நாமக்கலில் சினிமா பாணியில் வடமாநில பவாரியா கும்பல் துப்பாக்கி முனையில் கைது..!!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் ஏ.டி.எம் கொள்ளையர்களை விரட்டி சென்ற காவல்துறை போலீஸ் துப்பாக்கி முனையில் 5 பேர் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியது. கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்.-களில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையத்தில் பிடிபட்டனர்

கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் எந்திரங்களை கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து பணம் கொள்ளையடித்தனர். கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை கன்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தமிழ்நாடு தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் வழிகளில் ஏராளமான வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி வந்துள்ளது.

தாறுமாறாக சென்ற கன்டெய்னர் லாரியை காவல்துறை 30 வாகனங்களில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். கன்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்றதால் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி ஓட்டுநரை சுட்டுக் கொன்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கொள்ளையர்களின் கன்டெய்னர் லாரியை காவல்துறை மடக்கிப்பிடித்தனர்.

துப்பாக்கியுடன் கன்டெய்னர் லாரியில் வந்த கொள்ளையர்களை காவல்துறை பிடித்தனர். குமாரபாளையம் அருகே காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

ராஜஸ்தான் கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரிக்குள் கார், ஏ.டி.எம். இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மற்றொரு ஏடிஎம் எந்திரத்தையும் தூக்கி வந்தனர். ராஜஸ்தான் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பிடிபட்டது பவாரியா கும்பல் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்த கும்பலை துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழ்நாடு காவல்துறை பிடித்துள்ளது. கன்டெய்னர் லாரியில் சென்று நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளையடிப்பது பவாரியா கும்பலின் வழக்கம். ஏ.டி.எம் கொள்ளையில் மட்டுமின்றி கேரளாவில் நடந்த 2 கிலோ தங்கம் வழிப்பறியிலும் பிடிபட்டவர்களுக்கு தொடர்பா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Rajnath Singh: “நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு…!”

நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தமிழ் கலாச்சாரம் பழமையான பாரம்பரியத்தைக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனைகளை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்திய பொருளாதாரம் உலகளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் உள்ளது. 2027-ல் 3-வது இடத்தை அடையும் என நான் உறுதியளிக்கிறேன்.

கடந்த முறை தேர்தலில் 303 சீட்கள் பெற்று பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தோம். தற்போது நடைபெற உள்ள 2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும் என உறுதியாக கூறுகிறேன். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து இண்டியா கூட்டணி என்கின்றனர். நமது தேசிய ஜனநாயக கூட்டணி வேலை செய்யும் விதம் வேறு. அவர்கள் வேலை செய்யும் விதம் வேறு. நமது கூட்டணி முன்னோடியாக இருந்து தேர்தலை சந்திக்கிறது. பாஜக செய்வததையே சொல்லும். எனினும், சொல்லாததையும் பாஜக தலைமையிலான அரசு செய்து கொண்டுள்ளது.

தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுப்பட்டன. அந்த வகையில் நாம் ராமர் கோயிலை கட்டி முடித்துள்ளோம். நாம் இப்போது ராம ராஜ்ஜியத்தை, ராமர் ஆட்சியை அமைத்துக் கொண்டுள்ளோம். அதுபோல் காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவை தேர்தல் வாக்குறுதிபடி ரத்து செய்துவிட்டோம். தற்போது காஷ்மீர் நம் நாட்டின் ஓர் அங்கமாக உள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது எந்த மத்தத்துக்கும் தீங்கானது இல்லை. எந்த மதத்தினரும் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை. அவர்கள் முஸ்ஸிமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை. குடியுரிமை சட்டம் என்பது நமது நாட்டுக்குரியது. முத்தலாக் தடை சட்டம் என்பது முஸ்லிம் சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் நன்மை பயக்கும் சட்டமாகும்.

சுதந்திரத்துக்கு பின்பு எந்த பிரதமர் தலைமையிலும் நாடு முன்னேற்றேம் அடையவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வலுவடைந்துள்ளது. 21-ம் நூற்றாண்டில் நமது நாட்டின் பொருளாதாரத்தை உலகம் உற்று நோக்கிக் கொண்டுள்ளது. தேர்தல் உத்தரவாதங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். இனிமேல் கொடுக்கும் உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும். நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

நமது ராணுவம் மிக பலமாக உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சராக உறுதி கூறுகிறேன். நமது ராணுவ தளவாடங்கள் அது ஏவுகணை, புல்லட் என அனைத்தும் இதுவரை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். தற்போது பிரதமர் மோடி தலைமையில் நாம் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதில்லை. மாறாக, நாமே தயாரித்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொண்டுள்ளோம். மேலும், அதை ஏற்றுமதி செய்யவும் தயாரித்துக் கொண்டுள்ளோம்.

