Palanivel Thiaga Rajan: தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 19 -ஆம் தேதி 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் அடுத்து ஏப்ரல் 26 -ஆம் தேதி கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் மீதம் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பீர்கள்அதை எல்லாம் குழந்தைகள் அதிகம் வைத்துள்ளவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். இதுதேவைதானா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் இதையே சொல்கிறது முன்பு மன்மோகன் சிங் ஆட்சி இருந்தபோதும் இதையே சொன்னார்கள் இதுதான் நகர்ப்புற பயங்கரவாதம்இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலி இருக்காது” இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது “எக்ஸ்” பக்கத்தில், பிரதமர் மோடி பேசியதை பகிர்ந்து, “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாஜகவின் தேர்தல் அத்துமீறல்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதை உணர்ந்தும் விதமாக “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.

Palanivel Thiaga Rajan: உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார். அப்போது, உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜகதான்.

ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 பேர் பாஜகவின் வாஷிங் மெஷினால் சுத்தமாகிவிட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல நிறுவனங்கள் பாஜகவுக்கு பல நூறு கோடிகளை கொடுத்துள்ளார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மக்களாட்சி முறையும் நீடிக்காது என பழனிவேல் தியாகராஜன் பேசினார்.