பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு MLA அதிர்ச்சி..!

காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் கொண்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது.

மேலும் மகப்பேறு நல மருத்துவ பிரிவு 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் உள்ளது. இதில் முதல் தளத்தில் கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் பெண்கள் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து பிரிவு, 3-வது தளத்தில் கர்ப்பிணி பெண்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை பகுதி 4-வது தளத்தில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பகுதி, 5-வது தளத்தில் பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பராமரிப்பு பகுதி ஆகியவை உள்ளன.

இந்நிலையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாமல் பிரசவித்த பெண்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து எழிலரசன் எம்எல்ஏ காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சென்று திடீரென சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் பல பெண்கள் தரையில் படுத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பணியில் இருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்களிடம் கேட்டு உடனடியாக அவர்களுக்கு படுக்கை வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

11-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! மாணவன் போக்சோ சட்டத்தில் கைது..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அடுத்த கப்பலங்கரை பகுதியைச் சேர்ந்த 16 வயதான மாணவி அதே பகுதியில் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த பொள்ளாச்சி தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனுடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவன், மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவி வீட்டிற்குச் சென்று உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது, இதையடுத்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதில் அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அந்த மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்…!

தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய புதிய கட்டிடம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி சென்றுள்ளார்.

இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 7 ஊராட்சிகள் மற்றும் சிறப்பாக கொரோனா பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு விருது மற்றும் கேடயங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் அதே நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு சுகாதாரத் துறையின் பரிசு பெட்டகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பென்னாகரம் வட்டம் ஒகேனக்கலில் அமைந்துள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஒகேனக்கல் புறப்பட்டுச் சென்றார்.

அப்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென காரை நிறுத்தி மாணவிகளை சந்தித்தார். பின்னர் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், மாணவிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை கடத்தல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூர் கிராமத்தை சேர்ந்த மாலினி அருள்மணி தம்பதியினர் . மாலினி கர்ப்பமான நிலையில் பிரசவத்துக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாலினிக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நேற்று காலை மாலினி தனது குழந்தையை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு குளியல் அறைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து மாலினி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அருள்மணி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்தனர்.

அப்போது பச்சிளங்குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுபற்றி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்ட ரை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கோவிட் -19 நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியுடன் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நேற்று சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஒன்றும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் ஒன்றும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இதனை தொடர்ந்து தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் மருத்துவர்கள் மற்றும் திமுக மகளிரணியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார்.