இந்தியாவில் குழந்தை கைவிடல் என்பது சட்டப்படி குற்றமாகும். Juvenile Justice (Care and Protection of Children) Act – அதாவது சிறார் நீதிச் சட்டத்தின்படி, குழந்தைகளை பொது இடத்தில் கைவிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே ஓடிப்போன தாய் கைது செய்யப்பட்டால் சட்டப்படி குழந்தை கைவிடல் வழக்கின் கீழ் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ஏறினார். பேருந்து பாதி தூரம் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண் திடீர்னு எழுந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால் குழந்தைகளை மட்டும் அவர் பேருந்திலேயே விட்டுச்சென்றார்.நீண்ட நேரமாக தாயை காணாமல் பேருந்தில் இருந்த அந்த இரண்டு குழந்தைகளும் பயந்து கதறி அழ ஆரம்பித்தன.
குழந்தைகளின் அழுகையைப் பார்த்த பேருந்து நடத்துநர் அவர்களிடம் விசாரித்தார். அப்போது குழந்தைகளின் சட்டைப்பையில் ஒரு சிறிய துண்டு பேப்பர் இருப்பது தெரியவந்தது. அதில், “நான் என் விருப்பப்படி வாழச்செல்கிறேன். பிள்ளைகளை தாத்தாவிடம் ஒப்படைத்துவிடுங்கள். அத்துடன் குழந்தைகளின் தாத்தாவின் போன் நம்பரையும் எழுதி வைத்திருந்தார்..
இதையடுத்து பேருந்து நடத்துநர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல்துறையினர் பேருந்தில் கைவிட்ட குழந்தைகளை மீட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர். துண்டுச்சீட்டில் இருந்த போன் நம்பரை வைத்து காவல்துறையினர் குழந்தைகளின் தாத்தாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். காவல் நிலையத்திற்கு தாத்தா வந்தபோது, பேரக்குழந்தைகளை கண்டு கண்ணீர் விடுவார் என்று நினைத்தால், அந்த தாத்தாவோ, பேரக்குழந்தைகளின் நலனில் பெரிதாக அக்கறை காட்டவில்லை “என் மகள் வீட்டில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்” என்று புலம்பி கொண்டிருந்துள்ளார்.
கள்ளக்காதலனுடன் ஓடிய அந்தப் பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தைகளை பேருந்தில் தனியே விட்டு சென்றது தாய்மைக்கே களங்கம் என சமூகத்தில் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. இது போன்ற சம்பவங்களில் குழந்தைகள் நலக்குழு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. தன் பிள்ளைகளைவிட கள்ளக்காதலை முக்கியம், அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றவே பிடிக்கும் என்று தாய் பகிரங்கமாக சொல்லிவிட்டு போன இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.