குத்தகை வீ ட்டை சொந்தமாக்கி தருவதாக மோசடி செய்த இளைஞர் கைது

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டை ரூ.20 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து அண்ணாதுரை என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வீட்டின் உரிமையாளருக்கு நன்கு பழக்கமானவர் சென்னை வள்ளுவர் கோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில், குத்தகைக்கு இருக்கும் வீட்டையே ரூ.50 லட்சத்துக்கு சொந்தமாக வாங்கி தருகிறேன் என மாரியப்பன் உறுதி அளித்துள்ளார். இதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட மாரியப்பன், மியூச்சுவல்ஃபண்டில் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீத லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையும் உண்மை என நம்பி அண்ணாதுரை ரூ.35 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால், வீட்டை வாங்கி கொடுக்காமலும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டிகூட கொடுக்காமலும் ஏமாற்றி உள்ளார். அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் காவல் ஆணையர் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அண்ணாதுரையை ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து மாரியப்பன் தலைமறைவு ஆனார். தலைமறைவாகஇருந்த மாரியப்பனை காவல்துறை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.