Prakash Raj: மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் விலைவாசி என்னனு பாஜகவுக்கு தெரியாதா..!?

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? என பிரகாஷ் ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். சன் நியூஸ் டிவி சேனலில் அதன் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் அவர்கள் பிரகாஷ் ராஜூடன் நடத்திய உரையாடலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்றனர். இப்போது வலியைத் தரக் கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

பாதுகாப்பில் எப்படி குறைபாடுகள் ஏற்பட்டன என யாரும் கேள்வி கேட்பது இல்லை? இப்பதான் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற நிலைமை இருக்கும் போது.. 2,000 பேர் கூடுகிற ஒரு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லை என்கிற போது கேள்வி எழுகிறது.. இவ்வளவு ராணுவம் இருக்கிறது.. உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகின்றன.. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு என்னதான் வேண்டும் என யாரும் கேட்கவில்லையே.. பயங்கரவாதத்தையே ஒழித்துவிட்டோம் என்கிறீர்கள்.. பொதுமக்களையே பாதுகாக்க முடியவில்லையா? ஆகையால் மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் ஜிஹாதிகளும் உறுதியாக இருக்கின்றனர். இதுதான் வரலாறு. சரி.. அப்படியான சூழ்நிலையில் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்தது? நாம் அரசியலைப் பேச வேண்டாம்.. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி பேச வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு 80 பேர் போகத் தெரிகிறது இல்லையா.. அந்த பாதுகாப்பு ஏன் மக்களுக்கு இல்லை? பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. சரி.. அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் கூட நாம் யோசிக்காமல் இருக்கிறோமே..

ஆகையால்,  அரசாங்கத்தில் இருப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்புகிறோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றோரை சேர்த்துதான் பிரதமர் மோடி மெஜாரிட்டியை நிரூபிக்க முடிகிறது.பிரதமர் மோடி வீழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. பாஜக வென்றதாக சொல்லப்படும் 240 தொகுதிகளிலும் கூட சில தொகுதிகளில் ஊழல் செய்துதான் வென்றுள்ளது. பாஜகவால் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருந்தாலே பெரிய விஷயம்தான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது. அயோத்தி, ராமர்கோவில் கட்டிய இடத்திலேயே கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே..

தொகுதி மறுசீரமைப்பு தேவை இல்லை என யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடும் சொல்லவில்லை. தொகுதி மறுசீரமைப்பால் எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலாக இருக்கிறது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் தொடங்குவதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொகுதி மறுசீரமைப்புக்கு ஏற்ப கட்டி வைத்தால் எப்படி சொல்வது.. தொகுதி மறுசீரமைப்பால் பெரும்பான்மைக்கு வட இந்தியாவில் பெறும் தொகுதிகள் எண்ணிக்கையே போதும் என்கிற நிலைமை உருவாகும்.

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? நீங்கள் யார் கொடுப்பதற்கு? அது மக்களின் பணம்.. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொடுப்பதற்குதான் பிரதமர் பதவி. அதைவிட்டுவிட்டு நான் கொடுத்தேன்.. நான் கொடுத்தேன் என பேசுவது எப்படி சரியாகும்?

பாஜக, எந்த முஸ்லிம்களை மிக கடுமையாக எதிர்க்கிறதோ அதே முஸ்லிம்களுக்காகவே வஃபு சட்டம் கொண்டு வந்ததாக பாஜக சொல்வதை எப்படி நம்புவது? 300 ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துகளுக்கு எங்கே போய் ஆவணங்களைத் தேடுவது? அதற்கான பத்திரங்கள் இருக்கின்றனவா? திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? மடங்களின் சொத்துகளில் அரசாங்கம் தலையிடுமா? இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துகள்; நாளைக்கு கிறிஸ்தவர்களின் சொத்துகள் என்றுதான் வருவார்கள்.

