தொல் திருமாவளவன்: மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..!

மதுரை ஆதீனத்தின் பேட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகத்தை தூண்டும் வகையில் இது உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் அனைததுலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள காரில் சென்ற மதுரை ஆதீனம் ஞான சம்பந்த தேசிய பரமாச்சாரியார் கார் உளுந்தூர்ப்பேட்டை சேலம் ரவுண்டானாவை கடந்து சென்றபோது மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், கார் சேதமடைந்து, காரில் தூங்கிக் கொண்டிருந்த ஆதீனம் காயமின்றி உயிர் தப்பியதாகவும் சொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “தொடர்ந்து சமூகப்பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால், வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தன்னை கொல்ல திட்டமிட்டிருக்கலாம்” விபத்தை ஏற்படுத்திய நபர்கள் குல்லா அணிந்திருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள் என இஸ்லாமியர்கள் அவர்கள் என்பதை மறமுகமாகக் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மதுரை ஆதீனம் வாகன விபத்து விவகாரத்தில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும், மதுரை ஆதீனத்தின் கார் தான் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளது என தமிழக காவல் துறை விளக்கம் அளித்தது. மேலும், அதுதொடர்பாக காவல் துறை வெளியிட்ட CCTV-யில், மதுரை ஆதீனம் கார்தான் மற்றொரு கார் மீது உரசிச் செல்வது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CCTV காட்சிகள் வெளியானதை அடுத்து பொய் தகவல்களை பரப்பி மதக் கலவரம் உண்டாக்க முயற்சித்த மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை, கோவை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், “மதுரை ஆதீனம் உயிருக்கு ஆபத்து என்று வெளியான தகவல் உண்மையில் அதிர்ச்சியை அளித்தது. அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், காவல் துறை வெளியிட்ட சிசிடிவி காட்சிகளில் அவ்வாறான கொலை முயற்சி சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை, அது இயல்பாக நடைபெற்ற ஒரு விபத்து என்று தெரிய வந்துள்ளது.

மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி, சமூக பதற்றம் ஏற்படாத வகையில் பொறுப்புடன் கருத்து சொல்ல வேண்டிய கடமைப்பட்டவர். சமூக அமைதியை நிலைநாட்டுவதில் அவருக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், தன்னை கொல்ல முஸ்லீம்கள் முயற்சி செய்தனர், இதற்கு பின்னால் பாகிஸ்தான் சதி உள்ளது என்று எல்லாம் பேசியது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சியாகவும் இது உள்ளது.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை இந்து சமூகத்தை தூண்டும் வகையில் இது உள்ளது. இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை தூண்டும் குற்றச் செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் மதுரை ஆதீனத்தின் பேட்டியை சாதாரணமாக கடந்து சென்றுவிடக்கூடாது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தொல். திருமாவளவன்: மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதே மோடியின் நோக்கம்

மாணவர்களைப் பள்ளிப் படிப்பின் போதே வீட்டுக்கு அனுப்பி இடைநிற்றலின் சதவீதத்தை உயர்த்துவது தான் மோடி அரசின் நோக்கம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொல்.திருமாவளவன் பதிலளித்தார்.

அப்போது, “புதிய கல்விக் கொள்கையின் மூலம் CBSE பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவேதான், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும், அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் “100% தேர்ச்சி” என்று அறிவிக்கிற, அதாவது, “All Pass முறை” நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இப்போது மாணவர்கள் தேர்ச்சிப் பெறுவதற்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் (30%) எடுக்க வேண்டும் என்று ‘தேசிய கல்விக் கொள்கை’ வலியுறுத்துகிறது.

மாணவர்களைப் பள்ளிப் படிப்பின் போதே வீட்டுக்கு அனுப்பி இடைநிற்றலின் சதவீதத்தை (Drop-out Percentage) உயர்த்துவது தான் இந்த தேசிய கல்விக் கொள்கையை வகுத்தவர்களின் நோக்கமாகும்; மோடி அரசின் நோக்கமாகும். முடிந்தவரை மாணவர்களைப் பள்ளிப் படிப்பிலேயே வடிகட்டிவிடுவது, அதன்மூலம் அவர்களின் அவரவரின் குலத்தொழிலுக்கு அனுப்புவது என்பது தான் அவர்களின் உள் நோக்கம். அதனால்தான் தேசிய கல்விக் கொள்கையைக் கட்டாயமாக்கித் திணிக்கிறார்கள்.

