திருமாவளவன்: அதிமுக கூட்டணிக்கு சென்றிருந்தார்… நடுத்தெருவில் நின்றிருப்போம்..!

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது என ஆசைகாட்டினார்கள் அதிமுக கூட்டணிக்கு சென்றிருந்தார் இன்றைக்கு நாம் நடுத்தெருவில் நின்றிருப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். புதுச்சேரியில் விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “ஒரே நேரத்தில் 2 அணிகளுடனும் பேசுகிற ராஜதந்திர சூழ்ச்சி நமக்கு இல்லை.

பாஜகவிலும் சேரமாட்டோம், பாமகவுடனும் சேரமாட்டோம். அந்தக் கட்சிகளுடன் இடம் பெறுகிற கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பதவிதான் முக்கியம் என்றால் இப்படி எல்லாம் என்னால் பேச முடியுமா?

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜய் கூட, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தபோது கூட நாம் இருக்கிற கூட்டணி தொடர வேண்டும், அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தவன் திருமாவளவன்.

விஜய் கூட சொன்னார், அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை, ஆனால் அவரது மனசு நம்முடன் இருக்கும் என்று பேசினார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நான் அந்தக் கதவையும் மூடினேன் அதுதான் திருமாவளவன்.

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது, துணை முதல்வர் பதவியையும் கோரலாம், கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என ஆசைகாட்டிய பலர் உண்டு. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது. நான் யூகம் செய்தது சரியாகி விட்டது. ஏன் அதிமுக பாஜகவில் போய் சிக்கியது. யோசித்துப் பாருங்கள். நம்மை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிறகு அதிமுக இதே முடிவை எடுக்க வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்து இருந்தால் இன்றைக்கு நடுத்தெருவில் நின்றிருப்போம். அரசியல் நிலைப்பாடுகளை நாம் எடுக்கும்போதும் அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் எடுக்கிறோம்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

Prakash Raj:: ‘நோட்டா’ கட்சியான பாஜகவுடன் ஏன் கூட்டணி..? அதிமுகவுக்கு தன்மானமே இல்லை..?

அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? என பிரகாஷ் ராஜ் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். சன் நியூஸ் டிவி சேனலில் அதன் தலைமை செய்தியாளர் மு.குணசேகரன் அவர்கள் பிரகாஷ் ராஜூடன் நடத்திய உரையாடலில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்றனர். இப்போது வலியைத் தரக் கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

பாதுகாப்பில் எப்படி குறைபாடுகள் ஏற்பட்டன என யாரும் கேள்வி கேட்பது இல்லை? இப்பதான் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி சுற்றுலா பயணிகள் செல்லலாம் என்கிற நிலைமை இருக்கும் போது.. 2,000 பேர் கூடுகிற ஒரு சுற்றுலா தலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லை என்கிற போது கேள்வி எழுகிறது.. இவ்வளவு ராணுவம் இருக்கிறது.. உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுகின்றன.. ஆனால் காஷ்மீர் மக்களுக்கு என்னதான் வேண்டும் என யாரும் கேட்கவில்லையே.. பயங்கரவாதத்தையே ஒழித்துவிட்டோம் என்கிறீர்கள்.. பொதுமக்களையே பாதுகாக்க முடியவில்லையா? ஆகையால் மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

காஷ்மீரில் அமைதி திரும்பிவிடக் கூடாது என்பதில் அரசியல்வாதிகளும் ஜிஹாதிகளும் உறுதியாக இருக்கின்றனர். இதுதான் வரலாறு. சரி.. அப்படியான சூழ்நிலையில் இந்திய ராணுவம் என்ன நடவடிக்கை எடுத்தது? நாம் அரசியலைப் பேச வேண்டாம்.. அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி பேச வேண்டும். உள்துறை அமைச்சரின் பாதுகாப்புக்கு 80 பேர் போகத் தெரிகிறது இல்லையா.. அந்த பாதுகாப்பு ஏன் மக்களுக்கு இல்லை? பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. சரி.. அதை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் கூட நாம் யோசிக்காமல் இருக்கிறோமே..

