லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது..!?

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் காவல்துறை காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் MLA -வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை காவல்துறைக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. இத்தனை தொடர்ந்து அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை காவல்துறை முடிவு செய்து இதற்கான அன்மோல் பிஷ்னோய் கைது செய்ய மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

சீமான்: திமுகவினரிடம் ரெய்டும் ஏன் வரவில்லை..! வராது கப்பம் சரியாக கட்டரங்க..!

ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார்.

அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

த.வெ.க – அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது. நாங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான். அவர் அவரோட போறாரு. இவர் இவரோடு போறாரு என இந்த காரை அவர் வைத்திருந்தார். இப்ப யார் வைத்திருக்கிறார் என்ற நகைச்சுவை எல்லாம் நான் சொல்ல தயாராக இல்லை.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம் என சீமான் தெரிவித்தார்.

எச்சரிக்கை: அலுமினியம் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்..!

சமூக வலைதளங்களில் உணவகம் ஒன்றில் பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் வாங்கி வந்து அந்த உணவை திறந்து சாப்பிடும் போது அலுமினியம் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த வீடியோ, உணவு பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது

ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் அலுமினியம் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்கினால் அந்த கடையின் உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிப்பது மட்டுமின்றி அவரது கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு சீமான் மாலை அணிவித்து மரியாதை..!

வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு வ.உ.சிதம்பரனாரின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என மதுரையில் சாபம் விட்ட செல்லூர் ராஜு..!

திமுக ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள் எனவே திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, “இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின். இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.

ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன. நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்” என செல்லூர் ராஜு பேசினார்.

தவெக அறிவிப்பு: அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை..!

தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கழகத் தலைவர் அவர்கள் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.

ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்.

எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று இச்செய்திக் குறிப்பு வெளியிடப்படுகிறது என எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

சீமான்: திமுகவிற்கும் பாஜகவிற்கும் கள்ள உறவில் இல்லை..! நேரடி கூட்டணி இருக்கிறது..!

திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. வ.உ.சிதம்பரனாரின் 88 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, வ.உ.சிதம்பரனார், கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சீமான் பேசுகையில், வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால் அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா? ஒருத்தரை ஒருத்தர் அவர்கள் பாராட்டிக் கொண்டு, போற இடமெல்லாம் சூப்பர் சூப்பர் என்று சொல்கிறார்கள் என முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார்.

என் கூட ஒருமுறை வாருங்கள், நான் ஆய்வுக்கு போகிறேன், இந்த மனுக்களை கொடுத்துவிட்டு கவலையோடும், கண்ணீருடன் கதறும் மக்களை ஒருமுறை கேளுங்கள், ஆட்சியாளர்கள் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார் என்றால் அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும் மக்களும் போற்ற வேண்டும்.

மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான திமுகவினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை, அவர்களுக்கு வராது. அதற்கு காரணம் அவர்கள் கரைப்படியாத கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டிக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்.

காலையில் அப்பாவை சந்தித்தால் மாலையில் மகனை சந்திக்கிறார். ஏதோ சம்மந்தி போல போய் சந்தித்து கொள்கிறார்களே அது நேரடியா, மறைமுக கூட்டணி என்றார். திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என சீமான் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியை ஆற்றில் சிக்க வைத்த கூகுள் மேப்..! பத்திரமாக மீட்ட தமிழ்நாடு காவல்துறை..!

கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி சென்று ஆற்று சகதியில் சிக்கிய கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை நள்ளிரவில் தமிழக காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இன்று பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் செல்லவேண்டிய இடத்தை தேர்வு செய்தல் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணித்து நம்மை அங்கு சென்று விட்டுவிடும் அளவிற்கு கடந்த 2008-ஆம் கூகுள் மேப் வசதியை உலகளவில் அனைத்து இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

நாம் இதுவரை செல்லாத பகுதிகளுக்குக் கூட யாரும் உதவி கேட்காமலேயே எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். மேலும் அந்த வழியில் உள்ள பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் கூகுள் மேப் வசதியுடன் காரை இயக்கிய ஓட்டுனர் செல்ல முயன்றபோது அங்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது நாடறிந்ததே.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கண்ணூரில் கூகுள் மேப் பார்த்து இயக்கப்பட்ட நாடகக் குழுவினர் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 9 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியும் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூகுள் மேப் பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தர் 5 மணி நேரமாக ஆற்றுக்குள் சகதியில் சிக்கிய நிலையில் அவரை தமிழ்நாடு போலீசார் மீட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பரசுராமா என்ற ஐயப்ப பக்தர் மாற்றுத்திறனாளிகள் ஓட்டிச் செல்லக்கூடிய தனது மூன்று சக்கர வாகனத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவில் சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, தனி ஒருவனாக மீண்டும் கர்நாடகா கிளம்பி உள்ளார். கூகுள் மேப் பார்த்தபடி வத்தலகுண்டு வழியாக சென்றபோது, இரவில் வழி தவறி வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே ஆற்று சகதியில் சிக்கிக் கொண்டார். பரசுராமா இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு ஒரு மணி வரை வழி தெரியாமல் சகதியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.

செய்வதறியாது திகைத்த மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா, கர்நாடக காவல்துறையினருக்கு இந்த தகவல் தெரிவித்துள்ளார். இத்தனை தொடர்ந்து கர்நாடகா காவல்துறை, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி இரவு ரோந்து காவலர்கள் நள்ளிரவில், ஆற்றுப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி அலைந்து அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமாவை பத்திரமாக மீட்டு பட்டிவீரன்பட்டி காவல் நிலையம் அழைத்துச்சென்று, அவருக்கு உணவு வழங்கி உபசரித்தனர். மாற்றுத்திறனாளியான ஐயப்ப பக்தர் பரசுராமா மீட்கப்பட்ட தகவல் தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையில் மூலமாக கர்நாடக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆற்று சகதியில் சிக்கிய மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்ட தமிழ்நாடு காவலர்களை கர்நாடக காவல்துறை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு: திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை..!

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன, ஆகையால், இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது, யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது என மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மதுரையிலுள்ள ஓபுளா படித்துறை பகுதியில் நேற்று நடந்தது. இந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் , முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காயத்திரி ரகுராம், “போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

ஏற்கனவே திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர். தன்னை தானே சமூக நீதி காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, இதுவரை சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள்? தேர்தலுக்கு முன்பு வரை எல்லா பெண்களுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் கட்சி நிர்வாகிகள், வேண்டியவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் தரும் வகையில் திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆகையால், இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.. உதயநிதி ஒரு செங்கல்லை வைத்து நம்மை ஏமாற்றினார்.. அடுத்த முறை செங்கல்லுடன் தொகுதிக்கு வந்தால் நீங்களே தக்க பதிலைக் கொடுங்கள்” என காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

H. ராஜா கேள்வி: செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!?

செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!? என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் H. ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு  பதிலளித்தார்.

அப்போது, “செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.