H .ராஜா: அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் மனு போடவில்லை..!

அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார்.. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H. ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

H .ராஜா குற்றச்சாட்டு: தமிழக அரசில் ஒருதுறைகூட திறமையானதாக இல்லை..!

தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை என பாஜக மூத்த தலைவர் H .ராஜா குற்றச்சாட்டி உள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H .ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

உங்கள் கொள்கை உங்களுக்கு… எங்கள் கொள்கை எங்களுக்கு..! அதே மேடையில் நிராகரித்த திருமாவளவன்..!

யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம். அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு என தொல் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசினார். அப்போது, “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என்றார்.

தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்” என இன்பதுரை தெரிவித்தார்.

இதையடுத்து, தொல் திருமாவளவன் பேசுகையில், “வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். உங்களோடு களத்தில் நிற்போம். மக்களோடு இருப்போம். அன்புச் சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும் இதுதான் பதில். கட்சிகளோடு அல்ல, மக்களுக்காக போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அங்கு நிற்போம். அடையாளம் தாண்டி சிந்திப்பதில் பக்குவம் பெறுவோம். யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம்.

அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு. தேர்தல் அரசியல் என்பது ஒரு நிலைப்பாடு, உத்தி. அதை எல்லாம் தாண்டி மனித உறவுகள் மேம்பட வேண்டும். மக்களுக்கான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்.

தேர்தல் என்பது நாட்டு நலன், கட்சி நலனை அடிப்படையாக கொண்டது. காலச்சூழலில் முரண்பாடான முடிவைக் கூட எடுக்க நேரிடும். கடுமையாக எதிர்க்கும் பாஜகவுடனே ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டம் போட்டு அவர்களுடன் நின்றார்கள். அதை எல்லா இடத்திலும் பொருத்திப் பார்க்கக்கூடாது” என தொல் திருமாவளவன் பேசினார்.

வானதி சீனிவாசன்: யாரு பாசிசம்..! யாரு கருத்து சுதந்திரம் என சிந்தித்து பாருங்கள்..!

யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி பாஜக MLA வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, வானதி சீனிவாசன் ஆவேசமாக பேட்டியளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் தவெக தலைவர் விஜயின் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டி உடனே மறைந்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நானும் இந்த வீடியோவை பார்த்தேன்.. நிறைய பேர் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்டுருந்தாங்க.. இதுக்கு நான் என்ன சொல்ல முடியும்.. ரொம்ப டிரெண்ட் ஆக இன்ஸ்டா, எக்ஸ் தளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்க எந்த அளவுக்கு இதனை அனுமதிக்கிறோம் என்று பாருங்கள். கருத்து சுதந்திரத்தை பாஜக அனுமதிக்கிறது.

இன்னொருவர் வந்து புகைப்படத்தை பின்னாடி வந்து காட்டும் அளவிற்கு கருத்து சுதந்திரத்தை நாங்க அனுமதிக்கிறோம். ட்ரோல், மீம்ஸ், காமெடி என எந்த மெசேஜ் ஆக வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். இதே மாதிரி இன்னொரு கட்சியில், இந்த விஷயத்தை இந்த பக்கம் நின்று பண்ண முடியுமா?.. என்று பாருங்கள். அப்போ யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கேள்வி: கலைஞர் பெயரை வைக்காமல் கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயர் வைக்கலாமா..!?

தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது? கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எளியோர் எழுச்சி நாள்’ என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 ஜோடிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

எஸ்.வி.சேகர்: அண்ணாமலை வாயை திறந்தால் பொய்..! ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அரசியலுக்கு வந்தார்..!

ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார். அண்ணாமலை வாயை திறந்தால் பொய் என முன்னாள் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி சேகர் இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது, “தமிழ்நாட்டில் பாஜக 25 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரவே முடியாது. ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இங்கு சரியாக இல்லை என்று தான் வெளிநாடு படிக்க சென்று இருக்கிறார்.

அண்ணாமலை வாயை திறந்தால் பொய். தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிட்டார். சும்மா திமுகவை திட்டிக் கொண்டிருந்தால் அவர்களால் வளரவே முடியாது. திமுக ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள்? அனைத்து ஓட்டுகளையும் திமுகவினரே போட்டார்களா? பிராமணர் சமூகத்தை யாரும் பெரிய வாக்கு வங்கியாக பார்க்கவில்லை.