இந்நிலையில் தான், தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. ஆகவேதான் இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாட்டுக்குக் கல்விக்கென நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருகிறார்கள். ஜனநாயக சக்திகள் இதனைப் புரிந்து கொண்டு தேசிய அளவில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

பன்னிரண்டாம் வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்து. 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு என தொடர்ந்து அடுத்தடுத்துப் பொதுத் தேர்வுகளை வைத்து வடிகட்டி மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வேலையை ஃபாசிச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தொல். திருமாவளவன் விளக்கம்: பீகார் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு

பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவில் அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்! இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சமூகநீதிக் கட்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அடுத்து மேற்கொள்ளப்பட இருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு’ என்றுதான் கூறி இருக்கிறார்கள். ஆனால், எப்போது அந்தக் கணக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்படவில்லை. அடுத்த சென்சஸ் கணக்கெடுப்பு என்றால் அது 2031 க்குப் பிறகுதான். அப்போது பாஜக ஆட்சியில் இருக்கப் போவதில்லை. எனவே, இந்த அறிவிப்பு அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசும் சங் பரிவார் அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்து வந்தன. அதைத் தவிர்ப்பதற்காகவே 2011-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இதுவரை மேற்கொள்ளாமல் ஏமாற்றி வந்த பாஜக அரசு இப்போது திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் காரணம் என்ன ? என நாம் சிந்திக்க வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாறி இருக்கிறது. இராகுல் காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதைத்தான் தனது பரப்புரையில் முன்னிறுத்தி வருகிறார். அதை சமாளிப்பதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பைச் செய்து இருக்கிறது.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2036 இல் நடைமுறைக்கு வரப்போகிற மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை எப்படி 2024 பொதுத் தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக 2023 இல் நிறைவேற்றியதோ, அதேபோலத்தான் 2031 க்குப் பிறகு நடக்கப்போகும் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக அரசு அறிவிப்புச் செய்துள்ளது.

சமூக நீதியில் உண்மையிலேயே ஒன்றிய பாஜக அரசுக்கு அக்கறை இருந்தால் உடனடியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியைத் துவக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்-246, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது. அது ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 69-ஆகப் பட்டியல் இடப்பட்டுள்ளது. இது தெரிந்திருந்தும் பாஜகவைக் காப்பாற்றுவதற்காகத் தமிழ்நாட்டில் சில கட்சிகள் திமுக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பைச் செய்யவேண்டும் எனக் கூப்பாடு போட்டு வந்தன. அந்தக் கட்சிகள் இப்போதும் மாநில அரசுதான் இந்தக் கணக்கெடுப்பைச் செய்யவேண்டும் எனச் சொல்வார்களா? சென்சஸ் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கச் சொல்லி ஒன்றிய அரசை வலியுறுத்துவார்களா?

பீகார் மாநிலத் தேர்தலில் மக்களை ஏய்த்து வாக்குகளை வாங்குவதற்காகத்தான் ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது என்றாலும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதும் சமூகநீதிக் கொள்கைக்கு வெற்றி! சனாதனவாதிகளின் திட்டத்துக்குப் பின்னடைவு! எனவே, இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். இதனை நடைமுறைப்படுத்திட சமூகநீதி கட்சிகள்-இயக்கங்கள் யாவும் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்கள்… பொதுப்புழக்கங்களில் இருந்தும் நீக்கப்படும்

ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, காலனி’ என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். ‘காலனி’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என VCK எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருமாவளவன்: அதிமுக கூட்டணிக்கு சென்றிருந்தார்… நடுத்தெருவில் நின்றிருப்போம்..!

