சுப.வீரபாண்டியன் எச்.ராஜா மனநலம் சரியாக இருக்கிறதா என்று மருத்துவரை பார்த்து கொள்வது நல்லது..!

எச்.ராஜா உடல்நலம், மனநலம் சரியாக இருக்கிறதா என்று மருத்துவரை பார்த்து கொள்வது நல்லது என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற உலக பிராமணர்கள் நலச்சங்கத்தின் 11 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எச்.ராஜா பேசுகையில், சாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பதற்கு புராணக் காலத்திற்கு செல்ல தேவையில்லை. கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது யாராவது அரிவாள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை என்றால், அப்போது நீங்கள் பிறக்கவில்லை. இன்று ஆவணக் கொலைக்கு காரணமே சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான். நீங்கள்தான் ஆணவக் கொலை செய்ய தூண்டி விடுகிறீர்கள்.அன்று நீங்கள் பிறக்காததால் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இன்று நீங்கள் இருப்பதால், அரிவாள் எடுக்கிறார்கள். இந்த தீயசக்திகளுக்கு எதிரான உண்மை நிலையை, நாம் நம் மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என எச்.ராஜாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எச்.ராஜாவின் பேச்சிற்கு திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடக்க காரணம் என்று எச்.ராஜா பேசி இருக்கிறார். காரைக்குடியில் நான் படித்த கல்லூரியில் படித்தவர். அப்போது நன்றாக இருந்தார். இப்போது அவர் உடல்நலம், மனநலம் சரியாக இருக்கிறதா என்று மருத்துவரை பார்த்து கொள்வது நல்லது. ஒரு நண்பராகவே சொல்கிறேன். இவர்கள் பிறந்த பிறகு தான் அரிவாள் எடுத்தார்கள் என்பதை எவ்வளவு அபத்தம் என்பதை உணர வேண்டும். நாங்கள் பிறந்த பின்தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன் மனுநீதி இல்லையா? மனுநீதியில் இருந்துதான் சாதிய ஏற்றத் தாழ்வுகள், வர்ண பாகுபாடுகள் வருகின்றன.

அதனடிப்படையில்தான் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு எச்.ராஜா போன்றவர்கள்தான் காரணம். நாங்கள் காரணமல்ல. நாங்கள் மக்கள் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று போராடுகிறோம். இந்த சமூகமே சாதிய சமூகமாக உள்ளது. பிரிவினையே இந்து சமூகத்தின் நீதியாக உள்ளது. பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள். எச்.ராஜாவின் பேச்சு கேலிக்கூத்தாக உள்ளது. போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பது கருத்துரிமை அல்ல. எச்.ராஜா பேசி இருப்பது அவதூறு. முடிந்தால் அவர் மீது வழக்கு போடுவது சரியாக இருக்கும். அவர் அநாகரீகமாக பேசியதில் ஆச்சரியமில்லை என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா பேச்சு தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு திருமாவளவன், சுப.வீரபாண்டியனே காரணம்..!

தமிழ்நாட்டில் நடக்கும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு திருமாவளவன் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோரே காரணம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசி இருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் நடைபெற்ற உலக பிராமணர்கள் நலச்சங்கத்தின் 11 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எச்.ராஜா பேசுகையில், சாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பதற்கு புராணக் காலத்திற்கு செல்ல தேவையில்லை. கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது யாராவது அரிவாள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை என்றால், அப்போது நீங்கள் பிறக்கவில்லை. இன்று ஆவணக் கொலைக்கு காரணமே சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான். நீங்கள்தான் ஆணவக் கொலை செய்ய தூண்டி விடுகிறீர்கள். அன்று நீங்கள் பிறக்காததால் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இன்று நீங்கள் இருப்பதால், அரிவாள் எடுக்கிறார்கள். இந்த தீயசக்திகளுக்கு எதிரான உண்மை நிலையை, நாம் நம் மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என எச்.ராஜா பேசினார்.

சு வெங்கடேசன் vs H. ராஜா சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்..!

ரூபாய் நோட்டில் 8 -வது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை.. என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யைச் சேர்ந்த மதுரை எம்பி சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்விக்கான நிதி தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழியை ஏற்றால் மட்டுமே நிதி கிடைக்கும் என்பதால் இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை இந்தி திணிப்பு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

மேலும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகிறது.ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் போராட்டத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுத்துள்ளன. பாளையங்கோட்டை, பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் மீது மட்டும் கறுப்பு பெயின்ட் பூசி அழித்து திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். மேலும், பல்வேறு தபால் நிலையங்களிலும் கருப்பு மை ஊற்றி அழித்தனர்.

இதனிடையே திமுகவிற்கு பதிலடியாக, H. ராஜா “500 ரூபாய் நோட்டில் இருக்கும் இந்தியை முதலில் அழியுங்கள்; பார்க்கலாம்!” என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த பள்ளிக்கு செல்லுங்கள். திமுகவில் மொத்தம் 48 CBSE பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த பள்ளிகளில் இந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!” என H. ராஜா ஆவேசமாக பேசி இருந்தார்.

