உதயநிதி ஸ்டாலின்: “இது F4 பந்தயம் தான்…! F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும்…!

“ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர்என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த F4 கார் பந்தயத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டுத் துறையை சார்ந்த அத்தனை பேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கார் பந்தயம் நடந்து முடியும் வரை அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றிகள். இதனை நடத்துவதற்கான மிகப்பெரிய சவாலே இந்த பந்தயம் மிக முக்கியமான ஒரு பகுதியில் நடந்ததுதான். மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும்.

அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். ஆனால் ஒரு பக்கம் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் டிராபிக் சரியான முறையில் நகர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்து நம்மை விமர்சித்தவர்கள் கூட பாராட்ட தொடங்கிவிட்டனர்.

சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். கார் பந்தயம் தேவையா? அவசியமா? என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இதை நடத்தவில்லை என்றாலும் விமர்சித்திருப்பார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: “F4 கார் பந்தயம் வெயிலிலும் வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கு நன்றிகள்..!”

“ F4 கார் பந்தயம் நடந்து முடியும் வரை அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றிகள்என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த F4 கார் பந்தயத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டுத் துறையை சார்ந்த அத்தனை பேருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கார் பந்தயம் நடந்து முடியும் வரை அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வேலை செய்த தூய்மை பணியாளர்களுக்கும் என்னுடைய நன்றிகள். இதனை நடத்துவதற்கான மிகப்பெரிய சவாலே இந்த பந்தயம் மிக முக்கியமான ஒரு பகுதியில் நடந்ததுதான். மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும்.

அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். ஆனால் ஒரு பக்கம் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் டிராபிக் சரியான முறையில் நகர்ந்து கொண்டிருந்தது. அதை பார்த்து நம்மை விமர்சித்தவர்கள் கூட பாராட்ட தொடங்கிவிட்டனர்.

சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர்.

ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம். கார் பந்தயம் தேவையா? அவசியமா? என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இதை நடத்தவில்லை என்றாலும் விமர்சித்திருப்பார்கள்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் புதர் அகற்றியதாக பொய் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் புதர் அகற்றியதாக பொய் கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில், திருப்பத்தூர் வட்டாரத்தில் இருந்து வந்திருந்த மனு ஒன்றில் தங்கள் பகுதியில் புதர்மண்டி கிடப்பதை அகற்றக் கோரி ஒருவர் மனு அளித்திருந்தார். அதன்பேரில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான சோமதாசிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டார். புதரை சுத்தப்படுத்தியதாக சோமதாஸ் பதிலளித்தார். இதையடுத்து அமைச்சர் அந்த மனு அளித்தவரை உடனடியாக கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மனுதாரர் புதர் அகற்றப்படவில்லை என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சிடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்ததுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வுக்கூட்டத்தில் தவறான பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் ‘முதலமைச்சர் கோப்பை 2024’ கோலாகலமாக தொடங்கி வைப்பு..!

சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் ‘முதலமைச்சர் கோப்பை’ என்ற விளையாட்டுப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் கடந்த ஆண்டு முதல் 3 இடத்தை பிடித்தது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி செப்டம்பரில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 2024 ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் இன்று 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெறும். இப்போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (Online Registration) 04.08.2024 முதல் முன்பதிவு செய்யப்பட்டு 11,56,566 நபர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டிகள் 5 வகையான பிரிவுகளில் 35 வகையான விளையாட்டுக்கள் 168 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.

மாநில அளவில் தனி நபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Udayanidhi Stalin: பேச்சாலும் – எழுத்தாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர்..!

திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழியின் 60-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் – வழக்கறிஞர் அக்கா அ.அருள்மொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவரை நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.

பெரியாரியல் – பாரதிதாசனியல் அறிஞராகத் திகழும் அக்காவின் பணிகளை போற்றும் வண்ணம் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு உரையரங்கத்தில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம்.

பள்ளிப் பருவம் முதல் தன் பேச்சாலும் – எழுத்தாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வரும் அக்கா அருள்மொழி அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்! என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிக்கு 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய பூரணம் அம்மாளின் வீட்டுக்குச் சென்று உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பூரணம் அம்மாள். இவரது கணவர் உக்கிரபாண்டியன் இறந்ததால் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஜனனி இரண்டு ஆண்டுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், மகள் ஜனனி நினைவாக, பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள ரூ.1.52 ஏக்கர் நிலத்தை ஜனவரி 5-ம் தேதி பள்ளியின் பெயரில் பத்திரப் பதிவு செய்து அரசுக்குத் தானமாக வழங்கினார்.

இவரது இச்செயலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரை கவுரவிக்கும் வகையில் குடியரசு தின விருதும் அறிவித்துள்ளார். மேலும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வங்கிக்கு சென்று பாராட்டியது மட்டுமின்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைக்க வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பூரணம் அம்மாளின் வீட்டுக்கு சென்று பூரணம் அம்மாளின் மகள் ஜனனியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த பின்னர் பூரணம் அம்மாளைப் பாராட்டியதோடு திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கினார்.

நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம்…! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு தரமான பதிலடி..!

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோக்கும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.

சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நியாயவிலை அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நன்றாக வேலை பார்த்துள்ளீர்கள். கடந்த மழை வெள்ளத்தை விட இந்த முறை சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மத்தியக்குழு ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கிகளில் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறுகின்றனர். கோவிட் பாதிப்பின் போது வழங்கப்பட்ட நிவாரண தொகை ரூ.2000 அனைவருக்கும் முழுமையாக சென்றடைந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைப்போன்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தான் தலைவர் முடிவு எடுத்து ரூ.6000 ரொக்கமாக கொடுக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் நிவாரண தொகையை நியாயவிலை கடைகள் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிமைத்தொகை போல வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தலாமே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், “உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது முதல் மாதம் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால், வங்கியில் பணம் போட்டதை ஏராளமானோருக்கு பிடித்தம் செய்யப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் விடுபட்டு விடாமல் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலே ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பணம் வழங்கப்பட்டது போல இப்போது வெள்ள நிவாரணம் நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

அப்போது ஒரு நிருபர், மத்திய அமைச்சர் இது என்ன ஏடிஎம்மா? கேட்ட உடன் பணத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ‘‘நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமல் கொடுக்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இனி சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல காலம் பொறக்குது…

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டு இருக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புர சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ். திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 14.08.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989-ம் ஆண்டு முதன்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு. நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர், என்று கூறப்பட்டு உள்ளது.

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் சங்கம் சார்பாக பொது நிவாரண நிதி

சென்னை வடப்பெரும்பாக்கம் 17-வது வார்டு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் சங்கம் சார்பாக கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1,19,500-க்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு சங்க தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று உதயநிதி ஸ்டாலின் வழங்கினர்.

4-ம் வகுப்பு மாணவன் உண்டியல் சேமிப்பை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெ. கிஷோர் குமார் அவர்களின் மகன் அஹோபிளம் மஹரிஷி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் கி.விபுல் கல்யாண் உண்டியல் சேமிப்பை 4000 கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.