10-ஆம் வகுப்பு படித்த.. “கடவுளை அடையும் வழி” என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு கோடிகளை குவித்த மகாவிஷ்ணு..!

இன்று பாப்பரப்பிற்கு பஞ்சமில்லாத மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம், மேலும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை சாமியார் நித்தியானந்தாவை போல் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், ‘என் கனவில் சித்தர்கள் தோன்றி சொன்னவற்றைத்தான் கூட்டத்தில் பேசினேன்’ என்றும் மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அசோக் நகரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு மத்தியில் தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள் கண் இல்லாமல், கால் இல்லாமல் பிறக்கிறார்கள். அவ்வாறு பிறப்பதற்கு காரணம், அவர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியம்தான் காரணம் என்றும், கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றால் அவ்வாறு ஏன் வேறுபாட்டுடன் படைக்கிறார் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியும், மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியும் மகாவிஷ்ணு பேசினார். இந்த பேச்சுக்கு அங்கிருந்த பார்வையற்ற ஆசிரியர் சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது விஷ்ணுவுக்கும், ஆசிரியருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்கள், இந்திய மாணவர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் சைதாப்பேட்டை ஜீயர் சந்து பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான விஜயராஜ் என்பவர் கடந்த   6 -ஆம் தேதி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், நாங்கள் ஏதோ முன்ஜென்மத்தில் பாவம் செய்தது போலவும், குற்றம் செய்தது போலவும் கேவலமாகப் பார்ப்பார்கள்.

மாணவர்கள் மத்தியில் இப்படி பேசினால் அவர்கள் எப்படி மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை மதிப்பார்கள். எனவே சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி சைதாப்பேட்டை ஆய்வாளர் சேட்டு விசாரணை நடத்தி சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் படி 192, 196(1)(ஏ), 352, 353(2), 92(ஏ) ஆகிய 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். இதனிடையே சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிவந்த போது, நேற்று முன்தினம் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மகாவிஷ்ணுவை சிறையில் அடைப்பதற்கு முன்பாக காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தரும் தகவல்களை அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அந்த வாக்குமூலம் குறித்து காவல்துறையின் தெரிவிக்கையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மகாவிஷ்ணு, இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ‘பரம்பொருள்’ என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி கோயில் திருவிழாக்களில் சொற்பொழிவு ஆற்றி வந்துள்ளார். மேலும் தனது சொற்பொழிவுகளை பரம்பொருள் என்ற யூடியூப் சேனல் மூலம் உலக முழுவதும் பரப்பி குறுகிய காலத்தில் பிரபலமாகியுள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு அவருக்கும், அவரது அறக்கட்டளைக்கும் அதிக நிதியை அள்ளித் தந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளிலேயே மகாவிஷ்ணு கோட்டீஸ்வரராக மாறினார்.

திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல சாமியார் நித்தியானந்தாவை போல், தானும் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் “கடவுளை அடையும் வழி” போன்ற தலைப்புகளில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மூலம் பேசி தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துள்ளார். மகாவிஷ்ணு அடிக்கடி தியானம் செய்வது வழக்கம். அப்படி தியானம் செய்யும் போது, மகாவிஷ்ணுவிடம் ‘சித்தர்கள்’ பலர் தோன்றி பேசி வந்ததாகவும், சித்தர்கள் அளித்த வரத்தால், 10-ஆம் வகுப்பு வரை படித்திருந்த அவருக்கு பெரிய அளவில் ஞானம் கிடைத்ததாகவும், சித்தர்களே தன்னை வழிநடத்துவதாகவும் மகாவிஷ்ணு தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை ஏன் இழிவாகப் பேசினீர்கள் என்று கேட்டதற்கு, ‘சித்தர்கள்’ கனவில் கூறியதைத்தான் நான் பேசினேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. மாணவ, மாணவிகளை நல்வழிப்படுத்தும் நோக்கிலேயே நான் பேசினேன். இதுபோன்று உலகம் முழுவதும் சென்று சொற்பொழிவு நிகழ்த்தி இருக்கிறேன். அசோக் நகரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசும்போது அங்கு பார்வைற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என மகாவிஷ்ணு கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு சமுதாய வளைகாப்பு விழா

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை இயக்குனர் அமுதவல்லி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு தென்சென்னை சார்பாக ப ழங்குடியின நல ஆர்வலர் ஸ்டான் லூர்துசாமி மறைவிற்கு இரங்கல்

சென்னை சைதாபேட்டையில், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு தென்சென்னை சார்பாக ப ழங்குடியின நல ஆர்வலர் ஸ்டான் லூர்துசாமி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிக்காதே! CAA,NPR, NRC யை – கைவிடு காஷ்மீரின் பறிக்கப்பட்ட 370 வது பிரிவை திரும்ப வழங்கிடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், ராமகிருஷ்ணன், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைப்பு

சென்னை சைதாப்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டமன்ற அலுவலகத்தை தொகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, பகுதிச் செயலாளர்கள்‌ துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, வட்ட செயலாளர்கள் S.P. கோதண்டம், M. நாகா கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்.

4-ம் வகுப்பு மாணவன் உண்டியல் சேமிப்பை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெ. கிஷோர் குமார் அவர்களின் மகன் அஹோபிளம் மஹரிஷி பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் கி.விபுல் கல்யாண் உண்டியல் சேமிப்பை 4000 கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.

சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்ட ரை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியுடன் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.