திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக வி.டி. இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சார்பு நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞராக வி.டி. இளங்கோவன் நியமிக்கப்பட்டு உள்ளார். பதவி ஏற்றுக்கொண்ட வி.டி. இளங்கோவனுக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாவீரன்நவநீதன் மற்றும் வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.