Derek O’Brien: வௌிநாடுகளுக்கு போகும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா..!?

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் நரேந்திர மோடியின் வௌிநாடு பயணம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் எக்ஸ் பக்கத்தில், “கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு இன்னும் அவ்வப்போது இனக்கலவரம் நடந்து வருகிறது. கடல்பறவையான ஆர்க்டிக் டெர்ன் இனத்தை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா உள்ளிட்ட வௌிநாடுகளுக்கு சென்று வருகிறார்.

ஆனால் ஓராண்டை கடந்தும் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு செல்ல நரேந்திர மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லையா?” என டெரிக். ஓ. பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மம்தா பானர்ஜி ஆவேசம்: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரியும்..!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘மோடி பாபு! நீங்கள்உங்களது தொண்டர்கள் மூலம் மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தை எரித்தீர்களானால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும்’’ என்று ஆவேசத்துடன் பாஜகவுக்கு சவால் விடும்படி பேசினார்.

Mamata Banerjee: என்ன சாப்பிட வேண்டுமென பாஜக எப்படி முடிவு செய்யும்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், ஏன் மீன் சாப்பிடுகிறீர்கள் என பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பினார். கோழி முட்டை, இறைச்சியை ஏன் சாப்பிட வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் எப்படி முடிவு செய்ய முடியும்.

இட்லி, தோசை மற்றும் பிற மாநிலங்களின் உணவை நீங்கள் சாப்பிடக் கூடாது என நாங்கள் கூற முடியுமா? நம் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 80% பேர் மாமிசம் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாமிச கடைகள் மூடப்படுவதாக கேள்விப்பட்டேன்.

நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கட்சி, ஒரு நபர் எப்படி முடிவு முடிவு செய்ய முடியும்? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

Mamata Banerjee இதற்குதான் 7 கட்டமாக தேர்தலா…”

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மால்டா மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது, “மத்தியில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். பா.ஜ.க.வின் ஆணையம் போல தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. பா.ஜ.க.வின் தொண்டர்கள் போல மத்தியப் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியுமா?

பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காகவே 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை பா.ஜ.க. பிளவுபடுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாச்சாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறிபோகும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிகளில் கல்வீச்சு, தீ வைப்பு..!

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி என 3 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே, பல வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.

இந்த மோதல் வன்முறையாக வெடிக்க நாட்டு வெடிகுண்டு, கல் வீச்சி தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த அனந்த் பர்மன் என்ற உள்ளூர் பிரமுகர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தொண்டர்களால் அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரைப் பார்க்க மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வாக்காளர்களை மிரட்டுவதாகவும், வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு வரவிடாமல் தடுப்பதாகவும், பூத் ஏஜெண்டுகளைத் தாக்கியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் – ஃபுல்பாரி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Mamata Banerjee: பாஜக தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களை புலனாய்வு அமைப்புகள் சோதனை செய்வார்களா..!?

மேற்கு வங்கத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் – 19, ஏப்ரல் -26, மே -4, மே -13, மே -20, மே -25, ஜூன் -1 தேதி முதல் ஏழு கட்டங்களிள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கூச்பெஹரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான போட்டி வாய்ப்பை வழங்க மத்தியஅரசு மறுக்கிறது. குறிப்பாக, எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் பணம், தங்கம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததாகக் கூறி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை.

இதுபோன்ற செயலில் எங்கள் கட்சியினர் ஈடுபடமாட்டார்கள். பாஜகவினர்தான் அதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களின் வாகனங்களை சோதனையிடுவது போல, பாஜக மூத்த தலைவர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் சோதனை செய்வார்களா? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

மம்தா பானர்ஜி: மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜகவின் வேலை

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜிஎஸ்டி நிலுவை, 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட டெல்லிக்கு செல்கிறார். அதற்கு முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு விதிமீறல் தீவிரமான பிரச்னை. இது ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு தோல்வி. அதை மத்திய உள்துறை அமைச்சரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதைப் பற்றி அவர்கள் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கைதான முக்கிய குற்றவாளிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது மேற்கு வங்கத்தை கேவலப்படுத்தும் பாஜவின் தந்திரம். மேற்கு வங்கத்தின் பெயரை கெடுப்பதே பாஜவின் வேலையாக இருக்கிறது. இது போன்ற எந்த சட்டவிரோத செயல்களையும் எங்கள் அரசு ஆதரிக்காது. டெல்லியில் வரும் 19-ம் தேதி நடக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.

