பேருந்தில் கட்டணம் தர மறுத்த பெண் காவலர்: பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் மாறி மாறி அபராதம் விதிக்கும் கொடுமை..!

ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த விவகாரம் இரு மாநில போக்குவரத்து காவல்துறை இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அபராதம் விதித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து கடந்த 22-ஆம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல அக்காவலரிடம் நடத்துநர் ரூ.50 பயணக் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் அரசு ஊழியர் என கூறி பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்துள்ளார்.

இதற்கு நடத்துநர், ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு இலவசப் பயணம் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார். இதன் பிறகும் பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்று மோதலாக உருவெடுத்தது. பயணிகள் கூறியும் பெண் காவலர் பயணச்சீட்டு வாங்கவில்லை, பேருந்தை விட்டு இறங்கவும் இல்லை. இறுதியில் பெண் காவலருக்காக பயணி ஒருவர் ரூ.50 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது

இத்தனை தொடர்ந்து , ஹரியானா போக்குவரத்து காவல்துறை, இதனை ஒரு அவமானமாக கருதினர். இதனால் தர்ஹரா வந்த சுமார் 90 ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பினர். இதற்கு ஏதாவது ஒரு விதிமீறல் காரணமும் காட்டியிருந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்தான் போக்குவரத்து காவல்துறை தங்கள் மாநிலம் வந்த 100-க்கும் மேற்பட்ட ஹரியானா அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததுடன் 8 பேருந்துகளை காவல் நிலையங்களில் நிறுத்திக் கொண்டனர். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் இந்த இரு மாநிலங்களை ஆட்சி செய்யும் பாஜக அரசு என்ன செய்ய போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி ஆட்டைய போட்ட பாஜக நிர்வாகி..!

தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியை சேர்ந்த திருப்பூர் வடக்கு தொழில் பிரிவு மண்டல பாஜக செயலாளரான பிரதாப் சிங். திருப்பூர் மண்ணரை சத்யா காலனி பகுதியை சேர்ந்த பாஜக வடக்கு தொழில் பிரிவு மண்டல செயலாளர் செந்தில்குமார் என்பவர் நடத்திய சிட் பண்ட் நிறுவனத்தில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார். பிரதாப் சிங் 53 வாரங்களுக்கு வாரம் ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10,600 செலுத்தினார்.

மேலும் பிரதாப் சிங்கின் உறவினர்களும் தீபாவளி சிறு சேமிப்பில் சேர்ந்து ரூ.2.39 லட்சம் செலுத்தியுள்ளனர். இதேபோல் 100-க்கும் மேற்பட்டோர் இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து ரூ.1.5 கோடி வரை பணம் செலுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த பணத்தை திரும்ப கேட்டபோது செந்தில்குமார் இழுத்தடித்து அலுவலகத்தை காலி செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து பிரதாப் சிங் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டமோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகின்றது.

சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்..!

சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர். சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ஆண்டிச்சிநகரை சேர்ந்த ஷாஜூ, தொழிலதிபரான இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க மாநகராட்சியின் 5-வது வார்டு வரி வசூலிப்பாளர் ராஜாவை அணுகியுள்ளார். அப்போது, வரி வசூலிப்பாளர் ராஜா சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் ஷாஜூயிடம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷாஜூ, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். ஒழிப்புத்துறையில் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை ஷாஜூயிடம் கொடுத்து , அவரி வசூலிப்பாளர் ராஜாவிடம் கொடுக்கும்படி அறியுவுறுத்தி உள்ளனர். ஒழிப்புத்துறையில் அறிவுரைப்படி அஸ்தம்பட்டி வார்டு அலுவலகத்திற்கு சென்று வரி வசூலிப்பாளர் ராஜாவிடம் நேற்று வழங்கினார்.

