L. முருகன் வேண்டுகோள்: சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்..!

குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் L. முருகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு அதன் அளவை உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்பு ஆற்றை தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என L. முருகன் தெரிவித்தார் .

இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் கைது!

போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் மாதம் சாலையோரம் போலி சான்றிதழ்கள் சிதறி கிடந்தன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுப்பையா பாண்டியன் கருதப்பட்டார். இதையடுத்து, போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்த சிபிசிஐடி, அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனையை நடத்தினார்கள். அப்போது அவரது மனைவி பெயரிலும், போலி மருத்துவ சான்றிதழ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, போலி மருத்துவ சான்றிதழ் வழங்க, 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

போலி சான்று கும்பல்களுக்கு ஏஜென்ட் போல் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சுப்பையா பாண்டியன் கைதாகியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் முக்கிய நபரான கவுதமன் என்பவரை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல, முக்கிய குற்றவாளியான ஒஸ்தின் ராஜா என்பவருக்கும் காவல்துறை வலை விரித்துள்ளது.

தற்போது, சுப்பையா பாண்டியனை கடலூருக்கு அழைத்துவந்து சிபிசிஐடி விசாரணையை துவங்க உள்ளனர். சிதம்பரம் அருகே போலி சான்றிதழ்கள் கண்டெடுத்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில தலைவர் சுப்பையா பாண்டியனும் கைதாகி இருப்பது பரபரப்பை தந்து வருகிறது.

சாலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது புல்லட் ஏறி விபத்து, அலட்சியமாக சென்ற SSI -யின் மகன்

திருச்சி சாலையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது அந்த வழியாக புல்லட்டில் வந்த 10-ஆம் வகுப்பு மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது புல்லட் ஏறி விபத்து ஏற்பட்டது. ஆனால் அந்த விபத்திற்கு காரணமாக மாணவன் மூன்றரை வயது குழந்தையின் மீது பைக்கை ஏற்றிவிட்டு நான் கே.கே.நகர் SSI முருகராஜ் மகன் என்று சொல்லிவிட்டு அலட்சியமாக சென்றான். இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி அனைவரையும் பதைபதைக்க வைக்கிறது.

வடிவேல் பட பாணியில் அதிமுக நிர்வாகியை அடித்து, சட்டையை கிழித்து நிர்வாணப்படுத்தி கேரளா பெண்..!

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி, நாகர்கோவில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து பந்தல் பொருட்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்துவருகிறார். கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கும் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணை அடிக்கடி கேரளாவில் இருந்து அழைத்து வந்து, சில நாட்கள் யாருக்கும் தெரியாமல் பந்தல் பொருட்கள் உள்ள குடோனில் தங்க வைப்பார்.

பின்னர் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுத்து அனுப்பி வைப்பது வழக்கம். சமீபத்தில் அந்த நிர்வாகி, கேரளா பெண்ணை அழைத்து வந்துள்ளார். வழக்கம் போல் தங்க வைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் இந்த முறை பணம் எதுவும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நிர்வாகி, அரசியல் கட்சியில் உள்ள தனது நண்பர்கள் சிலருடனும் உல்லாசமாக இருக்குமாறு பெண்ணை வற்புறுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் இதற்கு அந்த கேரளா பெண் மறுத்துள்ளார். இதனால் அதிமுக நிர்வாகி அந்த கேரளா பெண்ணை தாக்கி உள்ளார். ஆத்திரம் அடைந்த பெண், என்னையே நீ அடிக்கிறீயா? என கேட்டு அந்த நிர்வாகியை சரமாரியாக அடித்து, சட்டை, லுங்கியை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கினார். அடி தாங்க முடியாமல் அந்த நிர்வாகி வீட்டுக்குள் ஓடியுள்ளார். வடிவேல் பட பாணியில் நடந்த இந்த காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இளைஞரின் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு L. முருகன் ஆறுதல்..!

திருநெல்வேலியை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் இளைஞரை வழிமறித்த கும்பல், அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில், இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தகவல் அப்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் தவறான தகவலை பரப்பி வருவதாக திருநெல்வேலி மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததாகவும், வீடியோவில் இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் கா.ராமச்சந்திரன் 426 பயனாளிகளுக்கு ரூ.12.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நீலகிரி மாவட்டம் உதகையில் 426 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார். நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம், 100 பழங்குடியினர்களுக்கு ரூ.5 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 115 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வங்கிகள் மூலம் கடனுதவி உட்பட 426 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் வழங்கினார்.