அதிமுக ஒரு மாநிலக் கட்சிதானே.. பாஜக என்ன செய்கிறது என தெரியும்தானே..நாட்டை, வரலாற்றை, மொழியை என்ன செய்கிறது பாஜக என தெரியும்தானே.. இதை எல்லாம் மிதிக்கனும் என நினைக்கிற பாஜகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையப் போகுதே.. இப்பவும் பாஜகவுடனா சேரப் போகிறது அதிமுக?

பாஜக, உன் தோளில் கை போடுகிறது எனில் உன்னை அமுக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். காசு, பணம், அதிகாரம் தேவை எனில் பாஜகவுடன் கூட்டணிக்கு போகலாம்.. ஆனால் என் நாட்டை விற்றுப் போக நான் அனுமதிக்கமாட்டேன். என் நாட்டை கொள்ளையடிக்கிறது பாஜக தமிழ்நாட்டு நலனுக்கான திமுக கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை.

ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்துள்ளது? தமிழ்நாட்டு கட்சியுடனா வைத்துள்ளது? உங்களை கொள்ளையடிக்கிறவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்? கூட்டணி வைப்பது பிரச்சனை அல்ல.. யாருடன் கூட்டணி என்பதுதான் பிரச்சனையே. நீ யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்.. ஆனால் நான் என் நாட்டை விற்கவிடமாட்டேன்.. நீ என் வேலையை செய்ய விட வேண்டும். என் தமிழ்நாட்டை, என் தென்னிந்தியாவை அசிங்கப்படுத்த விடமாட்டேன்.

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை.. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி ஒரே நாடு ஒரே தேர்தல்- சித்தாந்தத்தைப் பார்க்க வேண்டும். காந்தியை கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்குள் இருக்கின்றனர் என்பதை மறக்க கூடாது.

நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக.. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? 2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான் 2026 தமிழக சட்டசபை தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்சனையாக இருக்கும். என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

Prakash Raj:: ‘நோட்டா’ கட்சியான பாஜகவுடன் ஏன் கூட்டணி..? அதிமுகவுக்கு தன்மானமே இல்லை..?

அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? என பிரகாஷ் ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். சன் நியூஸ் டிவி சேனலில் அதன் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் அவர்கள் பிரகாஷ் ராஜூடன் நடத்திய உரையாடலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்றனர். இப்போது வலியைத் தரக் கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

பாதுகாப்பில் எப்படி குறைபாடுகள் ஏற்பட்டன என யாரும் கேள்வி கேட்பது இல்லை? இப்பதான் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற நிலைமை இருக்கும் போது.. 2,000 பேர் கூடுகிற ஒரு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லை என்கிற போது கேள்வி எழுகிறது.. இவ்வளவு ராணுவம் இருக்கிறது.. உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகின்றன.. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு என்னதான் வேண்டும் என யாரும் கேட்கவில்லையே.. பயங்கரவாதத்தையே ஒழித்துவிட்டோம் என்கிறீர்கள்.. பொதுமக்களையே பாதுகாக்க முடியவில்லையா? ஆகையால் மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் ஜிஹாதிகளும் உறுதியாக இருக்கின்றனர். இதுதான் வரலாறு. சரி.. அப்படியான சூழ்நிலையில் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்தது? நாம் அரசியலைப் பேச வேண்டாம்.. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி பேச வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு 80 பேர் போகத் தெரிகிறது இல்லையா.. அந்த பாதுகாப்பு ஏன் மக்களுக்கு இல்லை? பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. சரி.. அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் கூட நாம் யோசிக்காமல் இருக்கிறோமே..

ஆகையால்,  அரசாங்கத்தில் இருப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்புகிறோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றோரை சேர்த்துதான் பிரதமர் மோடி மெஜாரிட்டியை நிரூபிக்க முடிகிறது.பிரதமர் மோடி வீழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. பாஜக வென்றதாக சொல்லப்படும் 240 தொகுதிகளிலும் கூட சில தொகுதிகளில் ஊழல் செய்துதான் வென்றுள்ளது. பாஜகவால் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருந்தாலே பெரிய விஷயம்தான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது. அயோத்தி, ராமர்கோவில் கட்டிய இடத்திலேயே கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே..

