துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு!” இன்று பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்.. !

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு. இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம் அன்பும், நன்றியும்! என எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மதிவதனியை அடிக்கப் பாய்வது போல் பாய்ந்த அர்ஜீன் சம்பத்..!

மாலை முரசு நடத்தும் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி மதிவதனி பேசிக் கொண்டிருக்கும்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசமாக அடிக்கப் பாய்வது போல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை முரசு நடத்தும் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், விசிக சார்பில் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் மதிவதனி, பாஜக சார்பில் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் ஆகியோர் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும், பல்வேறு அரசியல் இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் பார்வையாளர்களாகவும் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி பேசும்போது, ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பாய்ந்து வந்தார். பேசிக்கொண்டிருந்த மதிவதனிக்கு முன்பாக வேகமாக எழுந்து சென்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள், செருப்பை எடுத்து வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெறியாளர் மற்றும் விவாதத்தில் பங்கேற்றவர்கள் அர்ஜுன் சம்பத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள் மேடைக்கு வந்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர். திராவிடர் கழகத்தினர், அர்ஜுன் சம்பத் வெளியேற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து மதிவதனி பேசுகையில், “செருப்பை வைத்து அரசியல் செய்வது பாஜக, புத்தகம் படித்து முன்னேறச் சொல்வது திராவிட இயக்கம். உங்கள் செருப்பு அரசியலால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது” என தெரிவித்தார்.=

மாட்டு இறைச்சி’, ‘மீன் எண்ணையுடன்’ லட்டு சுவையாக இருக்கும் என வீடியோ வெளியிட்டு ‘பரிதாபங்கள்’ மீது பாஜக புகார்

திருப்பதி ஏழுமலையான் லட்டு விவகாரத்தை கேலியாக விமர்சித்து ‘பரிதாபங்கள்’ சேனலில் வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்ததை தொடர்ந்து, அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில காவல்துறையின் தலைமை இயக்குனரிடம் தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

‘பரிதாபங்கள்’ சேனலில் கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோரின் ‘லட்டு பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. மேலும் அந்த வீடியோவுக்காக சேனல் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டது.

வீடியோவை நீக்கினாலும், அந்த சேனலை பின் தொடருபவர்கள், அதனை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆந்திர மாநில டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘கோபி, சுதாகர் இயக்கும் ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் ‘லட்டு பாவங்கள்’ என்ற வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் இந்து மத நம்பிக்கையையும், அதன் நடைமுறைகளையும் நேரடியாக குறிவைத்து அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘மாட்டு இறைச்சி’, ‘மீன் எண்ணையுடன்’ கூடிய திருப்பதி லட்டு சுவையாக இருக்கும் என்று அவர்கள் கூறுவது, இந்த புனித பிரசாதத்தின் மத முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது.

மேலும், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் குறித்தும் அவதூறான கருத்துகள் வீடியோவில் உள்ளன. எனவே, மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கலில் சினிமா பாணியில் வடமாநில பவாரியா கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் ஏ.டி.எம் கொள்ளையர்களை விரட்டி சென்ற காவல்துறை போலீஸ் துப்பாக்கி முனையில் 5 பேர் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியது. கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையத்தில் பிடிபட்டனர்

கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் எந்திரங்களை கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து பணம் கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை கன்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தமிழ்நாடு தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் வழிகளில் ஏராளமான வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி வந்துள்ளது.

தாறுமாறாக சென்ற கன்டெய்னர் லாரியை காவல்துறை 30 வாகனங்களில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். கன்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்றதால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி ஓட்டுநரை சுட்டுக் கொன்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்களின் கன்டெய்னர் லாரியை காவல்துறை மடக்கிப்பிடித்தனர்.

துப்பாக்கியுடன் கன்டெய்னர் லாரியில் வந்த கொள்ளையர்களை காவல்துறை பிடித்தனர். குமாரபாளையம் அருகே காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

ராஜஸ்தான் கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரிக்குள் கார், ஏ.டி.எம். இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மற்றொரு ஏடிஎம் எந்திரத்தையும் தூக்கி வந்தனர். ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்டது பவாரியா கும்பல் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்த கும்பலை துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழ்நாடு காவல்துறை பிடித்துள்ளது. கன்டெய்னர் லாரியில் சென்று நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளையடிப்பது பவாரியா கும்பலின் வழக்கம். ஏ.டி.எம் கொள்ளையில் மட்டுமின்றி கேரளாவில் நடந்த 2 கிலோ தங்கம் வழிப்பறியிலும் பிடிபட்டவர்களுக்கு தொடர்பா என விசாரணை நடைபெற்று வருகிறது.

சீமான் விமர்சனம்: திமுகவில் இருந்தால் தியாகம்…! அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல்வாதியா..?

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.” என சீமான் பரபரப்பாக பேசினார்.

அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து முதல்வர் ஸ்டாலின், தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக, வ.உ.சி போல சிறையில் செக்கிழுத்தவர்கள், 9-10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து, தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது.

வீரதீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவையெல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுக. அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே, அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது, வருக வருக, வீரதீர தியாக செயல் என்று கூறுவதும் திமுகதான்.

திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் நல்ல அமைச்சர், அவ்வளவுதான்.” என சீமான் கடுமையான விமர்ச்சித்தார்.

விஜய பிரபாகரன்: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது..! கொள்ளையர் கையில் சாவி கொடுப்பது போல..!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு தேமுதிக விஜய பிரபாகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக விஜய பிரபாகரன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, பேசிய விஜய பிரபாகரன், ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் செந்தில் பாலாஜி. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், கொள்ளையர் கையில் மீண்டும் சாவியை கொடுப்பது போன்றது. இதில் ஏதோ டீலிங் உள்ளது போன்றுதான் அர்த்தம் என தெரிவித்தார்.