ஆகையால்,  அரசாங்கத்தில் இருப்பவர்களை நோக்கி நாம் கேள்வி எழுப்புகிறோம். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றோரை சேர்த்துதான் பிரதமர் மோடி மெஜாரிட்டியை நிரூபிக்க முடிகிறது.பிரதமர் மோடி வீழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. பாஜக வென்றதாக சொல்லப்படும் 240 தொகுதிகளிலும் கூட சில தொகுதிகளில் ஊழல் செய்துதான் வென்றுள்ளது. பாஜகவால் 200 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்திருந்தாலே பெரிய விஷயம்தான். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாகத்தான் இருக்கிறது. அயோத்தி, ராமர்கோவில் கட்டிய இடத்திலேயே கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே..

தொகுதி மறுசீரமைப்பு தேவை இல்லை என யாரும் சொல்லவில்லை. தமிழ்நாடும் சொல்லவில்லை. தொகுதி மறுசீரமைப்பால் எங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலாக இருக்கிறது. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் தொடங்குவதற்கு முன்னரே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தொகுதி மறுசீரமைப்புக்கு ஏற்ப கட்டி வைத்தால் எப்படி சொல்வது.. தொகுதி மறுசீரமைப்பால் பெரும்பான்மைக்கு வட இந்தியாவில் பெறும் தொகுதிகள் எண்ணிக்கையே போதும் என்கிற நிலைமை உருவாகும்.

மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தைவிட அதிகமாக நிதி தருகிறேன்; இங்கே அழுகிறார்கள் என பிரதமர் மோடி பேசுகிறார். மன்மோகன் சிங் காலத்து விலைவாசியா இப்போது இருக்கிறது? நீங்கள் யார் கொடுப்பதற்கு? அது மக்களின் பணம்.. மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொடுப்பதற்குதான் பிரதமர் பதவி. அதைவிட்டுவிட்டு நான் கொடுத்தேன்.. நான் கொடுத்தேன் என பேசுவது எப்படி சரியாகும்?

பாஜக, எந்த முஸ்லிம்களை மிக கடுமையாக எதிர்க்கிறதோ அதே முஸ்லிம்களுக்காகவே வஃபு சட்டம் கொண்டு வந்ததாக பாஜக சொல்வதை எப்படி நம்புவது? 300 ஆண்டுகளுக்கு முந்தைய சொத்துகளுக்கு எங்கே போய் ஆவணங்களைத் தேடுவது? அதற்கான பத்திரங்கள் இருக்கின்றனவா? திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவார்களா? மடங்களின் சொத்துகளில் அரசாங்கம் தலையிடுமா? இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துகள்; நாளைக்கு கிறிஸ்தவர்களின் சொத்துகள் என்றுதான் வருவார்கள்.

அதிமுக ஒரு மாநிலக் கட்சிதானே.. பாஜக என்ன செய்கிறது என தெரியும்தானே..நாட்டை, வரலாற்றை, மொழியை என்ன செய்கிறது பாஜக என தெரியும்தானே.. இதை எல்லாம் மிதிக்கனும் என நினைக்கிற பாஜகவுடன் எப்படி கூட்டணி சேர முடியும்? தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறையப் போகுதே.. இப்பவும் பாஜகவுடனா சேரப் போகிறது அதிமுக?

பாஜக, உன் தோளில் கை போடுகிறது எனில் உன்னை அமுக்கப் போகிறது என்றுதான் அர்த்தம். காசு, பணம், அதிகாரம் தேவை எனில் பாஜகவுடன் கூட்டணிக்கு போகலாம்.. ஆனால் என் நாட்டை விற்றுப் போக நான் அனுமதிக்கமாட்டேன். என் நாட்டை கொள்ளையடிக்கிறது பாஜக தமிழ்நாட்டு நலனுக்கான திமுக கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை.

ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்துள்ளது? தமிழ்நாட்டு கட்சியுடனா வைத்துள்ளது? உங்களை கொள்ளையடிக்கிறவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்? கூட்டணி வைப்பது பிரச்சனை அல்ல.. யாருடன் கூட்டணி என்பதுதான் பிரச்சனையே. நீ யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்.. ஆனால் நான் என் நாட்டை விற்கவிடமாட்டேன்.. நீ என் வேலையை செய்ய விட வேண்டும். என் தமிழ்நாட்டை, என் தென்னிந்தியாவை அசிங்கப்படுத்த விடமாட்டேன்.