தொகுதி மறுசீரமைப்பு தேவை இல்லை என யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடும் சொல்லவில்லை. தொகுதி மறுசீரமைப்பால் எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலாக இருக்கிறது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் தொடங்குவதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொகுதி மறுசீரமைப்புக்கு ஏற்ப கட்டி வைத்தால் எப்படி சொல்வது.. தொகுதி மறுசீரமைப்பால் பெரும்பான்மைக்கு வட இந்தியாவில் பெறும் தொகுதிகள் எண்ணிக்கையே போதும் என்கிற நிலைமை உருவாகும்.

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? நீங்கள் யார் கொடுப்பதற்கு? அது மக்களின் பணம்.. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொடுப்பதற்குதான் பிரதமர் பதவி. அதைவிட்டுவிட்டு நான் கொடுத்தேன்.. நான் கொடுத்தேன் என பேசுவது எப்படி சரியாகும்?

பாஜக, எந்த முஸ்லிம்களை மிக கடுமையாக எதிர்க்கிறதோ அதே முஸ்லிம்களுக்காகவே வஃபு சட்டம் கொண்டு வந்ததாக பாஜக சொல்வதை எப்படி நம்புவது? 300 ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துகளுக்கு எங்கே போய் ஆவணங்களைத் தேடுவது? அதற்கான பத்திரங்கள் இருக்கின்றனவா? திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? மடங்களின் சொத்துகளில் அரசாங்கம் தலையிடுமா? இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துகள்; நாளைக்கு கிறிஸ்தவர்களின் சொத்துகள் என்றுதான் வருவார்கள்.

அதிமுக ஒரு மாநிலக் கட்சிதானே.. பாஜக என்ன செய்கிறது என தெரியும்தானே..நாட்டை, வரலாற்றை, மொழியை என்ன செய்கிறது பாஜக என தெரியும்தானே.. இதை எல்லாம் மிதிக்கனும் என நினைக்கிற பாஜகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையப் போகுதே.. இப்பவும் பாஜகவுடனா சேரப் போகிறது அதிமுக?

பாஜக, உன் தோளில் கை போடுகிறது எனில் உன்னை அமுக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். காசு, பணம், அதிகாரம் தேவை எனில் பாஜகவுடன் கூட்டணிக்கு போகலாம்.. ஆனால் என் நாட்டை விற்றுப் போக நான் அனுமதிக்கமாட்டேன். என் நாட்டை கொள்ளையடிக்கிறது பாஜக தமிழ்நாட்டு நலனுக்கான திமுக கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை.

ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்துள்ளது? தமிழ்நாட்டு கட்சியுடனா வைத்துள்ளது? உங்களை கொள்ளையடிக்கிறவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்? கூட்டணி வைப்பது பிரச்சனை அல்ல.. யாருடன் கூட்டணி என்பதுதான் பிரச்சனையே. நீ யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்.. ஆனால் நான் என் நாட்டை விற்கவிடமாட்டேன்.. நீ என் வேலையை செய்ய விட வேண்டும். என் தமிழ்நாட்டை, என் தென்னிந்தியாவை அசிங்கப்படுத்த விடமாட்டேன்.

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை.. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி ஒரே நாடு ஒரே தேர்தல்- சித்தாந்தத்தைப் பார்க்க வேண்டும். காந்தியை கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்குள் இருக்கின்றனர் என்பதை மறக்க கூடாது.

நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக.. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? 2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான் 2026 தமிழக சட்டசபை தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்சனையாக இருக்கும். என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

வைகோ காட்டம்: ஏஜெண்டு R.N. ரவியை பாஜக அலுவலகத்தில் வைத்து அரசியல் செய்யுங்கள்..!

“உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துகிறார் ஆளுநர் R.N. ரவி; பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் R.N. ரவியை ஆளுநர் பாஜக அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவியைக் கண்டித்தும், வஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். இந்தப் போராட்டத்தில் வைகோ பேசுகையில், ஜனநாயகத்தின் அடித்தளம் என்பது சிறுபாமையினரை பாதுகாப்பதுதான். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அனைத்து மதங்களும் தங்களுடைய உரிமையை இழக்கும் நிலை ஏற்படும்.

