உச்ச நீதிமன்றம் உத்தரவு: ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க மட்டும்தான்..! வயது நிர்ணயம் கூடாது..!

ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் ஒன்று. பிறந்த தேதியை, வயதை கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்கும் போது மோட்டார் விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் ஆதார் அடிப்படையில் வயதை 45-ல் இருந்து 47ஆக தவறாக கணக்கிட்டது. இதனால் பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தில் இறந்தவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை ரூ.19.35 லட்சத்தில் இருந்து ரூ.9.22 லட்சமாக குறைந்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, வயதை கணக்கிட சிறார் நீதி சட்டம், 2015 பிரிவு 94-ன் கீழ் பள்ளி விடுப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியிலிருந்து இறந்தவரின் வயதை தீர்மானிக்க வேண்டும். ஆதார் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் ஒன்று. பிறந்த தேதியை, வயதை கண்டுபிடிக்க ஆதாரை பயன்படுத்த வேண்டியது இல்லை’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பாஜகவில் 46 காங்கிரஸ் கவுன்சிலர்கள் இணைந்தனர்

பஞ்சாப் மாநிலத்தின் உள்ள அபோஹர் சட்டப் பேரவை தொகுதி, காங்கிரஸ் கோட்டையாக இருந்தது வந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் 10 முறை வென்றுள்ளது. இதில் 8 முறை சுனில் ஜாக்கர் குடும்பத்தினர் வென்றுள்ளனர்.

இந்நிலையில் சுனில் ஜாக்கர், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இப்பதவியை ஏற்றபின் அவர் முதல் முறையாக நேற்று சொந்த ஊர் அபோஹர் திரும்பினார். அப்போது அபோஹர் மேயர் விமல் தத்தாய், மூத்த துணை மேயர் கன்பத் ராம், துணை மேயர் ராஜ்குமார் நிரணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 46 பேர் பாஜகவில் இணைந்தனர்.

கிண்டி ராஜ்பவன்: தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பு

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். ஏறக்குறைய 4 ஆண்டுகள் பணியாற்றிய பன்வாரிலால் புரோகித், திடீரென பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.