எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் தான்..!

எல்லா கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கு கொள்கையே இல்லாத கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். விஜய் மாநாடு குறித்த கேள்விக்கு தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். தவெக சார்பில் மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் நடத்தியிருக்கிறார். இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அதிமுகவை விஜய் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை, கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்று பேசியிருக்கிறார் என்ற கேள்விக்கு, வருங்காலத்தில் அதிமுக விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முதல் மாநில மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை.

பாஜக, திமுகவை விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “விஜய் ஒரு கட்சியின் தலைவராகிவிட்டார். அந்தக் கட்சிக்கு என்ன கருத்து இருக்கிறதோ, அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. கொள்கை இல்லாத கட்சிகள்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஒத்த கொள்கையுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக முதல்வரும் கூறுகிறார், அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் ஒரே கொள்கைகளைக் கொண்ட கட்சியா? அப்படியென்றால், அவர்கள் ஒரே கட்சியாக இருக்கலாமே. தனித்தனி கட்சிகள் தேவையில்லையே.

அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமைக்கப்படும். அதிமுகவைப் பொறுத்தவரை எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. மறுபடியும் கூறுகிறேன். கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். கொள்கை என்பது நிலையானது,” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

மு.க.ஸ்டாலின்: டிவியில வரனும்னு பேசுவாரு..! எடப்பாடி பழனிசாமிக்கு வேற வேலையே இல்லை!

மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்த நிலையில் அவருக்கு வேறு வேலையே கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த பேருந்துகள் தான். பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்பு தான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதா மாதம் கடனை வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தக் கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனு வாங்கினார். ஆனால் தற்போது அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை. அத்தனையும் ஏமாற்று வேளை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். ” என விமர்சித்திருந்தார். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலையே கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,”மதுரையில் தொடர்ந்து கனமழை பெய்யவில்லை. நேற்றுதான் மழை பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது. மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். எட்டு இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது.

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. வானிலை மையம் வேறு ஏதாவது மாவட்டத்தில் மழை பெய்யும் என்று சொல்லியிருக்கிறார்களா? தென் மாவட்டங்களில் தான் மழை பெய்து கொண்டிருக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம். மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டி.வி-யில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை என மு.க. ஸ்டாலின் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி சூளுரை: “2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி..!”

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “அதிமுக வலுவான கூட்டணி இல்லாமலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தலை விட, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 1 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றது. இதனால், அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது குறித்து முதலமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு தான் ஒப்பிட வேண்டும். ஆனால் நாமக்கல்லில் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டதாகவும், நான் கனவு காண்பதாகவும் பேசுகிறார்.

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக தோல்வி அடைந்தது. 2019-ஆம் ஆண்டை விட 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டை விட, 2024 நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 1 சதவீதம் வாக்கு உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணியை நம்பித்தான் கட்சி நடத்துகிறார், ஆட்சி செய்கிறார். திமுக செய்த சாதனைகளை நம்பி தேர்தலில் நிற்பதில்லை. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிவிட்டு, ‘கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும் ஆனால் பிளவு இருக்காது’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு கூட்டணியில் விரிசல் என்று தான் அர்த்தம்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தை மட்டுமே வென்ற அதிமுக 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்றது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலை ஒப்பிட்டால் திமுக குறைவான இடத்தில் தான் வென்றுள்ளது. ஊழல் செய்வதில் தான் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நான் ஜோசியராக மாறிவிட்டேனா எனக் கேட்கிறார். நான் கூறிய ஜோதிடம் பலிக்கும், திமுக தோற்கும்.

2026 தேர்தலில் வென்று அதிமுக நிச்சயம் ஆட்சியமைக்கும். திமுக கம்பெனிக்கு ஸ்டாலின் தான் சேர்மன். குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குநர்கள். அதனால் தான் ஸ்டாலின் முதலமைச்சராகவும், உதயநிதி துணை முதலமைச்சராகவும், கனிமொழி எம்பி-யாகவும் இருக்கின்றனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும். உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார். எனக்கு ஆளுமை இருந்ததால் தான் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சியை மேற்கொண்டும் நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொண்டு வந்த எந்தவொரு திட்டத்தாலும் தமிழ்நாடு முதலிடம் பெறவில்லை.

அதிமுக ஆட்சியில் பல்வேறு தேசிய விருதுகளை பெற்றோம். திறன் மிக்க அரசாக அதிமுக அரசு விளங்கிய நிலையில், அதிமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார். நாம் பெற்ற தேசிய விருதுகளே அதிமுகவின் சிறப்பான ஆட்சிக்கு சான்று. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஊர் ஊராகச் சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுவை வாங்கினார்.

அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர். சேலத்தில் ஒருவரை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். அவரோ தமிழக அமைச்சர் என்பதை உணராமல், சேலத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகிறார்.