இந்தியாவின் ஒருமைப்பாடு காப்பாற்றப்படாது. தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்களை சட்டமன்றத்தில் உச்சரிக்க மாட்டேன் என்று R.N. ரவி சொல்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மூக்குடைபட்ட பிறகும் கூட, துணை வேந்தர்கள் மாநாட்டை R.N. ரவி நடத்துகிறார் . பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் R.N. ரவியை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கொண்டு அரசியல் செய்யாமல், பாஜக கட்சி அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் என வைகோ கடுமையாக விமர்சனம் செய்தார்.

S.V. சேகர்: தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம்..!

தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம் என முன்னாள் அதிமுக MLA-வான S.V. சேகர் தெரிவித்துள்ளார். `சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் தனியார் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை அமைச்சர்கள் சிவசங்கர், தாமோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் S.V. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து S.V. சேகர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதி தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது, தீவிரவாதம் நடந்தால் தீவிரவாதம் என கூற வேண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் பயங்கரவாதிகள் எனக் கூற வேண்டும். மனித நேயத்தின் உச்சகட்டமாக உதவி செய்த உள்ளூர் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார்

உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட ஒரு சில மதத்தை வைத்து அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவது தவறு. தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம், பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என S.V. சேகர் தெரிவித்தார்.

K.S. அழகிரி கருத்து: பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது..!

பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர், K.S. அழகிரி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது. பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் வழியில் நின்று வெற்றிப் பெற்று வேந்தராகி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். ஆனால், அதை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு கூட்டணி அமைத்தால் எழுச்சி வரும். ஆனால், அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக இடங்களை கேட்போம். பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாததை எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை.

அரசு நிகழ்ச்சியில் பொன்முடி அதுபோல பேசவில்லை. திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரது தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர் அப்படி பேசியதற்காக தண்டிக்கப்பட்டு விட்டார். ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான் கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சியினர் அமைச்சர் பொன்முடியை குறிவைத்துள்ளனர் என K.S. அழகிரி தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சி காட்டம்: தனக்கு தானே போலி விளம்பரம் செய்யும் பாஜக…!

புதிய தமிழகம் கட்சி கேட்டதைக் கொடுத்து விட்டோம்” என பாஜகவினர் ஊர் ஊராக விளம்பரப் பேனர்களை வைத்து சுய தம்பட்டம் அடித்துக் கொண்டனர் என புதிய தமிழகம் கட்சி கதறிக் கொண்டுள்ளது. புதிய தமிழகம் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், பட்டியல் பிரிவில் இடம் பெற்றிருந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி, SC பட்டியல் பிரிவிலிருந்து விடுவித்து மிக மிக பின்தங்கியோர் என்ற புதுப் பட்டியலை உருவாக்கி அம்மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்கிடவும் ‘புதிய தமிழகம் கட்சி’ துவங்கிய காலத்திலிருந்து கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சட்ட மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்!

2017-ல் சென்னையில் மாநாடு, டெல்லியில் பேரணி, 2018-ல் விருதுநகர், திருச்சியில் மாநாடு, 2019-ல் 10,000 கிராமங்களில் உண்ணாவிரதம், 2021-ல் மதுரையில் தடையை மீறி மாபெரும் பேரணி என நமது தொடர் போராட்டங்களின் வாயிலாக பெயர் மாற்றத்தை மட்டும் 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அறிவித்து விட்டு, நமது பிரதானக் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை அப்படியே விட்டுவிட்டு, ”கேட்டதைக் கொடுத்து விட்டோம்” என பாஜகவினர் ஊர் ஊராக விளம்பரப் பேனர்களை வைத்து சுய தம்பட்டம் அடித்துக் கொண்டதுடன் நம்முடைய வாக்குகளையும் அள்ளிக் கொண்டார்கள்.

