வைஷ்ணவி: உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள்.. என்னை வரவேற்பதும் என்னை தேற்றுகிறது…!

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது என தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான வைஷ்ணவி. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாகவும், தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டுவதாகவும் கூறி திடீரென தவெகவில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக்கொள்வதாக கூறி கட்சியில் இருந்து வைஷ்ணவி விலகினார்.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் குடும்பங்கள் அரசியலுக்கு செல்லும்போது ஆதரவு கொடுப்பதில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடிய உரிய அங்கீகாரத்தை வழங்கக்கூடிய கட்சி எது பாஜக என தெரிந்து கொண்டு சேர வேண்டும். அப்படிப்பட்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி மக்கள் பணி செய்ய பாஜவில் இணைந்து செயலாற்றலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மதிமுகவின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மக்கள் பணி என்றால் அது மதிமுக மட்டுமே என்றும் தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இணைந்து பணியாற்றலாம் வாருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், வைஷ்ணவி எக்ஸ் பக்கத்தில், என்னைப் போன்ற இளம் பெண்களும் இளைஞர்களும் உங்களை போன்ற அனுபவம் மிக்கவர்களின் வழிகாட்டுதலோடு மக்கள் குரலாக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் என்னை வரவேற்பதும் எனக்கு ஆதரவு கொடுப்பதும் என்னை தேற்றுகிறது. நன்றி அண்ணா! என பதிவிட்டுள்ளார்.

நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய்…! தவெகவிலிருந்து விலகும் வைஷ்ணவி..!

நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ.. என்று சொல்லி நிராகரித்தார்கள்உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது.”மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள் அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என வெளிப்படையாகவே மிரட்டுகிறார்கள் என கூறி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த வைஷ்ணவி என்பவர் தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்தபோது ஏராளமான இளைஞர்கள் தவெகவில் சேர்ந்தவர்களில் ஒருவர்தான் வைஷ்ணவி. விஜய் கட்சி ஆரம்பித்தபோது அப்பகுதியில் தன்னை இணைத்தும் கொண்டார்.

இந்நிலையில் வைஷ்ணவி தவெகவிலிருந்துவிலகுவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்டுள்ள கடிதத்தில்,”என் மனதை கல்லாக்கிக்கொண்டு. இந்த கடிதத்தை எழுதுகிறேன். குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றே தான். இந்தச் சமூகத்தில் மாற்றம் ஒன்று மலறாதா என்றே எனது அரசியல் பயணத்தைத் தமிழக வெற்றிக் கழகத்தில் தொடங்கினேன்.

ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து, கடந்த “மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்”. என் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து. கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுகிறார்கள். சிறுவயதில் இருந்து நான் சிறுகச் சிறுக சேமித்த ரூ.5 லட்சம் பணத்தை மக்களுக்காகவும், குழந்தைகளுக்காவும் பல நலத்திட்ட உதவிகள் செய்து வந்தேன்.

ஆனால் கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும் உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கக்கூட எனக்கு அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன். மாநில அளவில் கட்சிக்காக உழைக்கும் எனக்கு பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் நிராகரித்து, சென்னைக்குச் சென்று பொதுச் செயலாளரை சந்திக்கக் கூடாது.

மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் வரக்கூடாது. பொதுச் செயலாளரை சந்திக்க மேடை ஏறினால் “மனிதச் சங்கிலியால் நுழையவிடாமல் கீழே தள்ளிவிட்டது”. மாவட்ட நிர்வாகிகளை மீறி கட்சியின் வளர்ச்சி குறித்து ஊடகங்களில் நேர்க்காணல் கொடுக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் நீங்கள் பேசக்கூடாது. போஸ்ட் போடக்கூடாது. “உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது.”மாவட்ட நிர்வாகிகளைத் தாண்டி நீங்கள் வேகமா வளர்கிறீர்கள் அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு, கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன்.