இத்தனை நாட்கள் கும்பகர்ணன் போல தூங்கிவிட்டு, தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதாக நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்திவிட்டார்கள். ஆனால், திட்டங்கள் தான் வரவில்லை. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் நிச்சயம் பலமான கூட்டணி அமையும்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் பழுதடைந்த பேருந்துகள் தான். பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்பு தான். மக்கள் நலத்திட்டம் இல்லை. மாதா மாதம் கடனை வாங்கித்தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். இந்தக் கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகிறார்..!

அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த நடிகை கவுதமி கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் கட்சியில் சேர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நடிகை கவுதமி அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த தடா து.பெரியசாமி MGR மன்ற துணைச் செயலாளராகவும், சென்னையை சேர்ந்த ஃபாத்திமா அலி, கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாய பிரிவு செயலாளராக இருந்த பி.சன்னாசி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவர், கட்சியின் மாநில விவசாயப் பிரிவு துணை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி: காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை..!

தமிழகத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி தெரிவித்தார். புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் , 2019-20-ல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையை மாற்றத்தான், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றினோம்.

புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதாலேயே இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், இந்த திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

பொதுமக்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, காவல் துறையினருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அப்போது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். எங்கள் ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்து எதுவும் வெளிப்படைத் தன்மையாக இல்லை. அதனால்தான், அனைத்து எதிர்க்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, அதை சந்திப்பதற்கு அதிமுக தயாராக உள்ளது என பழனிசாமி பதிலளித்தார்.

39 வயது அண்ணாமலையை விடுங்கள்…! 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும்..!

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி குறித்த அவரது பேச்சுக்கு அதிமுகவினர் ஆற்றிவரும் எதிர்வினை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம், நூறு சதவீதம் என்னைப் பொறுத்தவரை சரி. அதிலிருந்து நான் ஒரு புள்ளி அளவுகூட பின்வாங்க மாட்டேன். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தினந்தோறும் என்னை திட்டலாம். என்னை தற்குறி என்று கூறலாம். படிப்பு குறித்து பேசி கொச்சைப்படுத்தலாம். நான் செய்யக் கூடிய வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆட்டை வெட்டலாம். இதெல்லாம் அவர்கள் செய்யலாம்.

நான் அப்படியே கையைக் கட்டிக்கொண்டு, என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா, உங்களுக்கு 40 வருட அனுபவம் இருக்கிறது. எனக்கு 3 வருட அனுபவம்தான் இருக்கிறது, என்று சொல்வதற்காக நான் வரவில்லை. கை, காலைப் பிடித்து, வேலை செய்யாமல் உழைக்காமல் நான் வந்ததாக கூறுகின்றனர். விடிய விடிய படித்தது எனக்கு தெரியும். விடிய விடிய பால் கறந்தது எனக்கு தெரியும். விடிய விடிய எங்க அப்பாவுடன் மண்வெட்டி பிடித்த கை. இருபது வருடங்கள் ஆனாலும், இன்னும் காப்புக் காய்ச்சிருக்கிறது பாருங்கள். இதெல்லாம் எனக்குத் தெரியும்.

மேலும் ஜெயக்குமார் அரசியல் அனுபவம் தங்களுக்கு இருப்பதாக கூறுகிறாரா? 39 வயது அண்ணாமலையை விடுங்கள். 70 வயதுடைய எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா என்று ஜெயக்குமார் விளக்கம் கொடுக்கட்டும். கையை, காலைப் பிடித்து இந்தப் பதவிக்கு வந்ததாக கூறுகின்றனர். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக எப்படி நடந்து கொண்டிருக்கிறேன்.

கர்நாடகாவில் பாஜக அரசாக இருந்தாலும் உண்ணாவிரதம் நடக்கிறது. மத்தியப் பிரதேச அரசின் முதலமைச்சர் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தாலும், வரவேற்க நான் செல்வது இல்லை. ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தமிழகத்தை முதன்படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். எதற்காக? தமிழக மக்கள் அந்த அரசியலை விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர். காங்கிரஸ் போன்று பாஜக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர். எனவே, அதிமுகவினர் குய்யோ, முய்யோ என்று கத்துவதை விட்டுவிட வேண்டும்.

70 வயதுக்கு மேல் உள்ள தலைவர்கள் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால், இளைஞர் என்று நினைத்துக் கொள்கின்றனர். இன்றைக்கு இருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர்களும் தலைக்கு ‘டை’ அடித்துவிட்டால் தங்களை இளைஞராக நினைத்துக் கொள்கின்றனர். இளைஞர் என்பது ‘டை’ அடிப்பதில் இல்லை, பேச்சு, செயல், ஆற்றலில் இருக்க வேண்டும். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன், என்னைப் பற்றி பேசினால், நானும் திரும்பவும் பேசுவேன்.

