ஆர்பி உதயகுமார்: வயிற்றுப் பிழப்புக்காக அதிமுகவிலிருந்து திமுகவிற்கு மாறியவர்கள் திமுகவை தாங்கி பிடிக்கின்றனர்..!

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள் என R.B. உதயகுமார் தெரிவித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக் சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள கோபிநாயக்கன்பட்டியில் பெண்களை ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய R.B. உதயகுமார்,” திருமங்கலம் நகராட்சியில் மட்டும் 300 கோடி அளவில் திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

ஆனால் சிலர் என் மீது பழியை போட்டு எதுவும் செய்யவில்லை என்று வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்கள். இதே பதட்டம் அவர்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் உள்ளது. சட்டமன்றத்திலே ஆளும் கட்சி அதிமுக என்று ஒப்புதல் வழக்குமூலமே கொடுத்துவிட்டு பின்பு பதட்டமாக இருந்தது என்று பேசிட்டேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் கேள்வி இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் இதே திமுக எதிர் கட்சியாக இருந்தபோது வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் திமுக ஆட்சியில் தான் திருக்கோயிலில் கல்யாணம் நடைபெற்றது என்று பொய்யான தகவலை தந்தார். இவர் அதிமுகவில் இருக்கும் பொழுது புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தார். அப்போது 1008 சாமானிய மக்களுக்கு திருக்கோயில் கல்யாணம் நடத்தப்பட்டது .இதை இங்கே கற்றுக்கொண்டு அங்கே போய் இதை செய்துள்ளார்.

மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தை திமுக செய்ததாக பேசுகிறார். அம்மா தான் முதன் முதலில் ஆலயங்கள் தோறும் அன்னதானத் திட்டத்தை கொண்டு வந்தார். சேகர்பாபு பொய்யை தவிர வேறு ஏதும் தெரியாது. அது மட்டுமல்ல கருணாநிதி சமாதியின் மீது ஆண்டாள் கோபுரத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது இப்படி செய்த சேகர் பாபு பதவி விட்டு நீக்க வேண்டும். இன்றைக்கு திமுகவின் ஒரிஜினல் வித்துக்கள் எல்லாம் அமைதியாக உள்ளனர்.

ஆனால் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வயிற்றுப் பிழப்புக்காக வேஷ்டி மாற்றிக் கட்டிக் கொண்ட சிலர் திமுகவை தாங்கி பிடிப்பது போல பேசுகிறார்கள். அதேபோன்று சட்டமன்ற 72விதியின் படி அமைச்சர்கள் பொன்முடி, நேரு, செந்தில் பாலாஜி ஆகியோரை பதிவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்த போது அதை ஏற்கக் கூடாது என்று முதலமைச்சர் சபாநாயகரிடம் கண் ஜாடை காட்டுகிறார்.

இன்றைக்கு பொன்முடியை நீதிமன்றமே கடுமையாக கண்டித்து உள்ளது. இவரின் மீது தாமாக வழக்கு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டாம் அவரை பதவியில் விட்டு நீக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இன்றைக்கு பெண்களை ஆபாசமாக பேசிய திமுகவிற்கு 2026 தேர்தலில் நீங்கள் சரியான பாடத்தை பெண்கள் புகட்ட வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு விழக் கூடாது. இதன் மூலம் திமுகவிற்கு பூஜ்ஜியத்தையும், அதிமுகவிற்கு ராஜ்ஜியத்தையும் கொடுக்க வேண்டும் என R.B. உதயகுமார் தெரிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்: “பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது…! ”

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுப்பட்டி, பேரையூர் ரோட்டிலுள்ள சிவன் கோயில் அருகே நடைபெற்றது. மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், “இன்றைக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், “முல்லைப் பெரியாறு அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும்?” என்று கூறுகிறார். முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் கூட கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. அப்படியிருந்தும் முல்லை பெரியாறு அணை குறித்து முதல்வர் வாய் திறக்காமல் மவுன சாமியாராக தான் உள்ளார். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?

இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால், அந்த விழாவுக்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். இதுவரை பாஜக எதிர்ப்பாளராக தன்னை காட்டிக் கொண்ட திமுகவும், அதன் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டவிட்டது. என் அப்பாவுக்கு நாணயத்தை வெளியிட மத்திய அரசையும், அதன் அமைச்சர்களையும், பாஜகவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கிறார். ஆனால், இன்றைக்கு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்துக்கு போதுமான நிதி ஒதுக்காதபோது இப்படி அவரை மத்திய அரசை வலியுறுத்த வில்லை. கீழே இறங்கி சென்று உதவி கேட்கவில்லை.

ஆனால், அப்பாவின் நாணயம் வெளியிடும் விழாவுக்கு கீழே இறங்கி சென்று பாஜகவினர் அனைவரையும் வரவேற்கிறார். கேட்டால், திமுகவினர், மாற்று கட்சியினருக்கு, மாற்று கொள்கை கொண்டவர்களுக்கும் மரியாதை கொடுக்க தெரிந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். அப்படியென்றால், நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால், ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தை பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக மாறிவிட்டது,” என ஆர்.பி.உதயகுமார் விமர்ச்சித்தார்.

ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்: “முதல்வர் பதவிக்கு அண்ணாமலை ஆசைப்படுவதற்கு முன்பு…வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி..!”

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறுப்பினர் அட்டைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “தமிழகத்தில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி ஆட்சி என்று அண்ணாமலை பேசுகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி 50 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எதையும் அறிவுசார்ந்து, நூறு தடவை யோசித்துத்தான் பேசுவார். அண்ணாமலைக்கு ஆட்சி, அரசியல், வரலாற்றைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது? இதே அண்ணாமலை தான் அதிமுக இருக்கக் கூடாது என்று சொன்னார். இவர் தாத்தா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. இன்றைக்கு விரக்தியின் விளிம்பில் அண்ணாமலை பேசுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்துக்காக மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. ஆனால், அதிமுக ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருக்கும்போதும் மக்கள் சேவை செய்வதில் நாங்கள் பின்வாங்குவதில்லை. தமிழகத்துக்காக வாதாடி, போராடி நிதியைப் பெற்றுத் தராத அண்ணாமலை, முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். அது பகல் கனவு. முதலில் அவர் வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று பொதுச்சேவை செய்து, அதன் பின்பு சட்டமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்றி கஷ்ட நஷ்டம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவுக்கு மதிப்பெண் கொடுக்க நீங்கள் யார்? அண்ணாமலை ஐபிஎஸ் படித்த மேதாவியாக இருக்கலாம். அவருக்குத் தமிழகத்துக்கு ஒரு பைசாகூட நிதி பெற்றுத்தர அருகதை இல்லை. ஆனால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அதிமுக பற்றிப் பேச இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?

மாநில தலைவராக உள்ள நீங்கள், டெல்லியில் சென்று முற்றுகையிட்டு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி வாங்கி வந்தீர்களா? வளர்ச்சி நிதி வாங்கிவந்தீங்களா? வறட்சி நிதி வாங்கி வந்தீர்களா? எட்டு முறை தமிழகத்திற்குப் பாரதப் பிரதமரை அழைத்து வந்த நீங்கள் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்த போதும், பேரிடர் காலத்திலும் அவரைக் கூட்டி வந்தீர்களா? இது எதுவும் அண்ணாமலை செய்யவில்லை” என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.