நிலமற்ற விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய அரசு நிலம் 99 ஆண்டுகள் குத்தகை விட ஏற்பாடு செய்யப்படும் ..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா ஆகியோர் அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேசிய பவன் கேரா, விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு 100% நீர் பாசனம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் வேலையில்லா இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும். தேர்தலில் வென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால் 1 லட்சம் அரசுப் பணிகளை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை 30 நாள்களில் வெளியிடப்படும். அரசுப் பணிகள், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்படும்.

இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கவும் முடிவெடுத்துள்ளோம்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். ஆட்சி அமைத்த 100 நாள்களில் சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டு அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ அமல்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்ள 20 மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என பவன் கேரா தெரிவித்தார்.

விவசாயிகள் பட்டாசு வெடித்தும் , இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி…!

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாகவும், இம்மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மோடி பிறந்தநாள் அறிவை கடவுள் வழங்கட்டும். உங்கள் தோல்விகளுக்காக நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது சுப்ரியா ஸ்ரீநாத் என தெரிவித்தார்

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி உலகம் முழுவதும் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில்  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் நிருபர்கlகளிடம் பேசுகையில், பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நலனுக்காக வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்தநாட்கள், ஏதேனும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.

நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினமாகவும், இந்திரா காந்தி பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அதுபோல், மோடி பிறந்தநாள், வேலையில்லா திண்டாட்ட தினமாகவும், விவசாய எதிர்ப்பு தினமாகவும், விலைவாசி உயர்வு தினமாகவும், பொருளாதார மந்தநிலை தினமாகவும், நெருக்கமான முதலாளித்துவ நண்பர்கள் தினமாகவும், சி.பி.ஐ. சோதனை தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் பல்வேறு துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். அதனால் நாட்டை எங்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவை கடவுள் வழங்கட்டும். உங்கள் தோல்விகளுக்காக நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மோடியின் வானளாவிய உறுதிமொழிகளையும் மீறி, வேலையில்லாதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது? அதே சமயத்தில், 61 லட்சம் அரசு வேலைகள் ஏன் காலியாக இருக்கிறது? விவசாயிகள், தீர்வுக்கான அறிகுறியே தெரியாமல் 9 மாதங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், கியாஸ், பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வால் மக்கள் நிலை திண்டாட்டமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை பொருளாதாரத்தை முடக்கி விட்டன. சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இருப்பினும், உங்கள் நண்பர்களுக்காக இந்தியாவை விற்பனைக்கு வைத்திருக்கிறீர்கள். கொரோனா தீவிரமாக இருந்தபோது, மோடி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார் என தெரிவித்தார்.