பிராமணர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள். ஆனால், 3 சதவீதம் என்கிறார்கள். பிராமணர்களில் 50 சதவிகிதம் பேர் கையில் செல்போன் கூட இல்லாமல் உள்ளார்கள். தினசரி கூலி வேலை, கட்டிட வேலை, புரோகிதம் போன்ற பணிகளை தான் செய்கிறார்கள். EWS எந்த இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது அல்ல. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில், 7 பேராவது பிராமண எம்.எல்.ஏ.க்கள் இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒரு 3 பேர் இருந்தார்கள். இப்போது ஒருவர் கூட இல்லை.

பிராமணர் நல வாரியம் அமைப்போம் என்று நாளை திமுக அறிவித்தால், அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்தக் கட்சியிலும் சேர மாட்டேன். எந்த கட்சி இதைச் சொன்னாலும் அதற்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்வேன். யாராக இருந்தாலும் தனது சமூகத்திற்காக பேசுவது சரி. ஆனால் எந்தக் காரணத்திற்காகவும் மற்ற சமூகத்தை குறைத்து பேசுவது தவறான அயோக்கியத்தனமான செயல். இருவிதமான பிராமணர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.

பாஜக என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் ஒரு முட்டாள்தனமான பிரிவு இருக்கிறார்கள். ஜாதி, சடங்கு, சம்பிரதாயம் எல்லாவற்றையும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் தமிழ்நாட்டுக்காரன், இந்தியன் என்று இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் சாதியை தூக்கிக்கொண்டு அலைய முடியாது. தமிழக பாஜகவில் ஒரு பிராமணர்கள் கூட இல்லாத நிலையை அண்ணாமலை கொண்டு வந்துள்ளார். நான் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இல்லை.

ஆனால், அவர் பிரதமர் என்பதால் மோடியின் புகைப்படங்கள் என் வீட்டில் இருக்கிறது. என் வீட்டில் வந்து பாருங்கள் ஜெயலலிதா, கலைஞர் புகைப்படமும் தான் இருக்கிறது. எப்போது பள்ளிக்கூடத்தில் நீ என்ன சாதி என்று கேட்பதை நிறுத்துகிறார்களோ, அதுவரை சாதியை நிறுத்த முடியாது இது உண்மை. சமூகத்திற்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்து, அது எனக்கு தவறாக முடிந்துவிட்டது. என்னை கட்சி அரசியலுக்கு கொண்டு வந்தது ஜெயலலிதா தான். வேற்றுமையை பெரிதாக்கி வெறுப்பை வளர்த்தால் வாழ்வு சுமூகமாக இருக்காது. பொதுவெளியில் பேசும்போது, என்ன பேச வேண்டும் என்பதை விட, எதை பேசக்கூடாது என்பதை தெரிந்திருக்க வேண்டும். மைக்கை பார்த்ததும் வாந்தி எடுப்பது போல் பேசக்கூடாது.

கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். தமிழ்நாட்டில் குஷ்பு போல் நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று கஸ்தூரி இப்படி பேசி இருக்கலாம். தனக்கு அண்ணாமலை வாய்ப்பு கொடுப்பார் என நினைத்திருக்கலாம். ஆனால் அது ரிவர்ஸில் வொர்க் அவுட் ஆகிவிட்டது. ஆனால், சுதாகர் ரெட்டி போன்ற பாஜக தலைவர்களே அதனை எதிர்த்துவிட்டார்கள். தமிழ்நாடு பாஜகவில் கஸ்தூரிக்கு கதவு மூடப்பட்டு விட்டது. ஆந்திராவிலும் வழக்கு போட்டுவிட்டார்கள். கஸ்தூரி இனிமேல் தனி கட்சி ஆரம்பித்தால் வேண்டுமானால் எதிர்காலம் இருக்கும். ஏனென்றால் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

அமெரிக் அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரத்தில் சிறப்புப் பூஜை..!

அமெரிக் அதிபராக இந்திய வம்சாவளி அதாவது தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாக வேண்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக் அதிபராக கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆகையால், துளசேந்திரபுரம் கிராமத்தில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற சிறப்புப் பூஜைகள் செய்யபட்டது.

எடப்பாடி பழனிசாமி: 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்..!