ஆயுஷ்மான் திட்டத்தில் ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டியுள்ளோம். ஸ்வட்ச் பாரத் திட்டத்தில் கழிவறைகள் கட்டிக் கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு 3 தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் வழங்குகிறோம். சிறு சிறு வியாபாரிகளுக்கும் நல்லது செய்து கொண்டுள்ளோம். அவர்களுக்கு கடன் கொடுத்துக் கொண்டுள்ளோம். 2047-ம் ஆண்டு நாம் மிகப் பெரிய சக்தியாகவும், மிக சிறந்த நாடாகவும் விளக்கவும் முயற்சி செய்து கொண்டுள்ளோம்.

திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக உழைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. தேசம்தான் முதலிடம் என நாம் உழைத்துக் கொண்டுள்ளோம்” என ராஜ்நாத் சிங் பேசினார்.

நாமக்கல் வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாய் பணம்..!

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. நாமக்கல் மோகனூர் ரோடு காந்தி நகரை சேர்ந்த பேருந்து மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் சந்திரசேகரன்.

மேலும், சந்திரசேகரன் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செயலராகவும் உள்ளார். தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் நேற்று மதியம் இவரது வீட்டுக்கு சோதனை நடத்தினர். இரவு 10 மணி வரை நடந்த சோதனையில் வீட்டில் பல இடங்களில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த ரூ. 4.8 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

சிப்காட் வருவதை தவிர்க்க வலியுறுத்தி 47 வது கட்ட போராட்டம்..!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வளையப்பட்டி புதுப்பட்டி அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிப்காட் வருவதை தவிர்க்க வலியுறுத்தி இன்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் வளையப்பட்டியில் 47-வது கட்ட போராட்டம் நடைபெற்றது.இப் போராட்டத்திற்கு‌ விவசாயம் முன்னற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கம்யூனிஸ்ட் ரவீந்திரன், சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர்கள் சரவணன், பழனிவேல், தண்டபாணி, உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் குறிப்பாக சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என்று கோஷங்கள் எழுப்பியதால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வருகின்ற தை பொங்கல் அன்று சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கருப்பு பொங்கல் வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு முன்னாள் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல்லில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பெங்களூரு செல்லும் 42 ஆலய மணிகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 2024ல் நடைபெறும் நிலையில் பெங்களூருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் பக்தர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் என்ற யூனிட்டில் 48 மணிகள் தயாரிக்க கடந்த மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார்.

அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில் 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை தயார் செய்துள்ளனர். மொத்தம், 1,200 கிலோ எடையுள்ள, 42 மணிகள் கட்டி முடிக்கப்பட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின், பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 6 மணிகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு மருத்துவக்கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடீர் சோதனை..!

நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் மரு.க.ச.அருண் மற்றும் நாமக்கல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முருகன் தலைமையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீன் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது இந்த ஆய்வின் போது உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் , தரமான மூலப்பொருட்களை கொண்டு தரமான உணவு தயாரித்து வழங்க வேண்டும், பொருள்கள் வைக்கும் இருப்பு அறை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முதலில் வந்த உணவு பொருட்களை முதலில் பயன்படுத்த வேண்டும் எனவும், விடுதியில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும், உணவுப் பொருளை கையாளும் பணியாளர்கள் ஏப்ரான் தொப்பி கையுறை, ஆகியவை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருளை கையாளும் பணியாளர்கள் எந்தவிதமான தொற்று நோய்க்கும் ஆளாகவில்லை என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் பெற்றிருக்க வேண்டும் என அங்குள்ள பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபடும் பேரன்கள் மற்றும் பேத்திகள்…!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மங்களபுரம் ஊராட்சி தாண்டாக்கவுண்டன் புதூர் அருகே உள்ள அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து, இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியிலுள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து போது மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார்.

இந்நிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் காலமானார்கள். அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தான் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்த நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.

