மு.க.ஸ்டாலின் சூளுரை 2026 -ல் தமிழகத்தில் திமுக தான் மீண்டும் ஆட்சி 7-வது முறையாக அமைக்கும்..!

‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் கூறுவார். ஆனால் கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். ஆகையால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். என மு.க.ஸ்டாலின் சூளுரைதார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் கூறுவார். ஆனால் கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து வருகின்றனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தான் இருந்து வருகிறது.

இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு.

கடந்த ஆட்சியின் இருளை போக்கி தலைநிமிர்ந்து நடக்கிறது தமிழ்நாடு அரசு. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி இந்தியாவில் எந்த மாநிலமும் காணாதது தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம்; தேசிய சராசரி ரூ.2.06 லட்சம்தான். மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி.. ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் கவர்னர்.. நிதி என்று எல்லா தடைகளை தாண்டி செய்த சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் சட்ட முன்வடிவு, கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்கள்… பொதுப்புழக்கங்களில் இருந்தும் நீக்கப்படும்

ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, காலனி’ என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். ‘காலனி’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என VCK எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

RS. பாரதி விமர்சனம்: அதிமுக தோற்றாலும் பரவாயில்லை… பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமி..!

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, CBI நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என திமுக அமைப்புச் செயலாளர் RS. பாரதி விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக RS. பாரதி பேசுகையில் , செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன” எனச் சொல்லி இருக்கிறார்.

தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, CBI நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த… கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 RK நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’ என ஜோசியம் சொல்கிறார்!

தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ’11-ஆவது தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தை விட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அதிமுகவைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். திருப்பூரில் நடந்த MGR நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற ‘நாற்காலிச் சண்டை’யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது.

அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார். தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை” என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. ”மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?” என அதிமுகவில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.

தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

“பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது” என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த… 11 MLA க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் பதவியை அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர். MGR -ரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் MLA பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக MLA-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது என RS. பாரதி விமர்சனம் செய்தார்.

RS. பாரதி விமர்சனம்: தோல்வியில் சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி.. எடப்பாடி பழனிசாமி..!

தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அதிமுகவைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டு இருக்கிறார் என திமுக அமைப்புச் செயலாளர் RS. பாரதி விமர்சனம் செய்தார். இது தொடர்பாக RS. பாரதி பேசுகையில் , செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன” எனச் சொல்லி இருக்கிறார்.

தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, CBI நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த… கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 RK நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’ என ஜோசியம் சொல்கிறார்!

தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ’11-ஆவது தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தை விட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அதிமுகவைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். திருப்பூரில் நடந்த MGR நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற ‘நாற்காலிச் சண்டை’யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது.

அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார். தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை” என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. ”மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?” என அதிமுகவில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.

தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

“பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது” என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த… 11 MLA க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் பதவியை அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர். MGR -ரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் MLA பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக MLA-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது என RS. பாரதி விமர்சனம் செய்தார்.

RS. பாரதி கேள்வி: பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது என்ற நாற்காலிச் சண்டையை மறந்து விட்டீர்களா..!

MGR நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற ‘நாற்காலிச் சண்டை’யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது என திமுக அமைப்புச் செயலாளர் RS. பாரதி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக RS. பாரதி பேசுகையில் , செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன” எனச் சொல்லி இருக்கிறார்.

தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, CBI நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த… கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா? 2017 RK நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’ என ஜோசியம் சொல்கிறார்!

தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ’11-ஆவது தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தை விட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அதிமுகவைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டு இருக்கிறார்.

செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டி.வி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். திருப்பூரில் நடந்த MGR நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற ‘நாற்காலிச் சண்டை’யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது.

அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார். தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை” என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. ”மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?” என அதிமுகவில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.

தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

“பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது” என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த… 11 MLA க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் பதவியை அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர். MGR -ரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் MLA பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக MLA-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி தி.மு.க அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது என RS. பாரதி கடுமையாக சாடினார்.

MRK. பன்னீர் செல்வம் கேள்வி: அம்மா, அப்பா கூடவே ஒற்றுமையா இல்லாதவர் எப்படி இளைஞர்களை வழி நடத்துவார்..!?

அம்மா, அப்பா கூடவே ஒற்றுமையா இல்லாதவர் எப்படி இளைஞர்களை வழி நடத்துவார் என வேளாண் துறை அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி, நிதி நிலை அறிக்கையில் தமிழகம் என்ற பெயரை புறக்கணித்தது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் பொதுக் கூட்டம் நடத்துமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி கடலூர் மாவட்டம் திருமுட்டத்தில் அறிஞர் அண்ணா திடல் கலைஞர் அரங்கத்தில் பாஜகவை கண்டித்து திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் MRK. பன்னீர் செல்வம் பேசுகையில்,. நேற்று மழையில் முளைத்த காளான் சொல்றாரு! என்னாது இனிமே ஏமாற மாட்டாங்களாம். நீங்கள் சினிமாகாரர், முதலமைச்சர் ஆகுறது சாதாரணமா? 50 ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு உழைத்து பல்வேறு தடைகளை தாண்டி நாம் ஆட்சியை பிடித்துள்ளோம்.