அதிமுக- பாஜக கூட்டணியை எதிர்க்கிறோம் என்பதைவிட எதிர்த்துதான் ஆக வேண்டும். என் வீட்டிலேயே கொள்ளையடிக்கிற பாஜகவை எதிர்க்காமல் நான் வேறு யாரை எதிர்க்க வேண்டும்? பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக மட்டும் பார்க்கவில்லை.. பாஜகவுக்கு பின்னால் இருக்கிற இந்துத்துவா- மனுவாதி ஒரே நாடு ஒரே தேர்தல்- சித்தாந்தத்தைப் பார்க்க வேண்டும். காந்தியை கும்பிடுகிற பாஜகவுக்குள் கோட்சேக்குள் இருக்கின்றனர் என்பதை மறக்க கூடாது.

நோட்டாவுக்கு கிடைக்கக் கூடிய ஓட்டுகள் கூட இல்லாத பாஜகவுடன் ஏன் கூட்டணி? அதிமுகவுக்கு தன்மானம், கொள்கை என்பது எல்லாம் எதுவுமே கிடையாதா? மாநிலக் கட்சிதானே அதிமுக.. பாஜகவுடன் ஏன் கூட்டணி வைக்கனும்? என்ன காரணத்துக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும்? 2026 தேர்தலின் மைய பிரச்சனையே இதுதான் 2026 தமிழக சட்டசபை தேர்தலானது என் நாட்டுக்கு துரோகம் செய்கிறவங்களுக்கு ஓட்டா? என் மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறவங்களுக்கு ஓட்டா? என்பதாகத்தான் இருக்கப் போகிறது. தமிழ்நாட்டுக்கு விரோதிகள் யார்? தமிழ்நாட்டுக்கு நன்மை செய்தவர்கள் யார்? என்பதுதான் 2026 தேர்தலின் முக்கியமான மையமான பிரச்சனையாக இருக்கும். என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

R .B. உதயகுமார்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா..!? நல்லதாகவே நடக்கும்..!

அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நல்லதாகவே நடக்கும் என R .B. உதயகுமார் ஒற்றை வரியில் பதிலளித்தார். சென்னை வியாசர்பாடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் R .B. உதயகுமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு R .B. உதயகுமார் பதிலளித்தார்.

அப்போது, அதிமுக சார்பில் வாரம்தோறும் திண்ணை பிரசாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11-வது வாரமாக திண்ணை பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இன்று விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்பது போன்ற அவலங்களில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணை பிரசாரம் நடத்துகிறோம்.

இந்த திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அதிமுக வெல்வது நிச்சயம். சட்டசபையில் ஆளும் கட்சியினர் நேரலையில் பேசினால் தொழில்நுட்ப கோளாறு வருவதில்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் உடனே தொழில்நுட்ப கோளாறு வருகிறது. இது பாரபட்சமான நடவடிக்கை. எடப்பாடி பழனிசாமி என்ன கேள்வி கேட்கிறார், என்ன மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார் என்று மக்களுக்கு தெரிந்தால்தான் அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.

ஊமை படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள். வடக்கு எது, கிழக்கு எது, தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும் என R .B. உதயகுமார் தெரிவித்தார். மேலும் R .B. உதயகுமாரிடம் அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ‘உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்’ என R .B. உதயகுமார் ஒற்றை வரியில் பதிலளித்தார்.

S.V. சேகர்: தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம்..!

தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம் என முன்னாள் அதிமுக MLA-வான S.V. சேகர் தெரிவித்துள்ளார். `சென்னை மாங்காடு அடுத்த கோவூரில் தனியார் எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலை அமைச்சர்கள் சிவசங்கர், தாமோ.அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகர் S.V. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து S.V. சேகர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாதி தாக்குதலுக்கு எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லக்கூடாது, தீவிரவாதம் நடந்தால் தீவிரவாதம் என கூற வேண்டும் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் பயங்கரவாதிகள் எனக் கூற வேண்டும். மனித நேயத்தின் உச்சகட்டமாக உதவி செய்த உள்ளூர் இஸ்லாமியர் ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார்

உயிரிழந்தவர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம். குறிப்பிட்ட ஒரு சில மதத்தை வைத்து அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவது தவறு. தமிழகத்தில் என்ன செய்தாலும் பாஜக ஜெயிப்பது என்பது நடக்காத விஷயம், பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என S.V. சேகர் தெரிவித்தார்.