இந்நிலையில், H. ராஜாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யைச் சேர்ந்த மதுரை எம்பி சு வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் , “500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார் H. ராஜா.. ரூபாய் நோட்டில் 8 -வது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை” என சு வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

H. ராஜா சாடல்: 24 மணிநேரம்.. குழந்தையை அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்..!

தமிழக அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும் பார்க்கலாம்” என எச் ராஜா சவால் விட்டுள்ளார். சமக்ர சிக்சா அபியான் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.2152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசியக் கல்வி கொள்கையினை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

ஆனால் தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. தேசிய கல்வி கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று குற்றம்சாட்டி தமிழக அரசு அதனை ஏற்காமல் உள்ளது. இதனால் சமக்ர சிக்சா அபியான் திட்ட நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பூதாகரமாகி உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும் என்றும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, நிதி ஒதுக்கமாட்டோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் கோயம்புத்தூரில் நேற்று இரவு பாஜக மூத்த தலைவர் H. ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு எதிராக பேசினால் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள் என்ற மூடநம்பிக்கை உள்ளது. அதனால் எல்லோரும் மத்திய அரசை எதிர்த்து பேசுகிறார்கள். விஜயின் குழந்தை எங்கு படிக்கிறது? இருமொழி கொள்கையிலேயே? சமச்சீர் கல்வியிலா? சொல்லுங்கள். இந்த அமைச்சர்கள், வார்டு கவுன்சிலர்கள் யாராவது தங்களின் குழந்தைகளை சமச்சீர் கல்வியில் சேர்த்து உள்ளார்களா?

திமுக தலைவர்களின் குழந்தைகள் எல்லாம் மும்மொழி, நான்கு மொழி கொள்கை படிக்கும். வெளிநாட்டில் படிக்கும். ஓரளவு மிடில் கிளாஸை விட வளர்ந்த குடும்பத்துக்கு குழந்தைகள் தனியார் பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் படிப்பதை தடுக்க முடியவில்லை. ஆனால் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஏழை, விவசாயி, தொழிலாளியின் குழந்தைகளை மும்மொழி கொள்கையை படிக்காதே என்று குரல்வளையை நெறிக்கிறார்கள். இது என்ன புத்திசாலி தனம்? இது விஜய்க்கு மட்டுமில்லை.

தமிழகத்தில் இருமொழி கொள்கையை தொடருவோம் என்று கூறும் அனைவரும் நாளை காலை உங்களின் குழந்தைகளை தற்போது படிக்கும் பள்ளியில் இருந்து அழைத்து வந்து கார்ப்பரேஷன் பள்ளியில் சேருங்கள். அனைத்து அரசியல் தலைவர்கள் தங்களின் குழந்தைகள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து டிசி வாங்கி அடுத்த 24 மணிநேரத்தில் அரசு பள்ளியில் சேர்க்கட்டும். அப்போது அவர்கள் யோக்கியமானவர்கள், நல்லவர்கள் என்று நானே ஏற்றுக்கொண்டு பகிரங்கமாக அறிவிக்கிறேன்” என H. ராஜா கடுமையாக சாடி உள்ளார்.

H. ராஜா: கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள்..! இசைவாணியை கைது செய்யவில்லை…!

கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லைஎன பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார். பாஜகவின் மாநிலப் பயிலரங்கம் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பயிலரங்கதிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் H. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,” சமூக வலைதளங்களில் ஹிந்து விரோத பதிவுகள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்க விசயமாகும்.

அதுவும் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் சென்று கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஐயப்பனை பற்றி கேலியும், கிண்டலுமாக இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் போன்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பலபேர் என்னிடம் ஐயப்பனை பற்றி பேசினால், நான் ஏசுவை பற்றி பேசுவேன் என்கிறார்கள். நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை போட்டு பிடித்தவர்கள் தானே இவர்கள், அப்ப ஏன் இந்த இசைவாணியை கைது செய்யவில்லை, காவல் துறையே ஹிந்து விரோதமாக இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது.

அரசாங்கம் இந்து விரோதம் என்பது நமக்கு தெரியும். மாநிலத்தின் துணை முதலமைச்சர் சனாதான ஹிந்து மதத்தை டெங்கு கொசு போல், மலேரியா கொசு போல் அழிக்க வேண்டும் என பேசி இருக்கிறார். நாளைக்கு மற்ற மதங்களை பற்றி பாட்டு போடுவது, டான்ஸ் ஆடும் சூழ்நிலை வந்தால், தமிழ்நாட்டில் மத மோதல்கள் தான் வரும். காவல்துறை உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என H. ராஜா தெரிவித்தார்.

H .ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!

சென்னை விமான நிலையத்தில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H .ராஜா அவர்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக 4 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 7-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் H .ராஜா, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் H .ராஜா அவர்கள் சென்னை விமான நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேட்டி அளித்ததாகவும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், H .ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சென்னை விமான நிலைய காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

H. ராஜா கேள்வி: செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!?

செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!? என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் H. ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு  பதிலளித்தார்.

அப்போது, “செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

H .ராஜா: அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் மனு போடவில்லை..!

அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார்.. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H. ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

H .ராஜா குற்றச்சாட்டு: தமிழக அரசில் ஒருதுறைகூட திறமையானதாக இல்லை..!

தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை என பாஜக மூத்த தலைவர் H .ராஜா குற்றச்சாட்டி உள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H .ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

H. ராஜா: பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர்..! தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார்..!

பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களின் கேள்விக்கு ஹெச்.ராஜா பதிலளித்தார்.

அப்போது, “ஆளுநர் தேவையில்லை என்று கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? அவர் அரசியலமைப்பை படிக்க வேண்டும். ஆளுநர் பதவி குறித்து சர்ச்சையாக பேசியது அறிவிலித்தனம். திமுகவை பின்தொடர்ந்து பேசினால்தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கிறார்.

திராவிட மாடல் என்பது தேசிய வெறுப்பு அரசியலின் ஆணி வேர். பிரதமரே திராவிடத்தைச் சேர்ந்தவர் தான். நாட்டின் சரித்திரம், தான் யார் என்று தெரியாமல் விஜய் பேசுகிறார். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும். இனத்தை அல்ல. இது புரியாமல் கால்டுவெல் கற்பித்ததை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். திராவிட சித்தாந்தத்தை பேசும் விஜய்யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.