இருப்பினும் எனக்கு எந்த பதவியும் வேண்டாம். கட்சியின் வளர்சிக்காக என்னை சுதந்திரமாக மக்களைச் சந்திக்க விடுங்கள் என்று மட்டும் தான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அதற்கும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. “ஏன் என்னை நிராகரிக்கிறீர்கள்”, “நான் என்ன தவறு செய்தேன் என கண்ணீர் மல்க கேட்டபோது எனக்கு கிடைத்த பதில், “நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ.. என்று சொல்லி நிராகரித்தார்கள்.

ஒரு பெண் சமூக பிரச்சனையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் “நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்குபடுவது அனைவரும் அறிந்ததே. என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை. என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன்”. கட்சிக்கு உண்மையாக என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொண்டர்களுக்கும் நன்றிகள்” என வைஷ்ணவி வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி..! விஜய், சீமானிடம் அதிமுக பேரம்..!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் தமக்கு துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக பேரம் பேசியது; இதனையே தவெக தலைவர் விஜய்யிடமும் அதிமுக பேரம் பேசி இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் திலளித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

இதனையே விஜய்க்கு முன்னர் என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையமால் பிரிந்து இருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி போல பேரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை. 2006-ஆம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சி மாற்றம்- ஆள் மாற்றத்துக்கானவர்கள் அல்ல.. அடிப்படையையே மாற்றுகிறவர்கள். கட்டிடத்துக்கு வெள்ளை அடிப்பவன் அல்ல.. அந்த கட்டிடத்தையே இடித்துவிட்டு புதியதாக கட்டுகிறவன் நான். இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாநில தன்னாட்சி பேசுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ்; எதிர்த்து போராடியது தமிழ்நாடு. இந்தி மொழியை திணித்தவனுடன் கூட்டணி வைத்தது திராவிட கட்சிகள்; மாநில உரிமைகளை பறித்த போது ஆட்சியில் இருந்தவர்களும் இவர்கள்தான். இந்த கட்சிகள்தான் இன்று தனித்த குணம், தன்னாட்சி என்று பேசுகின்ற்ன.

டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம். ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என சீமான் தெரிவித்தார்.

டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு தவெக தலைவர் விஜய் கலாய்த்த திண்டுக்கல் லியோனி

டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடைல ஹா, ஹுனு கத்திக்கிட்டு இருக்கு என தவெக தலைவர் விஜய்யை திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சனம் செய்தார். சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நன்றியுரை ஆற்றிய விஜய் திமுக ஆட்சியை, தமிழக முதலமைச்சரை, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்துப் பேசினார். இந்த விஜய்யின் விமர்சனங்களுக்கு பாஜக மற்றும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், திருசெங்கோட்டில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72 – வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் K. S. மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாலர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது, டம்மி துப்பாக்கி, அட்டகத்தி, அரசியல் மக்கு ஒன்னு மேடைல ஹா, ஹுனு கத்திக்கிட்டு இருக்கு. காலைல நாய் ஒன்னு சூரியன் பின்னாடி இருக்கிறது.

தெரியாம நின்று, தனது நிழல் பெருசா தெரியறத பார்த்து “ஆ நாமதான் பெரிய ஆள், 2026 -ஆம் ஆண்டு நாம்தான் என கத்திக்கிட்டு இருக்கு.நேரம் ஆக ஆக சூரியன் மேல வந்தா, அந்த நாயோட நிழல் கூட தெரியாது. சூரியன் பவரை காட்டினா நம்ம இருக்கிற இடம் தெரியாம போய்டுவோம் என திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பவர் ஸ்டார்: விஜய் கிட்ட எந்த தொகுதினு கேட்டு சொல்லுங்க.. அவரை எதிர்த்து போட்ட ரெடி!

அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் பதிலளித்தார். அப்போது,தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து நிற்பேன்.

ஜோசப் விஜய் அவர்களே.. நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். உங்களை கூடப்பிறந்த தம்பி மாதிரிதான் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். நாம இரண்டு பேரும் அரை மணி நேரம் தனியாக பேசினோம். அப்போ நீங்க சொன்னீங்க..எனக்கு உலமம் முழுவதும் ஃபேன்ஸ் இருக்காங்க.. ஆனால் எங்க வீட்டில் என் பையன் உங்களோட ஃபேன் என்று சந்தோஷப்பட்டீங்க.. நானும் ஹேப்பியா இருந்தேன்.