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கல்..!

தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 6 பத்திரிகையாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் ரூ.10,01,206/- நிதியுதவி வழங்கினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 14.1.2008 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி புதிய திட்டமாக பத்திரிகையாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டது. அன்று அரசின் 1 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ நிதியுதவி வழங்கிட வழி செய்யப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தி-மக்கள் தொடர்புத்துறையின் பத்திரிகையாளர் நல நிதித் திட்டத்தின் கீழ் 19.7.2022 அன்று பிறப்பித்த அரசாணையின்படி பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது ஏற்படும் மருத்துவச் செலவினை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நிதியுதவியாக ரூ 2 இலட்சத்து 50 ஆயிரம் வரையும் பத்திரிகையாளர் ஓய்யூதியம் பெறுபவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதித் தொகையிலிருந்து 50 சதவிகித தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பத்திரிகையாளர் நலநிதித் திட்டத்தின் கீழ் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமைச் செயலகத்தில் உடல் நலம் குன்றி மருத்துவம் சிகிச்சைகள் மேற்கொண்ட 6 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் 10 இலட்சத்து ஆயிரத்து 206 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

L. முருகன் விமர்சனம்: கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் L. முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை L. முருகன் சந்திததார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே என L. முருகன் தெரிவித்தார்.

காவல் ஆய்வாளரின் கையெழுத்தை போட்டு 1.50 லட்சம் ஆட்டைய போட முயன்ற 2 காவலர்கள் பணியிடை நீக்கம்..!

காவல் ஆய்வாளரின் முத்திரையை பயன்படுத்தி, அவரை போல் போலி கையெழுத்து போட்ட 2 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மங்களபிரியா என்ற பெண் ஆய்வாளர் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, கடந்த 2 மாதங்களுக்கு முன் கடப்பாக்கம் அருகே சேம்புலிபுரம் பகுதியில் குருசாமி என்பவரை கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ததாக மதுவிலக்கு காவல்துறை கைது செய்து, அவரது வங்கி கணக்கையும் முடக்கியது.

இதற்கிடையே மதுவிலக்கு காவல்துறையால் கைது செய்யப்பட்ட குருசாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வங்கி கணக்கில் சுமார் ரூ.6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது. இதுகுறித்து மதுவிலக்கு காவல் ஆய்வாளரிடம் குருசாமி விசாரித்தார். அதற்கு அவர், முறையாக நீதிமன்றத்தை அணுகவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.

இந்நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி, தற்போது கூவத்தூர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ள தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரிடம் இப்பிரச்னை குறித்து சாராய வியாபாரி குருசாமி ஆலோசனை கேட்டுள்ளார்.

ரூ.1.50 லட்சம் கொடுத்தால் குருசாமியின் வங்கி கணக்கை மீண்டும் இயக்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பேரம் பேசியுள்ளனர். இந்த பேரதிற்கு சாராய வியாபாரி ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து தலைமைக் காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய இருவரும், மதுராந்தகம் காவல் ஆய்வாளரின் அலுவலக முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தி, ஒரு போலி பத்திரம் எழுதி, அதில் காவல் ஆய்வாளர் மங்களபிரியாவின் கையெழுத்தை போலியாக போட்டு, சாராய வியாபாரியிடம் கொடுத்துள்ளனர்.

இக்கடிதத்தை பெற்றுக் கொண்ட சாராய வியாபாரி, கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கி மேலாளரிடம் வழங்கியுள்ளார். அக்கடிதத்தை ஆய்வு செய்த வங்கி மேலாளர், சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார். அதற்கு, நான் எந்தவொரு கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என்று பெண் காவல் ஆய்வாளர் மங்களபிரியா கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காவல் ஆய்வாளர் முழு விசாரணை நடத்தியபோது, இக்கடிதத்தை போலியாக தயாரித்து தலைமைக் காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமை காவலர்கள் கோபிநாத், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

L. முருகன் விமர்சனம்: மது ஒழிப்பு மாநாடு முதலமைச்சரும், திருமாவளவன் நடத்தும் ஒரு நாடகம்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் L. முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை L. முருகன் சந்திததார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே என L. முருகன் தெரிவித்தார்.