பெரியார், அம்பேத்கருக்கு நடுவே விஜய்..! வைரலாகும் தவெக மாநாட்டு திடல் புகைப்படம்..!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநாட்டு திடலில் காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு நடுவே விஜய்யின் கட்-அவுட்டும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

காமராஜர் தேசியக் கொடி இடத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய காங்கிரஸ் பிரமுகர்கள்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர்.

இந்நிலையில், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் காங்கிரஸின் பகுதி தலைவர் ஜெ.வாசுதேசன் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இது தொடர்பாகச் சிவ.ராஜசேகரன் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சத்தியமூர்த்தி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் நுழைவாயிலில் சுதந்திர கொடியை ஏற்றிய பிறகு தான் பொதுக்கூட்டங்களுக்கோ, போராட்டங்களுக்கோ செல்வார். நாடு சுதந்திரம் அடையும்போது அவர் உயிரோடு இல்லை. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் பிறக்கும்போது, இளைஞர் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட அந்த கொடிக் கம்பத்தில் அன்று நள்ளிரவில் 12 மணிக்குப் பெருந்தலைவர் காமராஜர் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் பிறக்கும்போது, நள்ளிரவு 12 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருப்பவர் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அவ்வாறு இன்று நான் கொடியேற்றி இருக்கிறேன். 8-வது முறையாக இங்கு நான் கொடியேற்றி இருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என சிவ.ராஜசேகரன் தெரிவித்தார்.

கடின உழைப்புக்கும், திறமைக்கும் மறுபெயராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் 117-வது பிறந்தநாள்

லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி அருகேயுள்ள முகல்சராய் என்ற சிறிய ரயில்வே நகரத்தில் 1904, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய லால்பகதூர் சாஸ்திரியின் தந்தை சரதா பிரசாத், லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது காலமானார். இருபது வயதில் கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் நிற்கதியாக நின்ற லால்பகதூர் சாஸ்திரியின் தாய் ராம்துல்லாரி தேவி அவரது தந்தை வீட்டிற்குச் சென்றார்.

வறுமையின் காரணமாக லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை ஆனாலும் அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள தாய்வழி மாமா வீட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கப்பட்டார். கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்று படித்தார்.

லால்பகதூர் சாஸ்திரி வளர வளர நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். அப்போது லால்பகதூர் சாஸ்திரியின் தனது 11 வயதில் சுதந்திர போராட்டத்திற்கான செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது. லால்பகதூர் சாஸ்திரி 16 வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். அப்பொழுது அவர் தாயார் மற்றும் அவரது குடும்பத்தார் அதை ஏற்கவில்லை. இருப்பினும், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார். அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது. மிர்சாபூர் நகரத்தைச் சேர்ந்த லலிதா தேவி என்ற 1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார்.

1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார். லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார். 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க லால் பஹதூர் சாஸ்திரி உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார்.

1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். ஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பனவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது.

ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடதை நிறப்புவதற்காக லால்பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆதரவுடன் இந்தியாவின் இரண்டாவது பிரதமர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார். தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இன்று லால்பகதூர் சாஸ்திரியின் 117-வது பிறந்தநாள் கொண்டாட படுகிறது.