”பட்டியல் மாற்றத்திற்கான உத்தரவாதத்தை அளித்தால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் BJP – AIDMK கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரித்து பிரச்சாரம் செய்யத் தயார்” என தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறிவித்தார். எனினும் இரண்டு கட்சிகளும் ஒரு சேர ஏமாற்றியதால் அக்கூட்டணியைப் புறக்கணித்து, தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை முன்னிறுத்தி ’புதிய தமிழகம் கட்சி’ தனித்து போட்டியிட்டது.!

பெயர் மாற்றத்திற்காக நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று திருத்தம் செய்த மத்திய அரசு கையோடு பட்டியல் மாற்றத்தையும் செய்து கொடுத்திருந்தால் அப்பிரச்சனை அன்றோடு முடிந்து போயிருக்கும். லட்சோபலட்சம் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் உயிர் மூச்சான பட்டியல் மாற்றக் கோரிக்கையும் நிறைவு பெற்றிருக்கும். அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகவும், சாதனையாகவும் அமைந்திருக்கும்.! ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை; செய்யவும் அவர்களுக்கு மனமில்லை. அரை நூறாண்டுக் காலம் உரக்கக் கத்தியும் அவர்கள் செய்ய மறுத்த பின்னரும் மீண்டும் அவர்களிடத்திலே பேசுவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.!

எனவே, நாம் அதுபோன்ற கோரிக்கையை எவரிடமும் இனி வைக்கப் போவதில்லை.! நாமே அதிகாரத்தில் அமரக்கூடிய காலம் விரைவில் வரும் அல்லது உருவாக்குவோம் எனும் தீர்க்கமான உள உறுதியோடும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற முழக்கத்தோடும், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒட்டுமொத்தத் தேவேந்திரகுல வேளாளர் மக்களையும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைத்து வருகிறோம்.!

யார் யாரையோ முதலமைச்சராக்க அல்லது அமைச்சராக்க அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக்க நாங்கள் இனியும் காலமெல்லாம் வாக்களிக்க மாட்டோம்..! ’ஆட்சியிலும், அதிகாரத்திலும் பகிர்வு’ என்ற குறிக்கோள் நிறைவேறவே எங்கள் கூட்டணி அமையும் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தெரிவித்த கருத்து தமிழ்நாடெங்கும் தேவேந்திரகுல மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மக்கள் மத்தியிலும் பற்றி எரிகிறது..! இதுவே, 2026 ல் அரசியல் சாசனம் ஆகும்.!

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் மீண்டும் ஒற்றுமையாவதை, ஓரணியில் ஒன்றுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத சதிகாரக் கூட்டம் மீண்டும் தேர்தல் நேரத்தில் நம் மக்களை ஏமாற்றக் களம் இறங்கி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, திடீரென்று பட்டியல் மாற்றத்திற்காக ஒருவர் சட்டமன்றத்தில் முழங்கி விட்டாராம்.! மக்கள் மன்றங்களில் போராடிப் போராடி ரத்தம் சிந்திவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ‘அனைத்து தேவேந்திரகுல சங்கங்கள்’ என்ற‌ பெயரில் ஒரு மாலைப் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை இன்று கண்டோம்.! இது கண்டனத்திற்குரியது..!

நாடாளுமன்றம் வரை சென்றும் பட்டியல் மாற்றத்தை அறிவிக்காதவர்கள் தற்போது சட்டமன்றத்தில் பேசியா தீர்க்கப் போகிறார்கள்.? இதே திட்டமிட்டு ஒருவரால் சுய லாபத்திற்காகக் கொடுக்கப்பட்ட ஏமாற்று விளம்பரம். போலி சரக்குகளை கொண்டு வந்து மோசடி செய்வதும், போலிச் சங்கங்களை உருவாக்கி மக்களை ஏமாற்றுவதும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரியதாகும். இனியும் சம்பந்தப்பட்ட நபர் இதுபோன்ற சுய விளம்பரத்தில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற மனிதர்களை வைத்து வெட்டி விளம்பரத்தின் மூலம் பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடியால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது; ஏமாற்றவும் விடமாட்டோம் என்று எச்சரிக்கிறோம்..! என புதிய தமிழகம் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

H. ராஜா கருத்து: கெஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்படும்..!

தமிழகத்தில் நிலவும் மோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே கெஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம்.என பாஜக மூத்த தலைவர் H. ராஜா கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று செய்தியாளர்களில் கேள்விக்கு H. ராஜா பதிலளித்தார்.