ஆனால் பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு சிலை வைக்க அவரது பேரன்கள், குடும்பத்தினர், உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கு கோவில் கட்டி முழு உருவச்சிலை வைத்தனர். அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்றுமுன்தினம் வேம்பு அரச மரத்தடியில் விநாயகர் சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதனையடுத்து அய்யமுத்து-அய்யம்மாள் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து குடும்பத்துடன் அவர்கள் வழிபட்டனர். தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள் மற்றும் பேத்திகளின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

76 -வது சுதந்திர தின விழா முன்னிட்டு நாமக்கல்லில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை..!

நாட்டின் 76 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

ஆட்சியர் உமா தேசியக்கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளார். நேற்று காலையில் காவல்துறை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற காவல்துறை துப்பாக்கி ஏந்தியவாறு கம்பீரமாக நடந்து வந்தனர்.

கண்டு கொள்ளாத ஆட்சியர்: குறைத்தீர் கூட்டத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் …!

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த மாத கூட்டத்தில் அதிகாரிகள் செல்போன் பார்ப்பதை அறிந்த ஆட்சியர் அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகள் கூட்டத்தில் முறையாக விவசாயிகளின் பிரச்சினையை கவனிக்காமல் தங்களது செல்போன்களில் வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை அதிகாரிகள் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

ஆட்சியர் நடத்தும் குறைதீர் கூட்டதில் குறைகளை கேட்காமல் அலட்சியமாக செல்போன்களில் வீடியோ காட்சிகள் பார்த்துக் கொண்டு உள்ள அதிகாரிகளின் செயல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மட்டுமல்லாது விவசாயிகளையும் அவமான படுத்தும் செயல் என சமூக ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்

பொறுப்பில்லாத மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையால் பாதிக்கபட்ட மாணவர்கள்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு உற்பட்ட வடுகபட்டியில் கடந்த பல ஆண்டுகளாகவே இரு தரப்பினர் இடையே விரோத போக்கு நடைபெற்ற நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் பலி வாங்கும் அளவிற்கு  விபரீதமானது. அதன்பின்னர் பல ஆண்டு காலம் பொதுமக்கள் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்  சேந்தமங்கலம் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

அதனைத்தொடர்ந்து சிறுசிறு சம்பவங்கள்அவ்வப்போது நடந்த வண்ணமே உள்ளது. 2021 புத்தாண்டு கொண்டாத்தின்போது மீண்டும் மோதல் வெடிக்க இதனைத்தொடர்ந்து மீண்டும் பகை மூண்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் குறித்து  மற்றொரு தரப்பினர் தரக்குறைவான வார்த்தைகள் பேசி வாட்ஸ் ஆஃப் வெளியிட அது பூதாகரமான நிலையில் காவல் நிலையம் செல்ல முயற்சி செய்தபோது  வாட்ஸ் ஆஃபில் தரக்குறைவான வார்த்தைகள் பேசி வெளியிட்டவர்கள் பெற்றோர் பிள்ளைகள் தெரியாமல் தவறு செய்து விட்டனர் நீங்கள் புகார் கொடுத்தால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் இனிது போன்று பார்த்து கொள்கின்றேன் என்ன கோட்டுக்கொள்ள பாதிக்கபட்ட சமுதாயத்தினர் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆங்கில புத்தாண்டு ஆண்டு அன்று ஒரு தரப்பு இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் சாலையில் எழுதி உள்ளனர். அன்று இரவு மற்றொரு தரப்பு ஜாதி சங்க கொடியை யாரோ ஒரு சில சமூக விரோதிகள் கிழித்துள்ளனர் இந்த செயல் மற்றொரு தரப்பிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அன்று இரவு வாழ்த்துகள் சாலையில் எழுதிய கல்லூரி மாணவர்கள் சிலர் மீதி பஞ்சாயத்து துணை தலைவர் மற்றும் ஜாதி சங்க தலைவர் தூண்டுதலின் பேரில் புகார் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர்.

இதன்விளைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் அவர்கள் உடனடி கைது செய்ய அழுத்தம் கொடுக்க சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ் அவர்கள் எதுவும் விசாரிக்காமல் நள்ளிரவில் தீவிரவாதிகளை கைது செய்வதை போல கைது செய்தார். கடைசியில் ஜாதி சங்க கொடியை கிழித்தவரே குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தை விசாரிக்காமல் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் உத்தரவிட  சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ்  நள்ளிரவில் தீவிரவாதிகளை கைது செய்தது அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.