Priyanka Chaturvedi : ‘தேர்தல் அறிக்கை’ அல்ல, ‘ஜூம்லா அறிக்கை’

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சிவ சேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி :”1 மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. வெறும் 13 நாட்களிலேயே பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது. இது பாஜகவின் ‘தேர்தல் அறிக்கை’ அல்ல, ‘ஜூம்லா அறிக்கை’ என பிரியங்கா சதுர்வேதிவிமர்சித்துள்ளார்.

Uddhav Thackeray எங்கள் கட்சி உங்கள் கல்விப் பட்டத்தைப் போல போலியானது என்று நினைக்கிறீர்களா..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உத்தவ் தாக்கரே தலைமையிலான போலி-சிவசேனா, சரத் பவாரின் போலி-என்சிபி மற்றும் மகாராஷ்டிராவில் எஞ்சியிருக்கும் காங்கிரஸ் உள்ளது. இந்த மூன்று கட்சிகளும் பொருந்தாத உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோரிக்ஷாவைப் போன்றது. அது எப்படி மகாராஷ்டிராவுக்கு நல்லது செய்யும், எப்படிச் செய்யும்” கூறி இருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமித் ஷாவின் கருத்திற்கு, பால்காரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, “எங்கள் கட்சி உங்கள் கல்விப் பட்டத்தைப் போல போலியானது என்று நினைக்கிறீர்களா… நான் தெளிவாகச் சொல்கிறேன். மோடியை மகாராஷ்டிரா ஏற்காது. தாக்கரேவும், பவார்களும்தான் இங்கு சத்தம் போடுவார்கள்” என்றார். எந்தக் கட்சி போலி, எது உண்மையானது என்பதை மகாராஷ்டிரா மக்கள் முடிவு செய்வார்கள் உத்தவ் தாக்கரே அமித் ஷாவை கடுமையாக சாடினார்.

Maharashtra: நீண்ட இழுபறிக்கு பிறகு ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு வெற்றி..! சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்து…!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. மகாராஷ்டிராவில் ‛இந்தியா’ கூட்டணியில் சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் அணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் ஆகமொத்தம் 5 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 21 இடங்களில் சிவசேனா உத்தவ் அணி காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதேபோல் மீதமுள்ள 10 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி போட்டியிடுகிறது.

சர்ச்சைக்குரிய சங்லி தொகுதியை சிவ சேனா தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், பிவாண்டி தொகுதியை காங்கிரஸ் எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், சிவ சேனாவின் பாரம்பரிய தொகுதியான மும்பை வடக்கு, இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராம ஜென்மபூமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா..! இது பாஜகவின் நிகழ்ச்சி..! இது பாஜகவின் பேரணி…!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இந்தவழக்கில் “1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட முதல் 10 பேரில் பலர் சிவ சேனாவைச் சேர்ந்தவர்கள். பாபர் மசூதியை இடித்ததற்காக சிவ சேனாவைச் சேர்ந்த 109 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது” என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் ராம ஜென்மபூமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழில், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், “…இதெல்லாம் அரசியல், பாஜகவின் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்? இது தேசிய நிகழ்வு அல்ல. . இது பாஜகவின் நிகழ்ச்சி, இது பாஜகவின் பேரணி. ‘உஸ்மே பவித்ரதா கஹான் ஹை?’… பாஜகவின் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் (அயோத்தி) செல்வோம்.” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரேவுக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பு…!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு காரணமாக இருந்த ஒரு சிலருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது தெரிகிறது.இதுதொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், செய்தியாளர்களிடம் பேசுகையில், “1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட முதல் 10 பேரில் பலர் சிவ சேனாவைச் சேர்ந்தவர்கள்.

பாபர் மசூதியை இடித்ததற்காக சிவ சேனாவைச் சேர்ந்த 109 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது” ஆனால் பால் தாக்கரே வாரிசுக்கே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும் என தெரிவித்துள்ளார்.

சிவசேனா: மாயாவதி மற்றும் ஒவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்…!

நடந்தது முடிந்த உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட்,  மணிப்பூர்,  பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் இதுகுறித்து பேசுகையில், ‘4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதில் நாங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் ஒரு பகுதி.

மேலும் உத்தரகாண்டில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தோற்றது ஏன்? கோவாவில் 2 துணை முதல் மந்திரிகள் தோற்றது ஏன்? எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, பஞ்சாப் மாநிலத்தில் பாஜக போன்ற தேசிய கட்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு மந்திரி என அனைவரும் பஞ்சாப்பில் பிரமாண்டமாக பிரசாரம் செய்தும் அங்கு ஏன் பாஜக தோல்வியடைந்தது என கேள்வி எழுப்பினர்.

இதுமட்டுமின்றி பிரதமர், உள்துறை மந்திரி, பாதுகாப்பு மந்திரி என அனைவரும் பஞ்சாபில் பிரமாண்டமாக பிரசாரம் செய்தும் காங்கிரஸ், சிவசேனாவை விட குறைந்த வாக்குகளே பாஜக பெற்றுள்ளது. உத்தர பிரதேசம் அவர்களின் மாநிலமாக இருந்தபோதும், சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் இருந்து 111 இடங்கள் கைப்பற்றியிருக்கிறது. மேலும் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மற்றும் ஒவைசி பங்களித்துள்ளனர், எனவே அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஜனி பாட்டீல் மாநிலங்களவை உறுப்பினராக  போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ராஜீவ் சதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். எனவே இந்த காலியிடத்துக்கு வருகிற 4-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மகா விகாஷ் அகாடி கூட்டணிகள் சார்பில் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ரஜனி பாட்டீலும், பாஜக சார்பில் சஞ்சய் உபாத்யாய் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருப்பதால், இவர் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உருவானது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே மற்றும் மந்திரி பாலசாகேப் தோரட் ஆகியோர் சமீபத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாக ஏதுவாக பாஜக வேட்பாளரை போட்டியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் என்பதால், பாஜக வேட்பாளர் சஞ்சய் உபாத்யாய் கடைசி நேரத்தில் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். பாஜக வேட்பாளர் மனுவை திரும்ப பெற்றதால், காங்கிரஸ் வேட்பாளரை தவிர வேறு யாரும் போட்டியில் இல்லை. எனவே அந்த கட்சி வேட்பாளர் ரஜனி பாட்டீல் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார்.