53 வயது ராகுல் காந்தி இளைஞர் என்று சொல்லும் அளவுக்கு மோசமாக போய்விட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இளைஞரணி தலைவராக எத்தனை ஆண்டு காலம் இருந்தார்? உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி தலைவர் அவருக்கு வயது 50. எங்களுடைய கட்சியில் 35 வயதுக்கு மேல் ஒருநாள் இருந்தாலும் இளைஞரணி தலைவராக இருக்க விடமாட்டேன். அதை மூன்று வருடமாக கடைபிடிக்கின்றோம். தரம் தாழ்ந்து யாரையும் விமர்சிக்கவில்லை. நான் கையை, காலைப் பிடித்து வந்ததாக அதிமுகவினர் கூறினர். அதற்கு பதிலளிக்க வேண்டியது என் கடமை, உரிமை. என்னுடைய நாற்காலிக்கு அந்த மரியாதை இருக்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் பதவிக்கான இருக்கைக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும். அதற்காக நான் பதில் சொல்லியிருக்கிறேன்,” எனஅண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு மைக் வியாதி…! அவரின் ஒரே முதலீடு வாயும் நாக்கும் தான் ..! எடப்பாடி பழனிசாமி சரவெடி..!

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் அரசியல் களத்தில் அது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த விழாவை மையமாக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பதில் அளித்திருந்தனர். இந்நிலையில் அண்ணாமலையை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் வகையில் மீண்டும் அவரை கடுமையாக பழனிசாமி விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது. அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம் தான் இருந்தது.

மாநில அரசின் செயலாளர் பெயர் தான் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு நடத்தியதாக, முதலமைச்சர் கூறுகிறார். திமுக அரசை குற்றம்சாட்டினால், பாஜக மாநில தலைவர் என்னை குறைசொல்கிறார். மத்திய தலைவர்கள் வெளியிட்டால் தான் எம்.ஜி.ஆருக்கு புகழ் கிடைக்கும் என அண்ணாமலை கூறுகிறார். அவரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது.

அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. அண்ணாமலை பிறப்பதற்கு முன்னாகவே எம்.ஜி.ஆர் தமிழ்நாடு முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை பெற்றவர் என்று பெருமையாக சொல்லப்படுபவர். அப்போது உங்கள் தலைவர்கள் எந்தப் பதவியிலும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் 10 ஆண்டுகளில் பாஜக ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, கடன் சுமை தான் அதிகரித்துள்ளது. மத்தியில் ரூ.55 லட்சம் கோடியாக இருந்த கடன், 10 ஆண்டுகளில் 165 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. பொய்களை மட்டுமே பேசுபவர் தான், தமிழக பாஜக தலைவராக உள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஊழல் இருந்ததாகவும் அண்ணாமலை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ஏன் அது எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்ட போது தெரியவில்லையா. அண்ணாமலைக்கு என்னை விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வேலை. அவர் வேறு என்ன செய்திருக்கிறார். மைக்கை கண்டால் அவருக்கு வியாதி. உடனே பேசத் தொடங்கிவிடுவார். எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைக்காமல் பதவிக்கு வந்தார்.

அந்தக் கட்சியில் உழைத்த எத்தனையோ தலைவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. இவர் வேறு ஏதோ வழியில் பதவி பெற்றுள்ளார். அதை வைத்து இன்று தலை, கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். நான் கிளைச் செயலாளர் பதவியில் இருந்து 52 ஆண்டு காலம் உழைத்துதான் முதலமைச்சர், பொதுச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளேன். மக்களை பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவரின் ஒரே முதலீடு வாயும் நாக்கும் தான். தன்னை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்” என பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடி பாடலில் அண்ணா, எம்.ஜி.ஆர் குறித்து குறிப்பிட்டிருப்பதை செய்தியாளர்கள் கேள்விக்கு, “ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர்கள் முன் உதாரணமாக உள்ளனர். அந்த வகையில் விஜய் கட்சியின் கொடி பாடலில் எங்கள் தலைவர்கள் இடம் பெற்றிருப்பது அவர்களுக்கு கிடைத்த பெருமை. இந்தக் கட்சியை யாராலும் அழிக்க முடியவில்லை. அதிமுக தலைவர்கள் குறித்து பேசினால் தான் அரசியல் செய்ய முடியும் என்று நினைத்திருக்கலாம் என பழனிசாமி தெரிவித்தார்.

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்கவில்லை ..!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அவை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்துத் தரும் தேர்தல் வியூகப்படி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றிபெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்திடவும் மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றத் தவறியதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காதது, இலவச வேட்டி சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்கு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை. வேதனை ஆட்சியே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை… வேதனை ஆட்சியே..!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வகுத்துத் தரும் தேர்தல் வியூகப்படி வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டப்பேரவை பொது தேர்தலிலும் கட்சி மகத்தான வெற்றிபெறும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்திடவும் மாதாந்திர மின் கட்டண முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றத் தவறியதாகவும், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த பல திட்டங்களை முடக்கியது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காதது, இலவச வேட்டி சேலை மற்றும் இலவச பள்ளி சீருடை வழங்குவதில் மெத்தனப்போக்கு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை ஆட்சி இல்லை. வேதனை ஆட்சியே எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும், போதுமான நிதி ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், மருத்துவ காப்பீடு பிரீமியத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.