அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்தில் 10 குழந்தைகள் பலி..! 16 பேருக்கு தீவிர சிகிச்சை..!

உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியிலுள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றவர்களின் நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. NICU-வில் மீட்புப் பணிகள் நள்ளிரவு 1 மணியளவில் முடிந்துவிட்டன என தகவல்கள் வெளிவந்துள்ளன.

1968 -ல் தனது சேவைகளைத் தொடங்கி உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியிலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார், மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. Neonatal Intensive Care Unit (NICU)-ன் வெளிப் பகுதியில் இருந்த குழந்தைகளும், உள் பகுதியில் இருந்த சில குழந்தைகளும் மீட்கப்பட்டனர். 10 குழந்தைகள் இறந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

NICU-ன் வெளிப்புறப் பிரிவில் குறைவான குழந்தைகளே அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் மிகவும் முக்கியமான நோயாளிகள் உள் பகுதியில் வைக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். இருப்பினும், இந்த தீ விபத்திற்கு காரணம் என்ன, யாருடைய மெத்தனத்தால் இது நடந்தது என்பதை அறிய விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 10 குழந்தைகள் இறந்தபோதும், மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். NICU-ல் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது..!

மதரசாவை இடம் மாற்றுவதற்கு தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந்த ஆரிஷ் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மூத்த உதவியாளர் ஆக பணியாற்றி வந்த முகம்மது ஆசிப் என்பவரை சந்தித்தார்.

அப்போது உரிய நடைமுறை களை முடித்து கோப்பினை ஒப்புதலுக்கு அனுப்ப ஆரிஷிடம் முகம்மது ஆசிப் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் தரமுடியாது என்று ஆரிஷ் கூறியதை தொடர்ந்து அப்பணத்தை தவணை முறையில் தருமாறு முகம்மது ஆசிப் கூறியுள்ளார். இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆரிஷ் புகார் கொடுத்தார். இதில் முகம்மது ஆசிப்பை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் முதல் தவணையாக ரூ.18 ஆயிரத்தை முகம்மது ஆசிப் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஜாமின் மனு விசாரணையின்போது நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதல்..!

நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் நீதிபதி, வழக்கறிஞர்கள் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், ராஜ் நகர் பகுதியில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் நஹர் சிங் யாதவ் நீதிபதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

நஹர் சிங் யாதவ் என்ற வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்குவதற்கான விசாரணையின் போது நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வழக்கறிஞருக்கும் நீதிபதிக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமாகி, இறுதியில் வன்முறையாக மாறியது.

இந்நிலையில், நீதிபதி இருந்த அறையை காலி செய்து காவல்துறை அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இத்தகைய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசத்துக்கு ரூ.31,962 கோடி ஆனால் தமிழகத்துக்கு ரூ.7,268 கோடி என்ன கணக்கு தெரியல..!

மத்தியில் ஆளும் பாஜக அரசு வரி வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை நேற்று விடுவித்து. இதில் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்துக்கு அதிக தொகையும், தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வரி பகிர்வு குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தொகையும் தவணையும் அடங்கும். வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுப்படுத்தவும், மாநிலங்களின் வளர்ச்சி, நிதி திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரி பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.31,962 கோடியும் அதையடுத்து பீகாருக்கு ரூ.17,921 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.13,404 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.11,255 கோடி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.10,737 கோடி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தென்மாநிலங்களான தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி, ஆந்திரபிரதேசத்துக்கு ரூ.7,211 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.6,498 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,745 கோடி மற்றும் கேரளாவுக்கு ரூ.3,430 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசம் நெடுஞ்சாலைக்கு நடுவே உள்ள கம்பத்தில் இளைஞரை கொன்று தொங்கவிட்ட கொடூரம்!

உத்தரப்பிரதேசம் நெடுஞ்சாலைக்கு நடுவே உள்ள கம்பத்தில் இளைஞரை கொன்று தொங்கவிட்ட கொடூரம்!

உத்தரப்பிரதேசம் நெடுஞ்சாலைக்கு நடுவே உள்ள கம்பத்தில் இளைஞரை கொன்று தொங்கவிட்ட கொடூரம்!

 

நான் ரெடி..! நீங்க ரெடியா..! Amethi: ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட ராபர்ட் வதேரா போட்டியிட தயார்..!

காங்கிரஸின் தேசியப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா. தொழிலதிபரான இவர், காங்கிரஸ் கட்சியில் இன்னும் அதிகாரபூர்வமாக இணையவில்லை எனினும், காங்கிரஸ் பிரச்சாரங்களில் தனது மனைவி பிரியங்கா மற்றும் மைத்துனர் ராகுல் காந்தியுடன் இணைந்து தோன்றுவது உண்டு.

ராபர்ட் வதேரா ஒரு பேட்டியில், “கடந்த 1990 முதல் நான் காங்கிரஸுக்காக அமேதியில் பிரச்சாரம் செய்து வருகிறேன். இதனால், நான் அமேதியில் போட்டியிட வேண்டும் என அத்தொகுதிவாசிகளிடம் இருந்து குரல்கள் எழுகின்றன. நான் தீவிர அரசியலில் இறங்கவேண்டும் எனவும் நாடு முழுவதிலுமிருந்தும் அரசியல் நண்பர்களும் வலியுறுத்துகின்றனர் என தெரிவித்தார். மேலும், நான் காந்தி குடும்பத்தின் உறுப்பினர் என்பதால் அமேதியில் போட்டியிட சுவரொட்டிகளும் பல இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நாட்டுக்கு காந்தி குடும்பம் எவ்வளவு செய்துள்ளது என்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள்.

