CMRL நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரம் கேரள முதலமைச்சர் மகளிடம் சென்னையில் விசாரணை..!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூருவில் எக்சாலாஜிக் என்ற பெயரில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த இரு வருடங்களுக்கு முன் எர்ணாகுளத்திலுள்ள CMRL தாது மணல் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் CMRL நிறுவனம் வீணா விஜயனின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

இத்தனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இந்த விசாரணையை கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடியை விசாரிக்கும் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் ஏற்றுக் கொண்டது. இந்த அமைப்பு CMRL நிறுவனத்திலும் மற்றும் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ள கேரள அரசின் தொழில் அபிவிருத்திக் கழகத்திலும் விசாரணை நடத்தியது. ஆனால் மோசடி குறித்து வழக்கு பதிவு செய்து 10 மாதங்கள் ஆகியும் வீணா விஜயனிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்நிலையில், வீணா விஜயனிடம் தீவிர மோசடி தடுப்பு அலுவலகம் விசாரணை நடத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து வீணா விஜயனிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் இந்த விசாரணை நடைபெற்றது. இதன்பின் வீணா விஜயனை அதிகாரிகள் விடுவித்தனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகளிடம் விசாரணை நடத்தியது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல்..! வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை..!.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் புறப்படும். இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்நிலையில், இந்த ரயிலில் நெல்லைக்கு பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க தகவலின் பேரில் விரைந்த தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ரூ .4 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இந்த 3 பேரில் ஒருவர் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான விடுதி மேலாளர் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் விருகம்பாக்கம் காவல்துறை சோதனை மேற்கொண்டனர்.

நயினார் நாகேந்திரன் உறவினரான விருகம்பாக்கம் முருகன் என்பவரின் வீட்டில் இரவு 11.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது. இது தவிர திருவல்லிக்கேணி, புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஹோட்டல்களிலும் காவல்துறை சோதனை நடத்தினர். மேலும் பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.