அங்கு, சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை, ராஜாவை மடக்கிப்பிடித்தனர். மேலும், வெளியில் நிறுத்தியிருந்த ராஜாவின் இருசக்கர வாகனத்தில் பைக்கில் ஒழிப்புத்துறை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் வரி வசூலிப்பாளர் ராஜாவை கைது செய்தனர்.

தவெக நிர்வாகிகள் மறைவு.. இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன்.. ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை..!

இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை என இளைஞரணி நிர்வாகிகள் உயிரிழந்த உறவினர்கள் வருத்தம். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்,  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெக மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சீனிவாசனின் உறவினர்கள், உயிரே பறிபோகியும் கட்சியில் இருந்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. நாங்கள் இழப்பீடு எல்லாம் கேட்கவில்லை. ஒரு ஆறுதல் தான் எதிர்பார்க்கிறோம். இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை. சீனிவாசன் உயிருடன் இருந்தபோது விஜய்காக அவ்வளவு செலவு செய்துள்ளார் அவரின் மறைவுக்கு கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என உறவினர்கள் பேசியிருந்தார்.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சிக்கு நேரில் சென்று, நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது நிர்வாகிகளின் உறவினர்கள், ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தவெக மாநாட்டில் டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

மா.சுப்பிரமணியன் தரமான பதில்: “எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்து.. எங்களின் கவனம் சிதறாது..!”

எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என திமுக மீதான தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்யின் விமர்சனம் குறித்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. தவெக மாநாட்டில் விஜய் பேசும்போது, “மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல் ஆட்சி’ என்று கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதசார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்பட உள்ளோம்” என விஜய் பேசினார்.

விஜய் விமர்சனம் செய்துள்ளது பற்றி சென்னை சைதாபேட்டையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழகத்துக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்.

திமுகவை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சி பணிக்கு ஒரு சிறு துரும்பைகூட எடுத்து போட்டு இருக்க முடியாது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதறாது, சிதையாது” என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

ஆர்.பி.உதயகுமார்: விஜய்யின் தவெக மாநாடு அதிமுக போராட்டத்தின் மறுவடிவம்..!

விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள் முனையளவும் பாதிப்பில்லை. அதிமுக போராட்டத்தின் மறு வடிவம்தான் விஜய்யின் தவெக மாநாடு என எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் வருகிறார். அவருக்கு அதிமுக ஜெ., பேரவை சார்பில் வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும், பயிற்சி வகுப்பும் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அதன்பின் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்தநாள் மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வருகின்ற 30-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் பசும்பொன் கிராமத்துக்கு வந்து தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அவருக்கு ஜெ. பேரவை சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர் படையினர், சீருடை அணிந்து வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து பசும்பொன் வரை இந்த தொண்டர் படையினர் செல்கின்றனர்.

விஜய்யின் மாநாடு சிறந்த தொடக்கம். கொடி ஏற்றி பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். இளைஞர்களின் தன்னெழுச்சியாக மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவுக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதற்கு, அதிமுக முன்னெடுத்த போராட்டம் எப்படி ஒரு சான்றாக இருக்கிறதோ, அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், உதயநிதியை துணை முதலமைச்சராக்கி, குடும்பத்தை முன்னிலைப்படுத்திய திமுக ஆட்சியை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி தனது மகனை முன்னிறுத்தியதால், ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்கக் கூடாது என்று எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். அப்படிப்பட்ட எம்ஜிஆரை சுட்டிக்காட்டி வழிகாட்டியாக விஜய் ஏற்றுக் கொண்டார். தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக அலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கே.பழனிசாமியை முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர்.