பொன் விக் அணிந்து “பொன்முடி”கைது செய்ய நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் பொன் விக் அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் தன்னுடைய கருத்துக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரினார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதிமுக மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை சார்பில் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோல்டு ஹேர் விக் அணிந்து வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பொன் நிற விக் அணிந்து வந்து பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

K.S. அழகிரி கருத்து: எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது..!

அதிமுக – பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி, எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர், K.S. அழகிரி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது. பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் வழியில் நின்று வெற்றிப் பெற்று வேந்தராகி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். ஆனால், அதை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு கூட்டணி அமைத்தால் எழுச்சி வரும். ஆனால், அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக இடங்களை கேட்போம். பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாததை எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை.

அரசு நிகழ்ச்சியில் பொன்முடி அதுபோல பேசவில்லை. திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரது தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர் அப்படி பேசியதற்காக தண்டிக்கப்பட்டு விட்டார். ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான் கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சியினர் அமைச்சர் பொன்முடியை குறிவைத்துள்ளனர் என K.S. அழகிரி தெரிவித்தார்.

K.S. அழகிரி கருத்து: பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது..!

பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது என தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் K.S. அழகிரி தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். பின்னர், K.S. அழகிரி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, பாஜக அரசு தவறான அரசியல் பாதையில் நாட்டை அழைத்துச் செல்கிறது. பாஜக அரசின் கொள்கை மற்றும் சித்தாந்தம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டத்தின் வழியில் நின்று வெற்றிப் பெற்று வேந்தராகி இருப்பவர் முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். ஆனால், அதை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை. அதிமுக – பாஜக கூட்டணி வலிமையற்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமியின் முடிவால் அதிமுக சிதைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு கூட்டணி அமைத்தால் எழுச்சி வரும். ஆனால், அந்த கூட்டணியில் அப்படி இல்லை. இந்த கூட்டணியால் அதிமுக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். இந்த கூட்டணியை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதிக இடங்களை கேட்போம். பெண்கள் குறித்து அவதூறாக அமைச்சர் பொன்முடி பேசியது தவறு தான். ஆனால், பெரியார் பேசாததை எதையும் அமைச்சர் பொன்முடி பேசவில்லை.

அரசு நிகழ்ச்சியில் பொன்முடி அதுபோல பேசவில்லை. திராவிடர் கழக கூட்டத்தில் தான் அப்படி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி அவரது தவறை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர் அப்படி பேசியதற்காக தண்டிக்கப்பட்டு விட்டார். ஒரு தவறுக்கு ஒரு தண்டனை தான் கொடுக்க வேண்டும். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சியினர் அமைச்சர் பொன்முடியை குறிவைத்துள்ளனர் என K.S. அழகிரி தெரிவித்தார்.

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு தங்க மோதிரம் பரிசளித்த எடப்பாடி பழனிசாமி

சாலையில் தேங்கி கிடந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணனுக்கு அ‌திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். சென்னை அரும்பாக்கம், உத்தாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராபர்ட் என்பவரின் மகன் செடன் ராயனுக்கு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அன்று சிறுவன் செடன் ராயன் பள்ளிக்கு சென்றுவிட்டு அரும்பாக்கம், மங்கள நகர் 1-வது தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். கடந்த 16 -ஆம் தேதி மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்தது. சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றபோது, சாலையோரம் பொறுத்தப்பட்டு இருந்த மின் மீட்டர் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு மழை நீரில் நடந்து சென்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால் துடித்த பள்ளி சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்து உயிருக்கு போராடி உள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கண்ணன் என்ற இளைஞர் தன் உயிரை பணயம் வைத்து அந்த சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர் உயிருக்கு போராடுவதும் இளைஞர் கண்ணன் தைரியமாகவும் தனது உயிரை பற்றி கவலையில்லாமல் துரிதமாக செயல்பட்டதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. பள்ளி சிறுவனை உயிரை காப்பாற்றிய இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தது.