ரொம்ப அமைதியாக இருந்தவர் திடீர்னு பார்த்தால் மேடையில் பயங்கரமான டயலாக்.. வசனம் எல்லாம் பேசுகிறார். களத்திற்கு வாங்க.. அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். வீரபாண்டிய கட்ட பொம்மன் மாதிரி டயலாக் பேசுகிறார். கூட்டம் எனக்கு கூடத்தான் கூடுது.. கூட்டத்தை வச்சி எதையுமே கணிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க..

கட்சி ஆரம்பிக்கனும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தேன். கடைசியில் என்ன சூழ்நிலையோ தள்ளி போய்விட்டது. அதனால என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க.. கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டால் போவேன். இல்ல என்றால் சுயேட்சையாகவும் நிற்க தயார். திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சேருவேன்.

திமுகவை எதிரி என்று சொல்வது எல்லாம் டயலாக் சொல்வதுதான். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அவர் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்.கொள்கை என்ன அதை சொல்லாமல், நான் அவருக்கு எதிரி என்று சொல்லக் கூடாது. முதல்வரை பற்றி பேசுவதை பார்த்து வேதனைப்பட்டேன் இதெல்லாம் தப்பு.. அவர்கள் எல்லாம் 50 வருட அனுபவம் உள்ளவர்கள். அவர்களுடைய அனுபவம் இவருடைய வயது. அதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடையில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக பேசக் கூடாது.

என்னடா..ஒருநடிகராக இருந்து இப்படி எல்லாம் பேசலமா.. முதலில் அவர் நடிகர் டெக்னிஷியனுக்கு உதவி பண்ணட்டும். அதை விட்டுட்டு மக்களுக்கு அதை செய்கிறேன் என்று சொல்கிறார். களத்தில் இறங்கி அவர் வேலை பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையுமே கணிக்க முடியாது. அரசியல் வேறு, வாக்காளர்கள் வேறு.. எனக்கு விஜய்க்கு மேல கூட்டம் இருந்தது. விஜய் களத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

சரத்குமார் அறிவுரை: விஜய் நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும்..!

உலகம் போற்றுகின்ற ஒரு பாரத தலைவரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசிய விஜய்யின் பேச்சை கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆகவே, நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து நாகரிகமான அரசியலில் ஈடுபட வேண்டும் என சரத்குமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”புதிதாக திரு.விஜய் துவங்கியிருக்கின்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து பேசியது விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. பாரத பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக GST வருவாயை வாங்கிக்கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை,

இருமொழிக்கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துக்களை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை. உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறிவரும் நிலையில், விரைவில் 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கும் சூழலில், நமது தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிகரமான முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, சர்வதேச தலைவர்களும் வியந்து பாராட்டி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

இத்தகைய பெருமைக்குரிய பாரத பிரதமர் குறித்து எதிர்மறையாக பேசுவதற்கு முன்பாக எதை பேசினாலும், உண்மையை படித்துப்பார்த்து, தமிழ்நாட்டில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன, எதற்காக மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இருக்கிறது, வரிப்பங்கீடு ஏன் குறைகிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை அறிந்து, புரிந்து கொண்டு, ஆராய்ந்து தெளிவாக பேசியிருந்தால், அதுவும் பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

2004-14 காலகட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வரிப் பகிர்வு ரூ. 94,971 கோடியாக இருந்தது. ஆனால், 2014-24 வரையிலான காலகட்டத்தில் ரூ. 2,92,013 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது 207% அதிகமாகும். 2004-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் உதவி மற்றும் அரசின் மானியங்கள் மூலம் ரூ. 57,925 மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், 2014-24 காலகட்டத்தில் ரூ. 2,55,875 கோடி வழங்கப்பட்டது. இது 342% அதிகமாகும் என மத்திய நிதியமைச்சர் ஆதாரப்பூர்வமாக பேசியுள்ளதை அவர் படிக்கவில்லை என நினைக்கிறேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தலைமையிலான பாஜக ஆட்சியில் தங்க நாற்கரச்சாலை திட்டம் இந்தியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு முதன் முதல் காரணமாக அது அமைந்தது என்பதை நாம் அனைவரும் இன்று வரை உணர்வோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்று நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சி என்பதை நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.

