முரளி அப்பாஸ் சரவெடி: தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனம்..! தன் வாழ்க்கை கணிக்க முடியாதவர்..!

தமிழிசை சவுந்தரராஜனின் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சனம் நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர் தமிழிசை சவுந்தராஜன் என முரளி அப்பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்து இருந்தார். இதற்கு, சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சவுந்தராஜன், இன்று கமல்ஹாசன் தனக்களிக்கப்பட்ட ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல கமல்ஹாசன்..! தமிழிசை செளந்தரராஜன் விமர்சனத்துக்கு முரளி அப்பாஸ் பதிலடி..!

கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும் என முரளி அப்பாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்து இருந்தார். இதற்கு, சென்னை மயிலாப்பூரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மத்திய அரசின் திட்டமான 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் என்ற நாயகனுக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காக உலக நாயகனின் பெயரையே திமுகவினர் மாற்றி விட்டார்கள். கமலஹாசன் முழுவதும் திமுகவாக மாறி விட்டார் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மநீம மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சவுந்தராஜன், இன்று கமல்ஹாசன் தனக்களிக்கப்பட்ட ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நின்று MP -யாகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார். நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan: நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை அளிக்க வேண்டும்..!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் வெகு விரைவில் சில மாற்றங்களை கொண்டு வரவிருக்கிறேன். இதற்கான முன்னோட்டாம்தான் செயற்குழு கூட்டம்” என தெரிவித்தார். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில், தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்.

`நம்மவர் நூலகம்’ அமைக்க உதவும் கட்சித் தலைவர், கமல் பண்பாட்டு மையம், வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.ஆர்.மதுசூதன் ஆகியோருக்கு பாராட்டுகள். கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டமைக்கு பாராட்டு. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை அளிக்க வேண்டும்.

பருவமழையின்போது பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவற்றுக்கு தண்டனை வழங்க விரைவு நீதிமன்றங்களை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Kamal Haasan: தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

கமலஹாசன்: திராவிட மாடலை கிண்டல் செய்யாதீர்கள்..! உங்களை நீங்களே கேலி செய்வதற்குச் சமம்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது,” பெட்ரோல் விலை உயர்வு காரணமாகத் தொழில் முழுவதும் பாதிப்படைந்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த GSTயால் கொங்கு மண்டலமே அழிந்துவிட்டது. GSTயை சொல்லி பா.ஜ.கவால் வாக்கு கேட்க முடியுமா?

இந்தியாவில் பெண்கள் ஜனத்தொகையில் 43% மகளிர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே பணிக்குச் செல்கிறார்கள். இப்போது கூறுங்கள் திராவிட மாடல் அரசு நமது தமிழ்நாட்டை உயர்த்தி உள்ளதா என்பதை. உலக நாடுகளில் இன்றைய நிலையில் இந்தியாவில் 35% குழந்தைகள் அரை பட்டினியாக இருக்கிறார்கள். 2027 இல் இதே குழந்தைகள் அரை வயிற்றுடன் வேலைக்குச் செல்ல தயாராகி விடுவார்கள்.

இந்த நாட்டில் 35% குழந்தைகள் அரை பட்டினி என்று கூறிக்கொண்டு வல்லரசு நாடுகள் சொல்லும் நிலையில் தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டியை வழங்கிய முதலமைச்சர் நமது முதலமைச்சர் தான். குறிப்பாக மதிய உணவுடன் சேர்த்து பிள்ளைகள் பசியுடன் கல்வி பயிலக் கூடாது என்கின்ற நோக்கில் காலை உணவையும் சேர்த்து வழங்கி வருவது தான் திராவிட மாடல அரசு.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, மகளிர்களுக்கான இலவச பேருந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என தமிழ்நாடு அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னொருமுறை திராவிட மாடலை கிண்டல் செய்யாதீர்கள் அது உங்களை நீங்களே கேலி செய்வதற்குச் சமம்” என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கமலஹாசன்: பா.ஜ.க கொண்டு வந்த GSTயை சொல்லி பா.ஜ.கவால் வாக்கு கேட்க முடியுமா