2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா. மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள். திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது. ‌ குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட கட்சி திமுக. திமுகவில் அரசியலிலும் அதிகாரத்திலும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சரானார். திமுகவில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்த போதும் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். ஸ்டாலினுடன் மிசா சிறையில் சித்திரவதை அனுபவதித்த மூத்த நிர்வாகிகள் யாரும் அவர் கண்ணுக்கு தெரியவில்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.

திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைத்திருந்தால் அக்கட்சியில் ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். திமுகவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளனர்.

திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது. திமுகவில் ஸ்டாலின் அரசராகவும், உதயநிதி இளவரசராகவும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்தியாவில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்.

அதிமுகவினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே இரண்டரை ஆண்டுகள் கழித்து மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திமுக சொன்னது எல்லாம் அறிவிப்பு மட்டும்தான், மக்கள் நலனுக்கான திட்டங்கள் அல்ல. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை இல்லாத இடமே இல்லை. இதை தடுத்து நிறுத்தும் திராணி முதலமைச்சருக்கு இல்லை. போதைப்பொருள் விற்பனையை தடுக்க முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை.

கஞ்சாவை கட்டுப்படுத்த ஓ.1, ஓ.2, ஓ.3 என முன்னாள் டிஜிபி ஓ…. போட்டு கொண்டே சென்று விட்டார். நாட்டு மக்களை பற்றி கவலை படாமல் வீட்டு மக்களை மட்டுமே நினைக்கிறார் முதலமைச்சர். அதிமுக மூன்றாக போய்விட்டது நான்காக போய்விட்டது முதலமைச்சர் என்கிறார். நாங்கள் தான் அதிமுக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இதை நிரூபித்து காட்டியுள்ளோம். அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுக பிரிந்து இருப்பதால் ஓட்டு குறையும் என்றார்கள். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 1 சதவீதம் கூடுதல் வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் ஸ்டாலினால் அதிமுகவை வீழ்த்த முடியாது. திமுக சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக, சொந்த கட்சியையும் உழைக்கும் நிர்வாகிகளையும் நம்பியே உள்ளது. கூட்டணி இல்லை என்றால் திமுக இல்லை என்கிற நிலைதான் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றி கூட்டணி. 2026 தேர்தல் திமுகவை வீட்டுக்கு அனுப்பி, அதிமுக ஆட்சி அமைக்கின்ற தேர்தல். தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகள் தேனீக்களை போலவும், எறுப்புகளை போலவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அஸ்வத்தாமன்: இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது..!

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது என அஸ்வத்தாமன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வத்தாமன் பதிலளித்தார். அப்போது அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார். என தெரிவித்தார்

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கி றோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின் றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

ஆளுநரிடம் கோரிக்கை: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீதான குற்றவியல் நடவடிக்கை வேண்டும்..!

தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அஸ்வத்தாமன் பதிலளித்தார். அப்போது அண்மையில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது சர்ச்சை யாக்கப்பட்டது. இதில், ஆளுநர் மீது இனவாத அடிப்படை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். நான் பெருமைமிகு கிறிஸ்தவன் என சொல்லும் உதயநிதி, சனாதனத்தை வேரறுப்போம் என்கிறார். என தெரிவித்தார்

இதைப்போல், இனவாத கருத்துகளை தொடர்ந்து முன்வைப்பது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுப்பது, இனவாத கருத்துகளை பரப்பி மக்களிடையே அமைதியை குலைக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் மீது பிஎன்எஸ் சட்டம் 218-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கையை தொடங்குவதற்கான அனுமதிவழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கி றோம். இதுதொடர்பாக ஆளுநர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இங்கு மக்கள் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கின்றன. அவற்றில் கவனம் செலுத்தாமல் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்களை திசை திருப்பும் நயவஞ்சக நாடகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின் றனர். திமுகவின் வரலாறே இந்திய தேசத்துக்கு எதிரானது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதிலும், இனவெறி கருத்துகளை பேசுவதிலும், மதவெறியில் ஊறிப்போய் பேசுவதிலுமே இருக்கிறது.

இல்லாத இனவாதமான திராவிடத்தை பேசுவோர் கையில் தமிழ்ச் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதைவிடுத்து எப்போது அவர்கள் மனிதவாதம் பேசப்போகிறார்கள் என்பது தெரிய வில்லை என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.