அதுமட்டுமன்றி தமிழகத்தில் நெடுஞ்சாலை வசதிகள், சாலை போக்குவரத்து, இரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்பாடு, புதிய விமானநிலையங்கள் உருவாக்கம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, சிலிண்டர் மானியம், பிரதமரின் மருத்துவ காப்பீடு, மக்கள் மருந்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல கோடி கடனுதவித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன்வளர் பயிற்சி, கல்வி மேம்பாடு என எத்தனையோ திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பது மத்திய அரசு என்பதையும் நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.

ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்து கொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவர், உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆகவே, ஏற்கெனவே நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளை பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் ஈடுபடுவீர்கள் என நம்புகிறேன்.” என சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

சபாநாயகர் அப்பாவு: வருமான வரித்துறை விஜய்யின் மீது நடவடிக்கை எடுக்குமா..?

ரூ.220 கோடி வரி ஏய்ப்பு செய்யும் விஜய்யின் மீது மத்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்குமா..? என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களின் சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். அப்போது, “நம்ம தம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததில் எந்தவொரு தவறும இல்லை. அதை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கட்சியை ஆரம்பித்துள்ளார். ஆனால், அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறாரே புஸ்ஸி ஆனந்த். அவருக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா.. இருவருக்கும் இடையே எத்தனை ஆண்டு பழக்கம் இருக்கிறது என்பது தெரியுமா.. அப்படிப்பட்ட நபரைப் பொதுச்செயலாளராக வைத்திருக்கும் கட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்..

ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று புஸ்ஸி ஆனந்திற்கு போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் தான் அடுத்த முதல்வர் என்றால் என்ன செய்ய முடியும். 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே.

மத்திய வருமான வரித்துறை இதில் நடவடிக்கை எடுக்குமா..? அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். அப்படி பாஜக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்.. பாஜக சொல்லியே இவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர்களிடம் வேறு ஒரு திட்டமும் இருப்பதாகவே தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி: தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் அப்படி உசுப்பேத்த பேசியிருப்பார்..!

வரும் சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் ஏதேனும் பேசியிருப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் நீர்மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்திசிரிக்கிறது. இதுசம்பந்தமாக சட்டமன்றத்தில் பேச எதிர்கட்சிகளுக்கு அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர். ஊசிலம்பட்டியில் காவலர் அடித்து கொலை செய்த சம்பவம், சிவகங்கையில் பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்றத்தில் பேச முயன்றேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு எங்களை வெளியேற்றிவிட்டனர்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் தவெகவிற்கும், திமுகவிற்கும் நேரடி போட்டி என்பது அவரது சொந்த கருத்து. கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியின் வளர்ச்சிக்காக தொண்டர்களை உற்சாப்படுத்த அவ்வாறு பேசுவர். தமிழகத்தில் பிரதான எதிர்கட்சி அதிமுக என்பதை மக்களே ஏற்றுக் கொண்டுள்னர். செங்கோட்டையன் டில்லி பயணம் சென்றது குறித்து எனக்கு தெரியாது. தவெக தலைவர் அதிமுகவை விமர்சித்து பேசாததற்கு காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது, புதிய கட்சிகள் கூட பாராட்டும் விதமாக ஆட்சி செய்தனர். அதனால் தான் அதிமுகவை யாராலும் விமர்சிக்க முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சீமான்: திமுக அழிக்க வேண்டும் என்ற தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்..!

திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருச்சியில் இன்று செய்தியாளர்களின் கேளிவிக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்துவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன். திமுகவுடன் மோதி அந்த கட்சியை அழிக்க வேண்டும் என நினைக்கிற என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன்.

