வி.கே.சசிகலா: பெரியாரும், அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை..!

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை என வி.கே.சசிகலா தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று சசிகலா மதுரை வந்தார். விமான நிலையத்தில் வி.கே.சசிகலா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ”மதுரையில் சில நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் போக வழியின்றி, முல்லைநகர், குறிஞ்சி நகர், பி.பி.குளம் போன்ற பகுதியில் தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மா காலத்தில் ஒரு அமைச்சரே ஒரு துறையை பார்க்கும்போது, பிரச்சினை இல்லை. தற்போது 3 அமைச்சர்கள் ஒரு துறையைப் பார்க்கின்றனர்.

திமுக ஆட்சியில் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகளை ஒழுங்காக நடத்துகின்றனர். தமிழக மக்கள் திமுக அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2026 -ல் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரை கிழிக்கிறார்கள் என்பதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தலைவருக்கும், அவருக்குப் பின்பு அம்மாவிற்கும் இது போன்று நடந்துள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்ஜிஆர் திமுகவில் இருந்தபோது 60 கூட்டங்கள் நடத்தியுள்ளார். அம்மா முதலமைச்சராவதற்கு முன்பே 10 ஆண்டுகள் கட்சிப் பணி செய்துள்ளார். யார் சொன்ன கருத்தாக இருந்தாலும், சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்காது. சில கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.

சமூக நீதிக் கொள்கையை பட்டிதொட்டியிலுள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு திராவிடத் தலைவர்கள் வளர்ந்துள்ளனர். பெரியாரும் அண்ணாவும் சாதி, மதமெல்லாம் பார்த்ததே இல்லை. எம்ஜிஆரும், அம்மாவும் 68 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்துவிட்டோம். எந்த மாநிலத்திலும் இது நடைமுறையில் இல்லை.

2026-ல் பாருங்கள். அதிமுக ஒன்றிணைவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். அப்படி ஒன்றிணையும்போது, யாரை மக்கள் விரும்புகிறோர்களோ அவர் தான் முதலமைச்சராக இருப்பார். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எதுவாக இருந்தாலும் உங்களுக்குத் தெரியவரும்.” என வி.கே.சசிகலா தெரிவித்தார்.

பெரியார், அம்பேத்கருக்கு நடுவே விஜய்..! வைரலாகும் தவெக மாநாட்டு திடல் புகைப்படம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநாட்டு திடலில் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு நடுவே விஜய்யின் கட்-அவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

“பெரியார், அம்பேத்கர் கருத்துகளை வளப்படுத்துபவர்” திருமாவளவன்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்

திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.

இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது.  அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  சிறப்பித்தார்.

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை இனி வரும் காலங்களில் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டுமென்கிற மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கினங்க இன்று காலை அண்ணா அறிவாலய வளாகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் DR.M.SUBRAMANIYAN.BA.LLB.அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏனைய மாண்புமிகு அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மகளிரணி சகோதரிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்ட வரலாற்று சிறப்புமிகு உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் வேளச்சேரி மேற்கு 178-வது வட்டக்கழக செயலாளர் சேவைமாமணி K.N.தாமோதரன் அவர்கள் கழக உடன்பிறப்புகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

கடலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நெய்வேலி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கடலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெய்வேலி வட்டம் 2 ஸ்டோர் ரோடு அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் தணிகைச்செல்வன் தலைமை வகித்தார், தெற்கு மாவட்ட தலைவர் குமரவேல் மேற்கு மாவட்ட தலைவர் ஐயா சாமி மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், சண்முகராஜன், அன்ன பிரகாஷ் துணைத் தலைவர் சந்திரபாபு மற்றும் மாவட்ட பொருளாளர் விஜயகாந்த் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் இரா. வைத்தீஸ்வரன் அவர்களும் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், மற்றும் ஊடகப் பிரிவை சேர்ந்த T. பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டு பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் மாவட்ட சட்டமன்ற தொகுதி ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ஜோதி முருகன் அவர்கள் நன்றி தெரிவித்தார்