பிளாக் டிக்கெட் விற்றவங்கலாம் பேசுறாங்க! அவர் வாங்கும் சம்பளமே பிளாக்கில் தான் வாங்குகிறார். ஒயிட்டில் வாங்காதவர், ஆட்சிக்கு வந்து அமர போகிறாராம். அம்மா, அப்பா கூடவே ஒற்றுமையா இல்லை. இளைஞர்களை எப்படி வழி நடத்துவார். ஆட்சியை பிடிக்க போறாங்களாம், முதல்வராக போறாங்களாம், இதென்ன சினிமாவா? இளைஞர்களை கொள்கை பிடிப்புள்ளவர்களாக உருவாக்கியதே திமுகதான். நாங்கள் தடம் மாறாமல் எங்கள் உடலில் கருப்பு சிகப்பு ரத்தம் ஓடுது.

இளைஞர்களின் கலாச்சாரத்தையே வீணாக்கும் நடிகன், ஆட்சியை பிடிக்க போறாராம். இளைஞர்களை திருத்த போறாராம். நேற்று கட்சி ஆரம்பித்துவிட்டு போராட்டம் நடத்தவில்லை, 10 கட்சி துண்டை போட்டுகிட்டார். எல்லாம் சினிமா செட்டிங் என MRK. பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

SP வேலுமணி:எடப்பாடி பழனிசாமியா.. ஸ்டாலினா.. என்பதுதான் 2026 தேர்தல் களம்..!

எடப்பாடி பழனிச்சாமியா..? ஸ்டாலினா..? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் போட்டி என SP வேலுமணி தெரிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை சார்பாக நடைபெறும் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் SP வேலுமணி பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய SP .வேலுமணி, “2026ல் தமிழ்நாடு முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்கப் போகிறார். அவரது பிறந்த நாளை நாம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அதிமுக நிறுவனரும் கழகத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த தலைவரான MGR பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறோம். அதன் பிறகும் கட்சியை வளர்த்து, நம்மை எல்லாம் வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதா. சாதாரணமாக விவசாயக் குடும்பத்தில் இருந்த நம்மை அமைச்சராக்கியது ஜெயலலிதா தான்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, முதலில் MLA, வாரிய தலைவர், அமைச்சர் என படிப்படியாக முன்னேறியவர். தனது உழைப்பாலும் ஜெயலலிதா மீது இருந்த விஸ்வாசத்தாலும் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அதிமுக பொது செயலாளராக இருப்பவர் எடப்பாடி. 4 ஆண்டுகள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி.

அடுத்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்பதே நமது முக்கிய இலக்கு. எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை நாம் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர் கூட அதெல்லாம் வேண்டாம் என்றே சொன்னார். ஆனால், 2026 தேர்தலில் அவரை வைத்துத் தான், எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லியே வாக்குகளைப் பெறப் போகிறோம். எனவே, அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டியது நமது கடமை.

அடுத்த பிறந்த நாள் கொண்டாடும்போது சட்டசபைத் தேர்தல் முடிந்திருக்கும். அவர் முதல்வராகத் தேர்வாகி இருப்பார். ஓராண்டில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் முதல்வராகி இருப்பார். எனவே, நமது தலைவரை நாம் தான் கொண்டாட வேண்டும். அவரை வைத்துத் தான் வாக்குகளைப் பெறப் போகிறோம்.. எடப்பாடி பழனிசாமியா..? ஸ்டாலினா..? என்பதுதான் 2026 தேர்தல் களத்தில் போட்டியாக இருக்கும். அப்போது தான் மக்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்” என SP வேலுமணி தெரிவித்தார்.

பொன் விக் அணிந்து “பொன்முடி”கைது செய்ய நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் பொன் விக் அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் தன்னுடைய கருத்துக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரினார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதிமுக மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை சார்பில் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோல்டு ஹேர் விக் அணிந்து வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பொன் நிற விக் அணிந்து வந்து பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.வளர்மதி கேள்வி: பொன்முடி பேச்சை முதலமைச்சர் ரசிக்கிறாரா..!?

அமைச்சர் பொன்முடி விஷயத்தில் நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசிக்கிறாரா? என பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது அமைச்சர் பதவியை பறிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் பொன்முடியே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசுகையில், பெண்களை இழிவுபடுத்துவது என்பது திமுகவிற்கு கைவந்த கலையாக உள்ளது

திமுகவினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் அவமானப்படுத்தினர். அமைச்சர் பொன்முடி விஷயத்தில் மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசிக்க ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். இதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என பா.வளர்மதி தெரிவித்தார்.

H. ராஜா கருத்து: கெஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்படும்..!

தமிழகத்தில் நிலவும் மோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே கெஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம்.என பாஜக மூத்த தலைவர் H. ராஜா கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று செய்தியாளர்களில் கேள்விக்கு H. ராஜா பதிலளித்தார்.

அப்போது, நீட் தேர்வைக் கொண்டு வந்தது திமுக. 2010-ல் நீட் மசோதாவை மக்களவையில் முன்மொழிந்தது திமுகவைச் சேர்ந்த காந்திச்செல்வன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிவிட்டார். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், கெஜ்ரிவால் நிலைமை தமிழக முதல்வருக்கும் ஏற்படலாம்.

தமிழகத்தில் நிலவும் மோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பாஜக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணி வெல்லும் என்ற தகவலால் முதல்வர் அச்சத்தில் உள்ளார். அமைச்சர் பொன்முடியை இதுவரை ஏன் கைது செய்யவில்லை? திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என H. ராஜா தெரிவித்தார்.