நான் ஆள் சேர்த்துக் கொண்டு சண்டக்குப் போகிறவன் அல்ல. பிரபாகரனை வீழ்த்த உலக நாடுகளின் படையை துணை தேடி சிங்களர் வந்தனர்; ஆனால் அத்தனை படையையும் எதிர்க்க எந்த நாட்டிடம் உதவி கோரவில்லை பிரபாகரன். அதே மரபில் என் எதிரியை நான் தனியாகவே சந்திப்பேன். ஒரு நாய், 4 நாய்களை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் சரி; ஆனால் ஒரு புலி, 10 புலிகளை சேர்த்துக் கொண்டு வேட்டைக்கு போனால் நன்றாக இருக்காது.

தனித்து நிற்பதற்குதான் வீரமும் துணிவும் தேவை. நாங்கள் வீரர்கள்; தனித்து நிற்கிறோம்; மோதுகிறோம். கொள்கையே இல்லாமல் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை; கூட்டணி வைத்தால்தான் வெல்ல முடியும் என்பது மரபா? சட்டமா? நாங்கள் யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டுதான் களத்துக்கு வந்தவர்கள்.

யாரை எதிர்க்கிறோம் என்பது தெரியாமல் அரிவாளை தூக்கிக் கொண்டு வீதியில் நின்று கொண்டு எவனை வெட்டலாம் என தேடவில்லை. யாரை வீழ்த்த வேண்டும் என்ற முடிவுடனேயே போருக்கு வந்துள்ளோம். அதனால் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அடுத்த 4 மாதங்களில் யார் யாருடன் கூட்டணி என்பது எல்லாம் தெரிந்துவிடும். பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ந் தேதி தமிழகம் வருவது மக்களை சந்திக்கதான்.. என்னை சந்திக்க அல்ல. நான் அவரை சந்திக்க போவதும் இல்லை என சீமான் தெரிவித்தார்.

சபாநாயகர் அப்பாவு கேள்வி: விஜய்க்கு ரூ.1000 கோடி வருமானம் வருது சரி.. விஜய் ரூ.220 கோடி வரி ஏய்ப்பு செய்கிறாரா..!?

ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்துப் பேசினார். நடிகர் விஜய் குறிப்பாக முதல்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மு.க. முதல்வர் ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் என்பது மக்கள் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த அரசியல் பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களின் சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். அப்போது, “நம்ம தம்பி விஜய் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர் கட்சி ஆரம்பித்ததில் எந்தவொரு தவறும இல்லை. அதை வரவேற்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

ஆனால், அவரது கட்சியில் பொதுச்செயலாளராக இருக்கிறாரே புஸ்ஸி ஆனந்த். அவருக்கும் அமித் ஷாவுக்கும் இருக்கும் தொடர்பு தெரியுமா.. இருவருக்கும் இடையே எத்தனை ஆண்டு பழக்கம் இருக்கிறது என்பது தெரியுமா.. அப்படிப்பட்ட நபரைப் பொதுச்செயலாளராக வைத்திருக்கும் கட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை நீங்களே சொல்லுங்கள்..

ஏற்கனவே வருங்கால முதல்வர் என்று புஸ்ஸி ஆனந்திற்கு போஸ்டர் அடித்துள்ளனர். இதுதான் பாஜகவின் மறைமுக திட்டம். விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் தான் அடுத்த முதல்வர் என்றால் என்ன செய்ய முடியும். 1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். ரூ.1000 கோடிக்கு வெறும் ரூ.80 கோடி தானே வருமான வரி கட்டி இருக்கிறீர்கள். அப்போ மீதி ரூ.220 கோடி வருமான வரி கட்ட வேண்டும் தானே.

மத்திய வருமான வரித்துறை இதில் நடவடிக்கை எடுக்குமா..? அப்படி எடுத்தால் தான் விஜய் தானாகக் கட்சி ஆரம்பித்துள்ளார்.. பாஜக சொல்லி கட்சியை ஆரம்பிக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள். அப்படி பாஜக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால்.. பாஜக சொல்லியே இவர் கட்சியை ஆரம்பித்துள்ளார். அவர்களிடம் வேறு ஒரு திட்டமும் இருப்பதாகவே தெரிகிறது” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.