ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தீர்மானத்துக்கு எதிராக அமளி பாஜக MLA க்கள் பேரவையிலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றம்..!

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக பாஜக MLA-க்கள் தொடர்ந்து 3-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 12 பாஜக MLA க்கள் மற்றும் அவாமி இதிஹாத் கட்சி MLA ஆகியோர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சமீபத்தில் நடந்த ஜம்மு – காஷ்மீர் பேரவை தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா முதலமைசராக பதவியேற்றார்.

உமர் அப்துல்லா முதலமைசரான பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தனை தொடர்ந்து நடந்த சட்டமன்ற கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை ஏற்படுத்துவதற்கான புதிய தீர்மானத்தை துணை முதலமைசர் சுரீந்தர் சவுத்ரி கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக MLA க்கள்,தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்றும் இந்த விவகாரத்தை பாஜக MLA க்கள் எழுப்பினர்.பாகிஸ்தானின் திட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என்று கூறி அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் அமளியில் ஈடுபட்ட 12 பாஜக MLA க்கள் மற்றும் அவாமி இதிஹாத் கட்சி உறுப்பினர் ஷேக் குர்ஷித்தை அவையில் இருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்மிருதி இராணி: சிறப்பு அந்தஸ்தை காஷ்மீருக்கு மீண்டும் இனி எந்த காலத்திலும் கொண்டு வர முடியாது..!

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவை இனி எந்த காலத்திலும் மீண்டும் கொண்டு வர முடியாது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மறுநாள் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. சட்டமன்றத்துடன் கூறிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட அங்கு உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்தது.

பாஜக MLA களின் கடும் அமளிக்கு நடுவே ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி அதன் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்த தீர்மானத்தின் மூலம் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரவாதத்தை ஆதரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என தெரிவித்தார்.

மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் என தெரிவித்துள்ளார். இதனிடையே மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூர்க்கா சமூகத்தினர், ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என ஸ்மிருதி இராணி வலியுறுத்தி உள்ளனர்.

ஷேக் அப்துல் ரஷீத்: உமர் அப்துல்லா, மெகபூபா இருவரும் பொம்மைகள்…! ரப்பர் ஸ்டாம்ப் போன்றவர்கள்..!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் செப்டம்பர் 18 -ஆம் தேதி 24 தொகுதிகள் 25 -ஆம் தேதி 26 தொகுதிகள் மற்றும் அக்டோபர் 1 -ஆம் தேதி மீதமுள்ள 40 தொகுதிகள் என மொத்தமுள்ள 90 சட்டப் பேரவை உறுப்பினர்கலுக்கு 3 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற உள்ளன. மேலும் அக்டோபர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே ரஷீத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் பி டீம் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்களான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தியும் குற்றம் சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் வகையில், ஷேக் அப்துல் ரஷீத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜகவின் துன்புறுத்தலை எதிர்கொண்ட ஒரே முக்கிய தலைவர் நான் மட்டுமே. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் பல மாதங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நான் மட்டுமே திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.

உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகிய இருவருமே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் மக்களிடம் தோற்றுவிட்டனர். உமர் அப்துல்லா மகாத்மாக காந்தியாகவோ சுபாஷ் சந்திரபோஸ் ஆகவோ ஆக முடியாது. இதுபோல மெகபூபா முப்தி ரசியா சுல்தான் மியான்மரின் ஆங் சான் சூ கியாகவோ ஆக முடியாது. அவர்கள் பொம்மைகள். ரப்பர் ஸ்டாம்ப் போன்றவர்கள் என அனல் பறக்க ஷேக் அப்துல் ரஷீத் பேசினார்.

கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீருடன் கெஞ்சி வாக்கு சேகரித்த உமர் அப்துல்லா..!

ஜம்மு காஷ்மீர் யூனியன் சட்டசபை தேர்தலை அனைத்து கட்சிகளும் வாழ்வா? சாவா? என எதிர்கொண்டு நிற்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 துண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியதுடன் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370- வது பிரிவை ரத்து செய்த பாஜக, தாம் செய்தது நியாயம் என பிரசாரம் செய்கிறது. ஜம்மு காஷ்மீரை பாஜக வேட்டையாடிவிட்டதாக காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பதிலடி தருகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளோ, காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அங்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். கந்தர்பால் தொகுதியில் உமர் அப்துல்லா பிரசாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென தமது தலையில் இருந்த தொப்பியைக் கழற்றினார்.

அதனை இரு கைகளில் ஏந்தியபடி, இந்த தொப்பியின் கவுரவம், என்னுடைய கவுரவம் அனைத்தும் நீங்கள் வாக்களிப்பதில்தான் இருக்கிறது. எனக்காக ஒரே ஒரு முறை கடைசி முறையாக வாக்களியுங்கள். மக்களுக்காக சேவை செய்ய எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள் என கண்ணீரும் கம்பலையுமாக கெஞ்சி வாக்கு உமர் அப்துல்லா சேகரித்தார்.