இதற்காக எனது குடும்பம் ஆசீர்வதித்தால் நான் கண்டிப்பாக தீவிர அரசியலில் இறங்குவேன். என்னால் மாற்றம் கொண்டுவர முடியும் எனக் காங்கிரஸும் விரும்பினால் நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார்” எனத் தெரிவித்து இருந்தார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில், உ.பி.யில் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு கிடைத்த 19 தொகுதிகளில் 17-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இன்னும் ரேபரேலி மற்றும் அமேதிக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் அமேதியில் காங்கிரஸ் வேட்பாளராக காந்தி குடும்பத்தின் மருமகன் ராபர்ட் வதேரா போட்டியிட விரும்புகிறார். அங்கு தன்னால் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை அதிக வாக்குகளில் வெற்றி பெற இயலும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தப்பிரதேசத்தில் மெகா மோசடி: வந்ததும் வந்த அந்த பெண்ணுடன் மாலையை மாத்திட்டு பணம் வாங்கிட்டு போங்க..!

உத்தப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி ஆதித்தியநாத் முதலமைச்சராக பதவி வகிக்கின்றார். இந்நிலையில் பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கேட்கி சிங் முன்னிலையில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த கூட்டு திருமண நிகழ்வில் திருமணத்தில் ஏழைப் பெண்களுக்கு ரூ35 ஆயிரம் பணம், ரூபாய் 65 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படும் என்று உ.பி உத்தப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் அறிவித்தார்.

ஆனால் இந்த திருமணத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மீண்டும் மணமக்களாக நிறுத்தினர். மேலும், ஏராளமான பெண்கள் ஜோடி இன்றி தனியாக நின்றனர். அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாலையை, தாங்களே அணிந்துகொண்டனர்.

சிலர் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அந்தப் பெண்களிடமும், இளைஞர்களிடமும் பண ஆசை காட்டி, அவர்களையும் மணமக்களாக நிறுத்தினர். அவர்கள் அங்கு உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளாமல், வெறுமனே மாலையுடன் முன்பின் தெரியாத பெண்ணுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தங்களுக்குத் தாங்களே மாலையை அணிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு, அங்கிருந்து தனித்தனியாக கலைந்து சென்றனர். 588 ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடந்தது போல புகைப்படத்தைக் காட்டி அரசிடம் பணம் பெற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் போலி திருமணத்தை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த மோசடி அம்பலமானது.

இதையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அரசு உதவித்தொகையை அபகரிப்பதற்காக முறைகேட்டில் ஈடுபட்ட 2 அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் போலி ஜோடிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட திருமண விழாவின் மூலம் சுமார் ரூ. 2 கோடி அளவுக்கு பணம் சுருட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியாக மணப்பெண், மணமகனாக படித்தவர்களுக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுத்தது அம்பலமானது. திருமணம் பார்க்க வந்த சில இளைஞர்களை பணம் கொடுத்து மணமகனாக நடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

உத்தரபிரதேசத்தில் அடிக்கும் புயலால் யோகி ஆதித்யநாத்திற்கு பீதி

அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சியை எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதனால் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. ஆகையால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா சூறாவளியாக சுழன்று தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரியங்காவின் இந்த தீவிர களப்பணியை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘உத்தரபிரதேசத்தில் ஒரு புயல் அடித்து வருகிறது. அதன் பெயர் பிரியங்கா காந்தி. இது வருகிற தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க உதவும். உத்தரபிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகளை பிரியங்கா காந்தி எழுப்பி வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அரசும் அவரால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறது’ என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி: பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்கூட்டி இலவசமாக வழங்கப்படும்

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பா.ஜனதா, சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகளை அளிக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 400 தொகுதிகளில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது” என தெரிவித்தார்.

மேலும்,கொரோனாவின் பொருளாதார தாக்கத்தை நீக்கும் 25 ஆயிரம் குடும்பத்திற்கு வழங்கப்படும், 20 லட்சக்கணக்கானோருக்கு அரசு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்கூட்டி, விவசாயிகளின் முழு கடன் தள்ளுபடி என பல வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி திட்டவட்டம்: அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், லக்கிம்பூர் படுகொலைகளை கண்டித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாய சங்கங்கள் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கலந்து கொண்டு பேபேசுகையில், லக்கிம்பூர் படுகொலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதியை கோருவதாகவும், ஆனால் படுகொலைகளுக்கு காரணமான மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகனை பாதுகாக்க அரசு முயல்வதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

கடந்த 300 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருவதையும் அதில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததையும், பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டினார். மேலும் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்? என்று பிரியங்கா காந்திகேள்வி எழுப்பியது மட்டுமின்றி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனவும் திட்டவட்டமாக பிரியங்கா காந்தி தெரிவித்தார்.