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது என ஆசைகாட்டினார்கள் அதிமுக கூட்டணிக்கு சென்றிருந்தார் இன்றைக்கு நாம் நடுத்தெருவில் நின்றிருப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். புதுச்சேரியில் விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “ஒரே நேரத்தில் 2 அணிகளுடனும் பேசுகிற ராஜதந்திர சூழ்ச்சி நமக்கு இல்லை.

பாஜகவிலும் சேரமாட்டோம், பாமகவுடனும் சேரமாட்டோம். அந்தக் கட்சிகளுடன் இடம் பெறுகிற கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பதவிதான் முக்கியம் என்றால் இப்படி எல்லாம் என்னால் பேச முடியுமா?

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜய் கூட, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தபோது கூட நாம் இருக்கிற கூட்டணி தொடர வேண்டும், அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தவன் திருமாவளவன்.

விஜய் கூட சொன்னார், அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை, ஆனால் அவரது மனசு நம்முடன் இருக்கும் என்று பேசினார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நான் அந்தக் கதவையும் மூடினேன் அதுதான் திருமாவளவன்.

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது, துணை முதல்வர் பதவியையும் கோரலாம், கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என ஆசைகாட்டிய பலர் உண்டு. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது. நான் யூகம் செய்தது சரியாகி விட்டது. ஏன் அதிமுக பாஜகவில் போய் சிக்கியது. யோசித்துப் பாருங்கள். நம்மை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிறகு அதிமுக இதே முடிவை எடுக்க வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்து இருந்தால் இன்றைக்கு நடுத்தெருவில் நின்றிருப்போம். அரசியல் நிலைப்பாடுகளை நாம் எடுக்கும்போதும் அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் எடுக்கிறோம்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

விஜய் உடனான கூட்டணி கதவையும் மூடினேன் என திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

விஜய் உடன் சேரும் வாய்ப்பு இருந்தது. அந்தக் கதவையும் நான் மூடினேன். அதிமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் இன்று நடுத்தெருவுக்கு வந்திருப்போம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். புதுச்சேரியில் விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “ஒரே நேரத்தில் 2 அணிகளுடனும் பேசுகிற ராஜதந்திர சூழ்ச்சி நமக்கு இல்லை.

பாஜகவிலும் சேரமாட்டோம், பாமகவுடனும் சேரமாட்டோம். அந்தக் கட்சிகளுடன் இடம் பெறுகிற கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பதவிதான் முக்கியம் என்றால் இப்படி எல்லாம் என்னால் பேச முடியுமா?

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜய் கூட, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தபோது கூட நாம் இருக்கிற கூட்டணி தொடர வேண்டும், அப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தவன் திருமாவளவன்.

விஜய் கூட சொன்னார், அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை, ஆனால் அவரது மனசு நம்முடன் இருக்கும் என்று பேசினார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நான் அந்தக் கதவையும் மூடினேன் அதுதான் திருமாவளவன்.

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தருவதற்கு தயாராக இருக்கிறது. கூட்டணி ஆட்சிக்கும் தயாராக இருக்கிறது, துணை முதல்வர் பதவியையும் கோரலாம், கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளையும் பெறலாம் என ஆசைகாட்டிய பலர் உண்டு. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன் என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்தி விட முடியாது. நான் யூகம் செய்தது சரியாகி விட்டது. ஏன் அதிமுக பாஜகவில் போய் சிக்கியது. யோசித்துப் பாருங்கள். நம்மை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிறகு அதிமுக இதே முடிவை எடுக்க வாய்ப்பு இருந்தது. அப்படி நடந்து இருந்தால் இன்றைக்கு நடுத்தெருவில் நின்றிருப்போம். அரசியல் நிலைப்பாடுகளை நாம் எடுக்கும்போதும் அம்பேத்கரை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் எடுக்கிறோம்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்: R.N. ரவியின் செயல்பாடுகள் ஆளுநர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல

ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சி சென்றார். திருச்சி விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என்ற உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பகை வளர்த்து, ஒற்றுமை இல்லாத சூழலை சங்பரிவார்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

மத நல்லிணக்கம்தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை என்பதை சங்பரிவார்கள் இந்த சூழலிலாதாவது புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும் இல்லை. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. 370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்கிற அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டது. அதனை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்ற போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார். இந்நிலையில், அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துவோம். காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு ஒருநாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நம்முடைய வலிமையை வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது.

அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நிய படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் தெளிவுபடுத்தி உள்ளது. பயங்கரவாதிகள் ஜாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை.

இந்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வித கற்பிதமும் தேவையில்லை. விசிக சார்பில் வஃபு சட்டத்தை கண்டித்து வரும் மே 31-ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஆளுநர் R .N . ரவிக்கும்,, தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அவர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தருவதாக எல்லோராலும் உணரப்பட்டது. துணை வேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாகியது. அந்த நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். இன்று துணைவேந்தர்கள் அந்த மாநாட்டை புறக்கணித்து உள்ளார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியின் இதுபோன்ற செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

தொல் திருமாவளவன்: பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்..!

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு தொல் திருமாவளவன் பதிலளித்தார். “காஷ்மீரில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. அங்கு பயங்கரவாதமே இல்லை.. சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்கலாம் என்ற பாஜக அரசின் கூற்றை நம்பிச் சென்றவர்கள் இன்று படுகொலையாகி உள்ளனர். எனவே, தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

வஃபு திருத்தச் சட்டம் முதல் ஆளுநர் R.N. ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் வரை:13 தீர்மானங்கள் விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வக்ஃபு திருத்தச் சட்டம் முதல் ஆளுநர் R .N . ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை அசோக் நகரிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் தொல் திருமாவளவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரவேற்கிறது. இதற்காக வழக்கு தொடுத்து இந்தத் தீர்ப்பைப் பெற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இக் கூட்டம் பாராட்டுகிறது.

2. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு ஆளுநராக உள்ள திரு ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாண்பமை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

3. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ள ஆளுநர் திரு ஆர்.என்.ரவி மீதும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை அவமதிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்துள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

4. மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி திரு குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் மாநில சுயாட்சிக் குழுவை அமைத்திருக்கிற தமிழ்நாடு அரசை இந்தக் கூட்டம் பாராட்டுகிறது

5. அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. அந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும்வரை அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் எனத் தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது

6. புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தடையை விலக்குவதோடு அதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்திடத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

7. தமிழ்நாடு முழுவதிலும் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பட்டியல் சமூக மக்கள் வழிபடுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. அவ்வாறு வழிபடச் சென்றபோது பட்டியல் சமூக மக்களை இழிவாகப் பேசி தாக்குவதற்கு முற்பட்டவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

8. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த ஈகியரின் நினைவாக அவர்கள் அனைவரது உருவச் சிலைகளோடும் கூடிய நினைவு மண்டபம் ஒன்றை சென்னையில் அமைத்திடுமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியான அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் அடக்கம் செய்யப்பட்ட பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு சிதம்பரம் நகரை இணைக்கும் மேம்பாலத்துக்கு ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் விசிக சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறோம். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது

9. திரு ராகுல் காந்தி அவர்களின் வேண்டுகோளின் பேரில் கர்னாடகா தெலுங்கானா ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ரோஹித் வெமுலா சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கெல்லாம் முன்பாகவே, கல்வி நிலையங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்கிட நீதிபதி கே. சந்துரு அவர்கள் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி கே.சந்துரு ஆணையமும் தனது அறிக்கையை அரசிடம் வழங்கி ஓராண்டு ஆகப் போகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் நீதிபதி கே. சந்துரு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் ரோஹித் வெமுலா சட்டத்தைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

10. இந்திய சனநாயகத்தை விரிவுபடுத்தும் நோக்கோடு உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அங்கு பட்டியல் சமூகத்தினருக்கென ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதற்காக மேலவளவு முருகேசன் உட்பட 7 பேர் சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். ஊராட்சி சனநாயகத்துக்காகப் பலியான முருகேசன் உள்ளிட்ட 7 பேரையும் சமூகநீதிப் போராளிகள் என அங்கீகரிக்க வேண்டுமென்றும், மேலவளவு கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து அதை ஒரு முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்றும், முருகேசன் உள்ளிட்ட 7 போராளிகளையும் பெருமைப்படுத்தும் விதமாக மேலவளவில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

