின் தற்போதைய தலைமைக்கு துதிபாடும் கூட்டத்தைப் போன்ற ‘கருத்துக் குருடர்கள் நாங்கள் அல்ல.

தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராகத் திகழும் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எகத்தாளமாக ‘குருடர் என்று சொன்னதன் மூலம் பார்வையற்ற சமுதாயத்தையே இழிவுபடுத்தியுள்ளார், பித்தம் தலைக்கேறிப் போயுள்ள மதி கெட்ட பாரதி’.

ஆர்.எஸ்.பாரதி முதலில் தனது கண் பார்வையை பரிசோதித்து, முதலமைச்சரின் நான்கு வெளிநாட்டுப் பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு பெற்றுள்ள உண்மையான முதலீட்டைப் பட்டியலிட உங்கள் பொம்மை முதலமைச்சரையோ அல்லது தொழில் துறை அமைச்சரையோ நீங்கள் கேட்டு, உண்மை நிலையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்துகிறேன். பொம்மை முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்.

நீங்கள், எங்களது கழகப் பொதுச் செயலாளரின் கண் பார்வையை மேற்கோள் காட்டி, மாற்றுத் திறனாளிகளை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது. பேசுவதையும் பேசிவிட்டு வாய்மூடி மவுனியாக இருந்து சமாளித்துவிடலாம் என்ற இருமாப்போடு இருந்தால் தக்க பாடம் புகட்டப்படும் என்று எச்சரிக்கிறேன்” என ஜெயக்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர் மாநாட்டில் 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தம்..!

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிகும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ நகரை 28-ஆம் தேதி சென்றடைந்தார்.

மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான 6 நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதாவது, அங்கு கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரை கார்ப்பரேட் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் நம்பர் 1 குறைக்கடத்தி மற்றும் காட்சி உபகரணங்கள் நிறுவனமான அப்ளைடு மெட்டீரியல்ஸ். உலகளவில் 24 நாடுகளில் 150 நகரங்களில் செயல்பட்டு வரும் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது. இந்நிலையில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நோக்கியா நிறுவனமானது பின்னிஷ் பன்னாட்டு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் மின்னணு நிறுவனமாகும். இது ஒரு பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

அதன்படி முதலமைச்சரின் முன்னிலையில் நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.450 கோடி முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க பன்னாட்டு நிதி தொழில்நுட்ப நிறுவனமான பேபால் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை ஆதரிக்கும் பெரும்பாலான நாடுகளில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு உதவுகிறது. காசோலைகள் மற்றும் பண ஆணைகள் போன்ற பாரம்பரிய காகித முறைகளுக்கு மின்னணு மாற்றாக இது செயல்படுகிறது. அதேபோல், இந்த நிறுவனம் சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

அந்தவகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் செயல்முறை உபகரணங்களை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். மேம்பட்ட பேக்கேஜிங், ஐஓடி, லைஃப் சயின்ஸ், ஏஆர்.விஆர், எம்இஎம்எஸ், பவர் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தைகளில் தொழில்நுட்பத் தலைவர்களுக்கு புதுமைகளை வழங்கும் மேற்பரப்பு மற்றும் பொருட்களை மேம்படுத்தும் அமைப்புகள் அதாவது வெப்ப செயலாக்கம், ஈரச் செயலாக்கம், பிளாஸ்மா சுத்தம் செய்தல் மற்றும் பூச்சு போன்றவற்றை வழங்குகின்றன. இந்நிறுவனம் கோயம்புத்தூரில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது.

ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றான அரிசோனாவின் சாண்ட்லர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசிப் நிறுவனம். ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையரான மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனம். இது பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு 5G, EV, IOT, தரவு மையங்கள் போன்ற ஸ்மார்ட், இணைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான கட்டுப்பாட்டான தீர்வுகளின் முன்னணி குறைக்கடத்தி சப்ளையர்.

இந்த நிறுவனம் கடந்த 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் ஐ.சி வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு, பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.250 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் ஒரு முன்னோடி சுகாதார தொழில்நுட்ப நிறுவனம்.தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்க கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.50 கோடி முதலீட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு மற்றும் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, நோக்கியா நிறுவனத்தின் சார்பில் தலைமை உத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர் நிஷாந்த் பத்ரா, நிலையான நெட்வொர்க் வணிக குழு தலைவர் சாண்டி மோட்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அமெரிக்காவில் மு.க.ஸ்டாலின் உரை: இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

இந்நிலையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வரும் உலக மூதலிட்டாளர் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20% தமிழ்நாட்டில் உள்ளது. இந்தியாவின் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45% பேர் தமிழ்நாட்டினர்.

மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும். சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்களை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும், சென்னையடுத்த சிறுச்சேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.450 கோடி நோக்கிய நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Donald Trump: கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் நாட்டின் மோசமான அதிபராக இருப்பார்..!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 5-அம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நிலையில், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் குறித்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நியூஜெர்சியில் கூறுகையில், ‘அவர் மீது எனக்கு மரியாதை இல்லை. அவரது திறமையின் மீதும் எனக்கும் திருப்தியில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டின் மோசமான அதிபராக இருப்பார் என்று நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் குறித்து தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். அவர் மீது எனக்கு மிகவும் கோபம் உள்ளது. நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? ஒட்டுமொத்த நீதித்துறையும் எனக்கு எதிரான ஆயுதமாக தவறாக பயன்படுத்தினர். எனவே தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவதில் தவறில்லை. அதற்கு அவர் தகுதியானவர் தான். கமலா ஹாரிஸின் கொள்கை மிகவும் விசித்திரமானது’ என டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.