அப்போது, நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுக. 2010-ல் நீட் மசோதாவை மக்களவையில் முன்மொழிந்தது திமுகவைச் சேர்ந்த காந்திச்செல்வன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், கெஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம்.

தமிழகத்தில் நிலவும் மோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணி வெல்லும் என்ற தகவலால் முதல்வர் அச்சத்தில் உள்ளார். அமைச்சர் பொன்முடியை இதுவரை ஏன் கைது செய்யவில்லை? திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என H. ராஜா தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் சூசகம்: இரட்டை இலை மேலே தாமரை மலரும்”

“தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சூசகமாக பேசியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த பாஜக கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, “தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக கட்சியை பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் சென்ற அண்ணாமலைக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். அகில இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறது என்று அறிந்து, அதை ஏற்று கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். தேர்தலுக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

தலைமை சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். கூட்டணி குறித்து ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தால், அது வேறு விதமாக போய்விடும். நமது கூட்டணி உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. வெற்றி கூட்டணி. இது தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் கூட விமர்சித்துள்ளார்.

நீங்கள் தான் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தலைமை வகிக்கிறீர்கள். எங்களது நியாயமான கூட்டணி, நேர்மையான கூட்டணி. ஊழல் இல்லாத கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவதற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் வேலை செய்கிறார்களா என்று பாருங்கள். பூத்தை செம்மைப் படுத்தினால் தான் வெற்றி அடைய முடியும். எத்தனை தொகுதி, எப்படி கூட்டணி என்பதை எல்லாம் நாம் சொல்ல முடியாது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி சேர்ந்து முடிவு எடுப்பார்கள். எனக்கு அதிகாரம் தொண்டர்களை பாதுகாப்பது தான்.

எங்களது தொண்டர்களுக்கு காலில் அடிபட்டால், அது எனக்கு கண்ணிலே ஏற்படும் வலி போன்றது. நான் தொண்டர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்சியை வளர்க்க வேண்டும். தமிழக அரசுக்கு அதிகாரம் வேண்டும், தமிழக மக்கள் அதிக பயன் அடைய வேண்டும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி வர வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது. கச்சத்தீவை பிரதமர் மோடி நினைத்தால் தான் மீட்க முடியும். இவர்கள் வெற்று தீர்மானம் போட்டு ஒன்றும் பயன் இல்லை.” எனப் பேசியுள்ளார்.

“அமித் ஷாவிற்கு பகிரங்க சவால் விடுத்த மு.க. ஸ்டாலின்”

பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பாஜக வியூகம் தமிழகத்தில் எடுபடாது. “அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பார்க்க திமுக தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தான் தமிழகம் போராடுகிறது. மாநில உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாததால் தான், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். திமுகவின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்று சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பாஜக வியூகம் தமிழகத்தில் எடுபடாது. நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பார்க்க திமுக தயார்.

அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் எங்களை மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். உங்களுடைய உருட்டல் மிரட்டல்களுக்கு அடிபணிகிற அடிமைகள் அல்ல நாங்கள். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சி அமைக்கிற உங்களோட ஃபார்முலா தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான். தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான். ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு:மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவை மாடுகளுக்கு விற்கும் விடுதி ஊழியர்கள்?

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், இன்றைய தினமலர் இணையவழி செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 – 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும்.

இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு. ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றுடன் முடியும் நிதியாண்டில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை. வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது.

பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு? உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.