11. அமெரிக்க அரசு இந்தியப் பொருள்கள் மீது 26 % வரி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உயர்கல்விப் பெற்றுவரும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து வருகிறது. முறையான அனுமதியின்றி நுழைந்தார்கள் எனக் குற்றம் சாட்டி இந்தியர்களைக் கைவிலங்கு , கால் விலங்கிட்டு அவமானப்படுத்தியது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை குடியரசுத் தலைவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை மோடி அரசு அளித்துக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் இறையாண்மையைப் பலியிடுவதாக உள்ளது. அமெரிக்காவின் அடிமையாக மாறிவிட்ட ஒன்றிய பாஜக அரசின் தேச விரோத அணுகுமுறையை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தியாவின் நலனைப் பாதுகாக்க முன்வருமாறு ஒன்றிய அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

12. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென இக்கூட்டம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது. அந்த சட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை உச்சநீதிமன்றம் நீட்டிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

13. வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் , மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதை வலியுறுத்தியும் விசிக சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை மே 31 ஆம் நாள் திருச்சியில் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

திருமாவளவன் பேச்சு: திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான்..!

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆதங்கத்தோடு தொல் திருமாவளவன் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசுகையில், “கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தாங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் பங்கேற்க வைப்பது மன அழுத்தத்தை தருகிறது. ஒரு நாள் கூட ஓய்வு இல்லை. ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என்கிற நிலை நீடிக்கிறது. கட்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலையிலும் கூட, மஞ்சள் நீராட்டு, திருமண நிகழ்ச்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்து அழைத்து செல்வதில் நமது கட்சியினர் குறியாக இருக்கிறீர்கள். 24 மணி நேரமும் உங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை.

ஆனால் எந்தப் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது முக்கியமானது. ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி கிடக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அந்த அற்பர்களின் தோற்றத்தை நாம் கடந்து செல்கிறோம் என்றாலும் கூட இயக்க தோழர்கள் அதில் தெளிவை பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் நம்மால் எடுக்க முடியும். அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. எல்லா கதவுகளையும் திறந்து வைத்து இருப்பது, ஒரே நேரத்தில் பலரோடு பேரம் பேசுவது, கூடுதல் பேரம் பலிக்கும் இடத்தில் உறவை வைத்துக் கொள்வது, கூட்டணியை தீர்மானிப்பது எல்லாம் பெரிய ராஜதந்திரம் இல்லை. அது சுயநலம் சார்ந்த சந்தர்ப்பவாத அரசியல்.

நாம் அதை பொருட்படுத்தவில்லை, ஈடுபாடு காட்டவில்லை. விசிக எந்த எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டணியில் தொடர்கிறோம் என்று சொன்னால் அதற்கும் ஒரு துணிச்சல், தெளிவு, தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதனை புரிந்து கொள்ள முடியாத அற்பர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நமக்கு எதிரான அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.

விசிக பிற அரசியல் கட்சிகளை போல் இல்லாமல், ஒரு முன் மாதிரியாக இயங்கக் கூடிய அரசியல் கட்சி என்பதை காலம் சுட்டிக்காட்டி வருகிறது. தொடர்ந்து அதை உறுதி படுத்தும். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள்.

எங்களது தொலைநோக்குப் பார்வையை பொறுத்துக் கொள்ளாத அற்பர்கள் அவதுாறு பரப்புகின்றனர். தோழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஆளும் கட்சியோடு இருக்கும் முரண் என்பது வேறு, கூட்டணி தொடர்பாக நாம் கையாளும் உத்தி என்பது வேறு. ஆளும் கட்சியோடு நாம் வைக்கும் கோரிக்கை வேறு. திமுக உடன் நாம் வைத்திருக்கும் கூட்டணி உறவு என்பது வேறு. இதனை நாம் புரிந்து கொண்டு கவனமாக இயங்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் தொடர்பான விவாதங்களில் தலைமையின் முடிவை அறிந்து கருத்து சொல்ல வேண்டும். அல்லது சொல்லாமல் தவிர்க்கலாம்.” என தொல் திருமாவளவன்  அறிவுறுத்தி உள்ளார்.