நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா மீது ரூ.6,986 கோடி தேர்தல் பத்திர நிதி ஊழல் குறித்து புகார்..!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ வழக்குகளை எதிர் கொள்ளும் 41 நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ. 2,471 கோடி நிதியினை அளித்துள்ளன. ரூ.1,698 கோடி தேர்தல் பத்திர நிதி அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமானவரித்துறையினரின் ரெய்டுகளுக்குப் பின் பாஜவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாஜவின் முறைகேடான தேர்தல் நிதிக்காக மத்திய அரசின் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இவர்களின் செயலானது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் கூட்டுச்சதி (120(பி)) மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் மட்டுமின்றி நாட்டின் மீது நிகழ்த்தப்பட்ட பொருளாதார பயங்கரவாதமாகும். எனவே, இவர்கள் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் … பாதயாத்திரையில் 2 நாட்கள் ஓய்வு.. !

2024 -ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‛என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் தற்போது யாத்திரை நடக்கும் நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு வரை இந்த பாதயாத்திரை தொடரும் நிலையில், இடையிடையே மற்ற பணிகளிலும், கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களிலும் அண்ணாமலை பங்கேற்பார். இத்தகைய சூழலில், மதுரையில் பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில் அண்ணாமலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் அழைப்பின் பேரில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு டெல்லி கிளம்புவதாக கூறப்பட்டது.

மதுரையில் பாதயாத்திரை தொடங்கிய பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், “நாங்கள் ஓ பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறோம்” என்றார். ஓ பன்னீர் செல்வம் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு அண்ணாமலை “யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது…. அரசியல் விஞ்ஞானியான செல்லூர் ராஜூவுக்கெல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்தி கொள்ள முடியாது” என தெரிவித்தது மட்டுமின்றி பாஜக தலைவர்கள் செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தனர்.

இதனால் அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த பின்னணியில் தான் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை டெல்லி செல்லவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் பாதயாத்திரையை முடித்துக்கொண்டு சென்னைக்கு அண்ணாமலை செல்கிறார். அடுத்த 2 நாட்களுக்கு அண்ணாமலை சென்னையில் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை கேள்வி: அமித்ஷா சொன்னதும் புரியாது…?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் இந்திய மக்களிடம் குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் என்றாவது ஒருநாள் இந்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், ‛‛எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் இந்திய மக்களிடம் குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் என்றாவது ஒருநாள் இந்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரையில் நேற்று இரவு யாத்திரையின்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “மு.க. ஸ்டாலினுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்றும் அவருக்கு புரியாது. கல்வியை தாய் மொழியில் வழங்க வேண்டும் என்றே அமித்ஷா தெரிவித்தார். திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து வருகிறது.

மு.க. ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மக்களிடம் பேச எந்த தகவலும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது தமிழின் பெருமையை பேசி வருகிறார். பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவரின் சிலையை வைக்க உள்ளார். எதிர்வரும் தேர்தலில் திமுக தோல்வி அடையும்.” என தெரிவித்தார்.

”பாஜக ஆட்டம் இன்னும் சில மாதங்கள் தான்..! கவுண்ட் டவுன் சொன்ன மு.க. ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது மூலமாக தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது சொன்னாரே, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.

பா.ஜ.க. தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம். புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பா.ஜ.க. பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான IRS அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம் – சமூக நீதி – மதச்சார்பின்மை – அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது. தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-விற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது.” என தெரிவித்தார்.

