ராகுல்காந்தி: இந்திய-சீன எல்லையில் புதிய போர் அபாயம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அந்த பதிவில், “எல்லைகளில் புதிய போர் அபாயத்தை சந்தித்து வருகிறோம். அதை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

சம்பித் பத்ரா: ராகுல் குழப்பத்தில் இருக்கிறார்

கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக ராகுல் காந்தி, நேற்று கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், நேற்றையில் இருந்தே நாங்கள் இதைப்பற்றி அஞ்சி வந்தோம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் எப்போதெல்லாம் நல்லது நடக்கிறதோ, அப்போதெல்லாம் அதைத் தடம் புரளச்செய்வதற்காக காங்கிரசும், ராகுலும் எதையாவது செய்கிறார்கள். நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கிறபோதெல்லாம் ராகுல் காந்தியும், காங்கிரசும் அந்த முயற்சிகளை தடம்புரளச் செய்யும் விதத்தில் அரசியல் செய்கிறார்கள்.

உள்ளபடியே எங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் உண்மையாகவே ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்கிறது. ராகுல் குழப்பத்தில் இருக்கிறார். காங்கிரஸ் முரண்பாடான கோரிக்கைகளை முன்வைக்கிறது என தெரிவித்தார்.

ராகுல் காந்தி: “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதே எனது நோக்கம்”

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூடி நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உ.பி. சட்டசபை தேர்தல், அடுத்த நாடாளுமன்ற தேர்தல், 3-வது அணி அமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே கொரோனா தொற்று பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய ராகுல் காந்தியிடம், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பற்றி நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். ஆனால் அவற்றுக்கு பதில் அளிப்பதை ராகுல் காந்தி தவிர்த்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இப்போது கொரோனா மீது கவனம் செலுத்துவதுதான் எனது நோக்கம்.

நாங்கள் நினைக்கும் திசையில் அரசு செயல்படவேண்டும் என்று சுட்டிக்காட்டுவதுதான் எனது நோக்கம். எனவே இதில் இருந்து உங்களை அல்லது என்னை திசை திருப்ப மாட்டேன். அரசியலில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இங்கும், அங்கும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப்பற்றி விவாதிக்க ஒரு நேரம், இடம் உள்ளது என தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ராகுல் காந்தியின் 51 பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 151 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா வழங்கினர்.