அதைத் தொடர்ந்து 20-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்திற்கான நிலுவைத் தொகையை கோருவேன். அது மத்திய அரசின் பணம் மட்டுமல்ல. மேலும் சுகாதார மையங்களுக்கு காவி நிறம் பூச வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவு குறித்தும் பிரதமர் மோடியிடம் முறையிடுவேன் என மம்தா பானர்ஜி பேசினார்.

மம்தா பானர்ஜி: ”அடுத்தாண்டு மோடி தனது வீட்டில்தான் கொடியேற்றுவார்..!”

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர். இதன்படி பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

அப்போது பேசிய பிரதமர் அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என தெரிவித்தார். அடுத்தாண்டு செங்கோட்டியில் சந்திப்போம் என்ற பிரதமரின் பேச்சுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உங்களது வெற்றியோ தோல்வியோ அது மக்களின் கையில், வாக்காளர்களின் கையில் உள்ளது.

2024-ல் மீண்டும் ஒரு முறை செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என்று இப்போதே கூறுவது ஆணவம். அடுத்த ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை தேசிய கொடியை ஏற்றுவார். அதை அவர் அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றிய போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது.

இதுகுறித்து கருத்து,” “எனக்கு கண் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தது. நெறிமுறைகளின்படி நான் 9.20 மணிக்கு என்னுடைய வீட்டில் மூவர்ணக்கொடி ஏற்றவேண்டும். அதன் பின்னர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்து அங்கும் தேசிய கொடி ஏற்றவேண்டும். அதனால் என்னால் அங்கு செங்கோட்டைக்கு செல்ல முடியவில்லை. அங்கு பாதுகாப்பு கெடுபிடி வேறு இருந்தது. பிரதமர் வெளியேறுவதுக்கு முன்பாக அவர்கள் மற்றவர்களை வெளியேற அனுமதிப்பதில்லை.

அதனால் என்னால் நேரத்துக்கு இங்கு வந்திருக்க முடியாது. நேரமின்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நான் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தேன்” என்று கார்கே தெரிவித்திருந்தார். முன்னதாக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திங்கள் கிழமை ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடிஜி, செவ்வாய்க்கிழமை டெல்லி செங்கோட்டையில் ஆற்றும் சுதந்திர தின உரையே, பிரதமராக அவர் ஆற்றவிருக்கும் கடைசி உரை. ‘இண்டியா’ கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி விளையாடும். அந்தக் கூட்டணி நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவை உறுதியாக தோற்கடிக்கும்” என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கு மிரட்டல் விடும் மம்தா பானர்ஜி: மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன்..

மேற்கு வங்காளத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துவேன் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே அதிரடி அரசியலுக்கு பெயர் போன மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். அமித்ஷா உள்ளிட்டோரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மம்தா பானர்ஜி, வரும் 2024- ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மத்திய அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி இதற்காக அவ்வப்போது எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்தார். தனது கட்சியினர் மத்தியில் தற்போது பேசியது தான் இப்போது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினர் மத்தியில் மம்தா பானர்ஜி பேசுகையில், ”மேற்கு வங்காளத்தில் பணிபுரியும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக என்னிடமும் வழக்குகள் நிறைய உள்ளன. எனவே, எனது அதிகாரிகளை நீங்கள் (மத்திய அரசு) டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்தால், உங்கள் அதிகாரிகளை நான் விசாரணைக்கு வருமாறு இங்கு அழைப்பேன். மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகள் 8 பேருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. சிபிஐ மூலமாக மேற்கு வங்க அதிகாரிகளை மத்திய அரசு கைது செய்கிறது. நான் இதை குறித்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார்.