பாஜக வாரிசுகளை சொன்னால் 1 மணி நேரம் ஆகும்..! வேறு எதாவது புதிதாகச் சொல்லுங்கள்…!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் அமித் ஷா கருத்துக்கு பதிலடி கொடுத்தார். முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞராக இருந்த போது தொடங்கிய இளைஞர் அணி, இன்று இளைஞர் அணியின் செயலாளராக இப்போது உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆன பிறகு பல ஆயிரம் இளைஞர்களைக் கட்சியில் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் தான் இளைஞரணியில் புதிதாக மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையே திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இந்தாண்டு கருணாநிதி நூற்றாண்டு அனுசரிக்கப்படும் நிலையில், இதை முன்னிட்டு நடத்தப்படும் உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி பாசறை குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த இளைஞர் அணி கூட்டத்தில் முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் இறுதியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் அமித் ஷாவின் திமுக குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், “நமது எதிரிகள் எந்த ஆயுதங்களை எடுக்கிறார்களோ.. அதை ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இது திராவிட மாடல் ஆட்சி. 100 ஆண்டுகளுக்கு முன்பு, எதற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ.. அதைச் செயல்படுத்தும் ஆட்சி இது.. இதை இந்தியா முழுக்க எடுத்துச் செல்லவே இப்போது இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. இருப்பினும், இந்தக் கூட்டணியின் பெயரைக் கேட்டாலே சிலருக்குப் பதறுகிறது. பாட்னா, பெங்களூர் கூட்டங்களை வெற்றி பெற்றுள்ளதைப் பார்த்து பயம்.

இதைப் பார்த்து பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்தியப் பிரதேசம், அந்தமான் என எங்குச் சென்றாலும் திமுகவை விமர்சிக்கிறார். ஏதோ ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடைபெறுவதாகச் சொல்கிறார். உண்மையில் கோடிக்கணக்கான மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது. உரிமை தொகை, இல்லம் தேடி மருத்துவம், என ஏகப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல.. நேற்று அமித் ஷா இங்கு வந்து பேசியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா.. இனி பல மத்திய அமைச்சர்கள் வரிசையாகத் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அமித் ஷா என்ன மத்திய அரசின் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு வந்தாரா.. இல்லை ஏற்கனவே அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைக்க வந்தாரா.. அவர் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க வந்துள்ளார்.

அது பாத யாத்திரை இல்லை.. குஜராத்தில் 2002-ம் ஆண்டிலும், இப்போது மணிப்பூரில் நடந்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை தான் இது. உள் துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு என்ன செய்தார். அங்கே அமைதி யாத்திரை நடத்த முடியவில்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாதா என்ற எண்ணத்தில் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்கவே அமித் ஷா இங்கு வந்துள்ளார்.

நேற்று வந்து திமுக குடும்ப கட்சி என்கிறார். இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. வேறு எதாவது சொல்லுங்கள் என நானே கேட்கிறேன்.. எந்தவொரு பாஜக தலைவர்களின் வாரிசும் அரசியலில் இல்லை.. இருப்போர் அனைவரும் நாளையே விலகிவிடுவார்களா.. பதவியில் இருக்கும் பாஜக தலைவர்களின் வாரிசுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். எனவே, வேறு எதாவது புதிதாகச் சொல்லுங்கள்.

நாங்கள் இந்தியர்கள் இல்லையா? மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் மவுனம்

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூரின் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையேயான இம்மோதல் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோரை அகதிகளாக்கி இருக்கிறது. 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் மணிப்பூரில் நாள்தோறும் தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, வீடுகள் தீக்கிரை, ஆயுதங்கள் கொள்ளை, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம் மணிப்பூர் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இம்பாலில் நேற்று பெண் வர்த்தகர்கள் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தின் போது Huirem Binodini Devi என்ற சமூக ஆர்வலர் கூறியதாவது: 2 மாதங்களுக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடருகிறது. ஆனால் மணிப்பூர் மக்களுக்காக மத்தியில் ஆட்சி செய்யும் தலைவர்கள் ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை.

மத்தியில் ஆளும் அரசாங்கத்தின் இந்த மவுனம் எங்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா போன்ற தலைவர்கள் இப்படி கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவது நாங்கள் இந்தியர்களே இல்லை என்ற உணர்வை உருவாக்குகிறது. மணிப்பூர் மக்களும் இந்திய குடிமக்கள்தான். எங்களுடைய உணர்வுகளை மத்திய அரசு கேட்க வேண்டும். இந்தியாவுடன் இணைவதற்கு முன்னர் மணிப்பூர் மக்கள் வாழ்ந்த அமைதி நிலை எங்களுக்கு வேண்டும் என தெரிவித்தனர்.