மேலும் கண்ணன் பணியாற்றி வரும் நிறுவனத்தில் சக ஊழியர்கள் அவருக்கு கேக் வெட்டி பாராட்டு தெரிவித்தனர். மேலும் கண்ணனுக்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் துணிச்சலை பாராட்டி விருது வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கௌரவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, துணிந்து காப்பாற்றிய கண்ணனை அ‌திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

பா.வளர்மதி கேள்வி: பொன்முடி பேச்சை முதலமைச்சர் ரசிக்கிறாரா..!?

அமைச்சர் பொன்முடி விஷயத்தில் நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசிக்கிறாரா? என பா.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் மற்றும் நீதிமன்றம் அவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவரது கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, பா.வளர்மதி ஆகியோர் தலைமையில் அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரது அமைச்சர் பதவியை பறிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அமைச்சர் பொன்முடியே தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசுகையில், பெண்களை இழிவுபடுத்துவது என்பது திமுகவிற்கு கைவந்த கலையாக உள்ளது

திமுகவினர் தமிழக பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து திமுகவினர் அவமானப்படுத்தினர். அமைச்சர் பொன்முடி விஷயத்தில் மக்கள், நீதிமன்றம் கண்டித்த பின்னரும் அமைச்சர் பொன்முடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியின் பேச்சை ரசிக்க ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். இதற்கு தமிழக மக்கள் தக்க நேரத்தில் தக்க பதிலடியை கொடுக்க வேண்டும் என பா.வளர்மதி தெரிவித்தார்.

ஆர்பி உதயகுமார்: வயிற்றுப் பிழப்புக்காக அதிமுகவிலிருந்து திமுகவிற்கு மாறியவர்கள் திமுகவை தாங்கி பிடிக்கின்றனர்..!

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள் என R.B. உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக் சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கோபிநாயக்கன்பட்டியில் பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய R.B. உதயகுமார்,” திருமங்கலம் நகராட்சியில் மட்டும் 300 கோடி அளவில் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் சிலர் என் மீது பழியை போட்டு எதுவும் செய்யவில்லை என்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள். இதே பதட்டம் அவர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. சட்டமன்றத்திலே ஆளும் கட்சி அதிமுக என்று ஒப்புதல் வழக்குமூலமே கொடுத்துவிட்டு பின்பு பதட்டமாக இருந்தது என்று பேசிட்டேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்தபோது வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் தான் திருக்கோயிலில் கல்யாணம் நடைபெற்றது என்று பொய்யான தகவலை தந்தார். இவர் அதிமுகவில் இருக்கும் பொழுது புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .இதை இங்கே கற்றுக்கொண்டு அங்கே போய் இதை செய்துள்ளார்.

மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக செய்ததாக பேசுகிறார். அம்மா தான் முதன் முதலில் ஆலயங்கள் தோறும் அன்னதானத் திட்டத்தை கொண்டு வந்தார். சேகர்பாபு பொய்யை தவிர வேறு ஏதும் தெரியாது. அது மட்டுமல்ல கருணாநிதி சமாதியின் மீது ஆண்டாள் கோபுரத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது இப்படி செய்த சேகர் பாபு பதவி விட்டு நீக்க வேண்டும். இன்றைக்கு திமுகவின் ஒரிஜினல் வித்துக்கள் எல்லாம் அமைதியாக உள்ளனர்.

ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள். அதேபோன்று சட்டமன்ற 72விதியின் படி அமைச்சர்கள் பொன்முடி, நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதை ஏற்கக் கூடாது என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் கண் ஜாடை காட்டுகிறார்.

இன்றைக்கு பொன்முடியை நீதிமன்றமே கடுமையாக கண்டித்து உள்ளது. இவரின் மீது தாமாக வழக்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டாம் அவரை பதவியில் விட்டு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இன்றைக்கு பெண்களை ஆபாசமாக பேசிய திமுகவிற்கு 2026 தேர்தலில் நீங்கள் சரியான பாடத்தை பெண்கள் புகட்ட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு விழக் கூடாது. இதன் மூலம் திமுகவிற்கு பூஜ்ஜியத்தையும், அதிமுகவிற்கு ராஜ்ஜியத்தையும் கொடுக்க வேண்டும் என R.B. உதயகுமார் தெரிவித்தார்.