பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றுள்ளார். அங்கு கிவ் தலைநகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான் என காங்கிரஸ் நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநேட் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சுப்ரியா ஸ்ரீநேட் தனது எக்ஸ் பக்கத்தில், ”பொய்மை உண்மையின் முன் தலைவணங்குகிறது. அகங்காரம் பணிவின் முன் தலைவணங்குகிறது.வெறுப்பு அன்பின் முன் தலைவணங்குகிறது.கோழைத்தனம் வீரத்தின் முன் தலைவணங்குகிறது. இந்த நாடு காந்தியின் நாடு. இங்கு காந்தியிடம் கோட்சே எப்போதும் தோற்றுத்தான் போவான்.” என தெரிவித்துள்ளார்.
தேச தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மீதான வெறுப்பை பாஜக மற்றும் இந்துத்வா கும்பல்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறது. காந்தியை சுட்டுக் கொலை செய்த கோட்சேவை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொண்டாடி வருகிறது. இவருக்கு சிலையும் வைத்து இருக்கிறார்கள். இப்படி இருக்க இந்தியாவில் காத்தியை விமர்சித்து விட்டு வெளிநாடுகளில் அவரை புகழ்வதை பிரதமர் மோடியும் அவரது கூட்டமும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என சுப்ரியா ஸ்ரீநேட் குறிப்பிடத்தக்கது.