பாஜக தேர்தல் அறிக்கை: பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியம்..!

டெல்​லி​யில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 வழங்கப்படும் என என பாஜக தேர்தல் வாக்​குறுதி அளித்​துள்ளது. டெல்லி சட்டப்​பேர​வை​ 70 இடங்களுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்​ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்​தலில் இண்டியா கூட்​ட​ணி​யில் அங்கமாக இருக்​கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தனித்​துப் போட்​டி​யிடு​வதாக அறிவித்து​விட்​டது. அதனால் டெல்லி தேர்​தலில் ஆம் ஆத்மி – காங்​கிரஸ் – பாஜக ஆகிய 3 கட்சிகளின் மும்​முனை போட்டி ஏற்பட்​டுள்​ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வர பாஜக முயல்கிறது. தலைநகரை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கடந்த இரண்டு தேர்தல்களில் ஆம் ஆத்மி இடம் ஆட்சியை பறிகொடுத்தது.

இந்நிலை​யில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இன்று வெளியிட்டார். “பெண்களின் செழிப்புக்கான திட்டம் மூலம் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும். பாஜக ஆட்சி அமைந்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். மேலும், LPG பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சிலிண்டருக்கு ரூ.500 மானியம் கிடைக்கும். ஹோலி மற்றும் தீபாவளிக்கு அவர்களுக்கு தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும்” என ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

மேலும் ஜேஜே கிளஸ்டர்களில் ரூ.5-க்கு சத்தான உணவு வழங்க அடல் கேன்டீன்கள் அமைக்கப்படும் என்றும், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ஓய்வூதியமும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியமும் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. “2020-ம் ஆண்டில், நாங்கள் 500 வாக்குறுதிகளை அளித்தோம், அவற்றில் 499 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்.

அதாவது, 99.99 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. 2019-ம் ஆண்டில், நாங்கள் 235 வாக்குறுதிகளை உறுதியளித்து 225 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். இது 95.5 சதவீதம். மக்கள் நலன், நல்லாட்சி, மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல், விவசாயிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக அரசு செயல்படும். எங்கள் வாக்குறுதிகள் வளர்ந்த டெல்லிக்கான அடித்தளமாகும். தற்போதுள்ள அனைத்து நலத்திட்டங்களும் தொடரும். அதேநேரத்தில், மக்கள் நலத் திட்டங்களில் நடைபெற்ற அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படும்” என ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: ஜே.பி. நட்டா “ஒரு கட்சி ஒரு தேசம்” என்று சொன்னதை நோக்கி நாடு நகர்கிறதா..!?

ஜே.பி. நட்டா சில ஆண்டுகளுக்கு முன்பு இனி ஒரே ஒரு கட்சி மட்டும்தான் இருக்கும் என்று சொன்ன அந்த திசையை நோக்கித்தான் அவர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது என மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சி படுதோல்வி கண்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கடந்த மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் எப்படி சூழ்நிலை மாறியது என்று தெரியவில்லை. இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.

இனி ஒரே ஒரு கட்சி மட்டும்தான் இருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி. நட்டா கூறியிருந்தார். அந்த திசையை நோக்கித்தான் அவர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஒரு கட்சி ஒரு தேசம். மக்களிடம் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.

மகாயுதி கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது வெற்றி சுனாமி அலை போன்று உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சுனாமி வருவதற்கு அவர்கள் என்ன செய்தனர்? 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின்போது ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை மகாராஷ்டிர மாநில மக்கள் கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக இருக்கிறது என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

J. P. Nadda: ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த மக்களுக்காக குரல் கொடுக்கு தலைவர்..!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா பரமக்குடியில் 3 கி.மீ. ரோடு ஷோ நடத்தி பிரச்சாரம் செய்தார்.

அப்போது, ரோடு ஷோ வில் பேசிய ஜகத் பிரகாஷ் நட்டா, ஓ.பன்னீர்செல்வம் மிகவும் திறமைவாய்ந்த தலைவர். தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பவர். அவருக்கு மக்கள் ஆதரவு நல்க வேண்டும். மிகச்சிறந்த தலைவரான ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

பன்னீர்செல்வத்தை டெல்லிக்கு அனுப்ப நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்பது தெரிகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 400 சீட்டுகளுக்கு மேல், பாஜக வெற்றி பெற ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்க முடியும். ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றம் கொடுக்கக் கூடிய ஆட்சியாக மோடி அரசு உள்ளது. ஏழைகளுக்கு வீடு, மருத்துவக் காப்பீடு உள்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ரேசன் கடைகளில் தனிநபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும் பருப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளார் என ஜகத் பிரகாஷ் நட்டாதெரிவித்தார்.

J. P. Nadda: இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில்..!

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற N.D.A.கூட்டணியின் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் அவர்களுக்கு ஆதரித்தது பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உரையாற்றினார். அப்போது, “இந்திய பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் இந்தியாவில் அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

அதன் அடிப்படையில் 90 சதவீத மொபைல் போன்கள் தற்பொழுது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியில் அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில் உலக அளவில் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 10 கோடி பெண்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 லட்சம் தமிழகத்திற்கும் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் இந்தியா முழுவதும் 11 கோடியே 40 லட்சம் இணைப்புகளும் தமிழகத்தில் 80 லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் இந்தியா முழுவதும் 4 கோடி வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளது இதில் தமிழகத்தில் 14 லட்சம் வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளன” என தொடர்ந்து பாஜக ஆட்சியில் செயல்படுத்திய நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.

மேலும், “தமிழ்நாட்டில் திமுக என்றால் வாரிசு அரசியல். மணி லாட்டரி கட்டப்பஞ்சாயத்து என்பது அர்த்தமாகும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது. இது அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். இதுபோன்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளன” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது” என கூறினார். இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது. எனவே இந்த ஊழலை ஒழிக்க பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என உரையாற்றினார்.