கலைத் துறை கருணாநிதி குடும்பத்தில் சிக்கி சின்னபின்னமாகி உள்ளது. தொழில் துறையும் சபரீசன் பிடியில் சிக்கி உள்ளது. முதலமைச்சராக கே.பழனிசாமி இருந்தபோது திரைப்படம் வெளியிட அரசிடம் விஜய் ஒத்துழைப்பை நாடியபோது அவருக்கு உதவினார். இது விஜய்க்கு நன்றாகவே தெரியும். விஜய் கட்சி தொடங்கியதால் அதிமுகவுக்கு எள்முனை அளவும் பாதிப்பு இல்லை. எங்களுடைய போராட்டத்தின் மறு வடிவமாக விஜய்யினுடைய தவெக மாநாட்டை பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தேவேந்திர பட்னாவிஸ்: ‘வாக்கு ஜிகாத்’ வெற்றி பெறாது..!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு ஜிகாத் வெற்றி பெறாது என துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். வருகின்ற நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பாஜக ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அந்த மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் ‘வாக்கு ஜிகாத்’ விவகாரம் எதிரொலித்தது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நோக்கத் தோடு அவர்கள் செயல்பட்டனர். ஆனால் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் ‘வாக்கு ஜிகாத்’ வெற்றி பெறாது.

கடந்த மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் அகாடி பிரதமர் மகா விகாஸ் பொய்களை பரப்பியது. நரேந்திர மோடி சாசனத்தை மாற்றப் அரசமைப்பு போகிறார். இடஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும் என காங்கிரஸும் அதன் கூட்டணி தலைவர்களும் பொய் பிரச்சாரம் செய்தனர். தற்போது மக்கள் உண்மையை புரிந்து கொண்டனர்.

அரசமைப்பு சாசனம், இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக பிரதமர் நரேந்திர மோடி செயல்படுகிறார். எனவே வரும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பாண்டவர்களை போன்றது. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி கவுரவர்களை போன்றது. மகாபாரதத்தை போன்று மகாராஷ்டிராவில் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே போர் நடைபெறுகிறது. இந்த போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஆர்ப்பாட்ட கூட்டணி ஆகும். புல்லட் ரயில் உட்பட அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் எதிர்த்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

எங்களைப் பொறுத்தவரை வளர்ச்சித் திட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறோம். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, மகாராஷ்டிராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் அமைக்கப்படும் வடவன் துறைமுகம் அடுத்த சில ஆண்டுகளில்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன்மூலம் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகம் பெறும் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

சர்வதேச சாதனை படைத்த 10 மாத பெண் குழந்தை..!

சென்னை, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் வியட்நாம் நாட்டில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். மணிகண்டனின் மனைவி பெயர் ரேவதி. இவர்களுக்கு மகிழினி என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.

சுட்டியான இந்த குழந்தை உலக நாடுகளின் தேசிய கொடிகள், விலங்குகள், பறவைகள், காய்கறிகள், பழங்களின் புகைப்படங்களை காட்டினால் அதன் பெயர்களைக் கூறும் அளவுக்கு குழந்தை நினைவாற்றலுடன் விளங்கி வருகிறது. எடுத்துகாட்டாக ஒரு கேள்விக்கு 2 பதில்களில் இருந்து சரியான விடையை தேர்வு செய்வதுபோல், குழந்தை மகிழினி காய்கறிகள், பறவைகள், தேசிய கொடிகளின் 2 புகைப்படங்கள் வைத்து, அதன் பெயர் கூறினால் சரியானவற்றை தேர்வு செய்து அசத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சாதனையாளர்களுக்கான “இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டு” போட்டியில் கலந்துகொண்டு ஒரு நிமிடத்தில் தாய் ரேவதி கூறும் 12 நாட்டின் தேசியக் கொடியை ஒரு நிமிடத்தில் மளமளவென சுட்டிக்காட்டி குழந்தை மகிழினி அசத்தி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்காக அக்குழந்தைக்கு சர்வதேச சாதனையாளர் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. குழந்தை மகிழினியின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

விஜய்: கொள்கை ரீதியாக பாஜக, அரசியல் ரீதியாக திமுக எங்கள் எதிரிகள்…!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. மேலும் தவெகவின் கொள்கை வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு, உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என விஜய் பேசினார்.