மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்ற சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ.ராஜா அவர்கள் இன்று காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றுள்ளத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tag: m.k. stalin
திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்…!
தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய புதிய கட்டிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி சென்றுள்ளார்.
இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகள் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் அதே நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.
அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்தார். பின்னர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நல உதவிகள் வழங்கல்
திராவிட கழகத்தை நிறுவிய பெரியாருடன் தொடக்கக் காலத்தில் பெரியாருடன் இணைந்து அண்ணாவும் திராவிடர் கழகத்திலேயே பயணித்து வந்தார். 1940-களின் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினர்.
அண்ணா தனிக்கட்சி தொடங்கினாலும் கூட பெரியார் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இதனால் திமுகவில் தலைவர் பதவி பெரியாருக்காக காலியாக விடப்படும் என்று அறிவித்துவிட்டு, கடைசி வரை பொதுச் செயலாளராகவே அண்ணா இருந்தார்.
இந்நிலையில் தி.மு.க.வின் தாய் கழகமான திராவிட இயக்கங்களின் தந்தையாகக் கருதப்படும் பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 கொண்டாடப்படுகிறது. அதேபோல அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாட்களை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு இன்று கொளத்தூர் – ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடிகளான 260 கழக உடன் பிறப்புகளின் உழைப்பை பாராட்டி பொற்கிழி, நல உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பித்தார்.
அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு கல்வி – விடுதி – கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும்
அரசு பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில்,பொறியியல் படிப்பிற்க்கான சேர்க்கை ஆணைகளை வழங்கி, அவர்களின் கல்வி – விடுதி – கலந்தாய்வுக் கட்டணங்களை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைக்க இடத்தினை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தளபதி அவர்கள் ஒப்புதலின்படி, கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் ரூ.750 கோடி மதிப்பில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை அமைக்கும் பணிக்கான இடத்தினை மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் தேர்வு செய்யும் ஆய்வினை மேற்க்கொண்டார்.
தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை இனி வரும் காலங்களில் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டுமென்கிற மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கினங்க இன்று காலை அண்ணா அறிவாலய வளாகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் DR.M.SUBRAMANIYAN.BA.LLB.அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏனைய மாண்புமிகு அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மகளிரணி சகோதரிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்ட வரலாற்று சிறப்புமிகு உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் வேளச்சேரி மேற்கு 178-வது வட்டக்கழக செயலாளர் சேவைமாமணி K.N.தாமோதரன் அவர்கள் கழக உடன்பிறப்புகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.