சீமான்: நாட்டுல லட்டு பரபரப்பு.. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு.. பரபரப்புக்கு பஞ்சமே இல்லை…!

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.” என சீமான் பரபரப்பாக பேசினார்.

சீமான் கடுமையான விமர்சனம்: செந்தில் பாலாஜி சிறை செல்ல காரணமே திமுக தான்..!

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில்தான், அவர் சிறை சென்று வந்துள்ளார். அவரை சிறைக்கு அனுப்பியதே திமுகதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, “நமது நாட்டில் எதுதான் பரபரப்பு இல்லை. லட்டு பரபரப்பு. ஜிலேபி பரபரப்பு. பஞ்சாமிர்தம் பரபரப்பு. ஜாமீன் கிடைப்பது பரபரப்பு, என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.” என சீமான் பரபரப்பாக பேசினார்.

அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து முதல்வர் ஸ்டாலின், தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “திருடுவது, கமிஷன் வாங்குவது, லஞ்சம் பெறுவது, டாஸ்மாக் சரக்கை கூடுதலாக விலைவைத்து விற்பனை செய்வது, 10 ரூபாயைக் கூட்டி விற்பது, நேரம்காலம் இல்லாமல் விற்பனை செய்வது, கள்ளச்சரக்கு ஓட்டுவது, இவையெல்லாம் தியாகத்தில் வருகிறது. எனவேதான், அவருடைய தியாகத்தைப் போற்றியுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக, வ.உ.சி போல சிறையில் செக்கிழுத்தவர்கள், 9-10 ஆண்டுகளாக சிறையில் செத்து மடிந்து, தூக்கில் தொங்கியவர்கள் நினைத்துதான் எனக்கு கோபம் வருகிறது. செந்தில் பாலாஜி பிணையில் வந்ததற்கு பெயர் தியாகம் என்றால், நம் முன்னோர்கள் செய்ததற்கு பெயர் என்ன? இந்த நாட்டில் மணல் அள்ளி விற்பது, மலையைக் குடைந்த விற்பது, சாராயம் காய்ச்சுவது எல்லாம் தியாகத்தில் வருகிறது.

வீரதீர செயல்களில் பெருமைமிக்க செயல்களில் இவையெல்லாம் வருகிறது. இந்த வழக்கை போட்டது யார்? திமுக. அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறை சென்று வந்துள்ளார். எனவே, அவரை சிறைக்கு அனுப்பியவர்களும் திமுகதான். இப்போது ஜாமீனில் வரும்போது, வருக வருக, வீரதீர தியாக செயல் என்று கூறுவதும் திமுகதான்.

திமுகவில் இருந்தால் தியாகம். அடுத்தக் கட்சியில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டாகிவிடும். அவர் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்பதால், திமுக அவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவார்கள். யார் அதிகமாக வசூலித்து கப்பம் கட்டுகிறார்களோ அவர் நல்ல அமைச்சர், அவ்வளவுதான்.” என சீமான் கடுமையான விமர்ச்சித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்: செந்தில் பாலாஜி முன்பு துரோகி..!, இப்போது தியாகியா..!?

முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி முன்பு துரோகியாக இருந்தார், அவரது கட்சிக்கு வந்தவுடன் இப்போது தியாகியாகி விட்டாரா என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில், செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது தற்போதைய முதல்வர்…. எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது துரோகி தன் கட்சிக்கு வந்தவுடன் தியாகியா ?

சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டா சிறை சென்றார்….தியாகி என்று கூறுவதற்கு? INDI… கூட்டணி இந்த ஜாமீனை கொண்டாடுகிறது இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல .

காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று வழக்காடு மன்றம் சொன்னவரை மந்திரி ஆக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என சிந்திக்கிறது திமுக. முறைகேடு செய்வதில் உறுதியாக இருந்தவரை சிறையில் உறுதியாக இருந்தார் என்று பாராட்டுகிறார் முதல்வர். 471 நாட்கள் சிறையில் வைத்திருந்தது பலமுறை வழக்காடு மன்றத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டதனால். மத்திய அரசினால் அல்ல .

எமர்ஜென்சி காலத்தில் கூட இந்த அடக்குமுறை இல்லை என முதல்வர் சொல்கிறார் எமர்ஜென்சி அடக்குமுறை கொண்டு வந்தவரோடு கூட்டணியில் இருந்து கொண்டு. ஆக ஒட்டுமொத்தமாக முறைகேடு வழக்கில் கைதான வரை உறுதியானவர் என்றும் பாராட்டுவது வேடிக்கை என தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் குழப்பம்..! செந்தில் பாலாஜி ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல்..!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இதைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. எப்போது செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என அவரது ஆதரவாளர்கள் சிறை வாசலில் குவிந்து காத்துக் கிடக்கின்றனர்.

செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுக்கிறேன் என சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

மேலும், வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளி வைத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை சற்று நேரம் முன்பு நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். அப்போது, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். விசாரணை அதிகாரி முன்பு தாக்கல் செய்யுங்கள்.

பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடவில்லை” என நீதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு, “விசாரணை அதிகாரி முன்பு இந்த நேரத்தில் எப்படி பிணை உத்தரவாதத்தை தாக்கல் செய்ய முடியும் என செந்தில் பாலாஜி தரப்பி தெரிவித்தது. இதனால், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் இன்று வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.