திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரைவில் விரிசல்..!? அமைதியாக ஆப் செய்த காங்கிரஸ் தலைவர்கள்..!

இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது மாநிலங்களின் உரிமைகளில் தேவையில்லாமல் தலையிட்டு மாநில கட்சிகளின் வெறுப்பை சம்பாதித்தது மட்டுமல்லாமல் தனது தவறான அரசியல் கொள்கையால் கொஞ்சம், கொஞ்சமாக பல மாநிலங்களில் தனது செல்வாக்கை இழந்தது. மேலும் மாநிலங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னை மட்டுமே வளர்த்து கொண்டனர்.

மத்தில் ஆட்சியமைப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மாநில கட்சிகளுடன் மாறிமாறி கூட்டணி அமைத்து தனது சொந்த செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த விளைவு தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாக்குச் சாவடிகளில் அமரும் பூத் ஏஜென்ட் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதன்விளைவு கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் இந்திய தேசிய காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

ஆனால் தோல்விக்கான காரணங்களை இந்திய தேசிய காங்கிரஸ் பரிசீலனை செய்து மறு கட்டமைப்பு செய்ததா என்றால் அது கேள்வி குறியாகவே உள்ளது. தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் சொந்த செல்வாக்கில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும், அந்த கூட்டணி கட்சிகளுடன் மாநில காங்கிரஸ் கட்சி அவ்வப்போது குடைச்சல் கொடுத்துக்கொண்டே உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே திமுக மீது தமிழக காங்கிரஸூக்கு லேசான கோபமும், வருத்தமும், அதிருப்தியும், தர்மசங்கடமும், நெருக்கடியும், இருக்கத்தான் செய்கிறது. பிரதமர் மோடி சென்னை விழாவுக்கு வந்தபோது கூட, மாநில தலைவர் அழகிரி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.

மேலும் “அண்ணாமலை சொல்லுகிற புகார்கள் குறித்து, திராவிட முன்னேற்றக்கழக தம்பிகள் கவனமாக இருக்க வேண்டும்., கவனமாக கையாள வேண்டும்., காரணம், நம்மை ஊழல் என்று சொல்லிவிட்டு, அந்த ஊழல் என்ற பிரச்சாரத்திலே பின்பக்கமாக கதவை திறந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள்” என்று மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திமுகவினரை எச்சரித்து வருகிறார்.. ஆனாலும், “திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவோம்” என்று அழகிரி சொல்லி வருவது, திமுகவினரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த காங்கிரசின் சிந்தனையாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து, அதேபோல, சென்னை மாமல்லபுரத்தில் தனியார் ரிசார்ட்டில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியின் தலைமையில் 2 நாள் நடந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ம்.பி. ஜெயக்குமார் தலைமையில் அரசியல் அமர்வு, காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் தலைமையில் பொருளாதார அமர்வு, செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் விவசாய நலன் அமர்வு, விஜயதாரணி தலைமையில் மகளிர் சமூகநல அமர்வு ,ஆகிய 4 அமர்வுகள் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு அமர்விலும் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இதில் பொருளாதார அமர்விலும், அரசியல் அமர்விலும் தான் காரசார விவாதங்களில் “உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலைகளை செய்து காங்கிரஸ் வேட்பாளர்களை திமுக தோற்கடித்தது. இது கூட்டணிக்கு செய்த துரோகம்” என குற்றம்சாட்டினார்கள். இதுமட்டுமின்றி “திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தேர்தலில் சீட் பெற்றதை தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது. ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்னு ஸ்டாலின் சொன்னார்.

ஆனா, எம்பி தேர்தலில் காங்கிரசுக்கு குறைவான சீட்டுகளை ஒதுக்கினார். நமது தலைவர் ராஜீவ் காந்தியை இழந்திருக்கிறோம். அதற்கு காரணமானவர்களை கட்டிப்பிடித்து ஆதரிக்கிறார். நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. பாஜகவை வெளியில் தான் எதிர்ப்பது போல திமுக காட்டிக்கிகொள்கிறது. ஆனால் உள்ளுக்குள் அவர்களுக்கும் ஒரு உடன்பாடு இருக்கிறது” என்றெல்லாம் ஆவேசமாக மாவட்ட தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்.

இரண்டு நாள் நடந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிரான கருத்துக்களே எதிரொலித்ததால் , அது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். திமுக கூட்டணியில் இருப்பதால் எப்படி நிறைவேற்றுவது என மூத்த தலைவர்கள் தடுமாறியுள்ளனர்.. எனவே குழம்பி போன அவர்கள் வேறு வழியின்றி, ப.சிதம்பரத்திடம் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.

அனைத்தையும் கேட்டறிந்த சிதம்பரம், நீண்ட கால உறவுகளுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டது. குறுகிய கால நோக்கத்திற்காக அல்ல. திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என தடுத்தார். ஒரு வழியாக காங்கிரஸ் கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக பேசியவைகளை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளனராம் என அமைதியாக ஆப் செய்த காங்கிரஸ் தலைவர்கள்.

மோடி பிறந்தநாள் அறிவை கடவுள் வழங்கட்டும். உங்கள் தோல்விகளுக்காக நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது சுப்ரியா ஸ்ரீநாத் என தெரிவித்தார்

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி உலகம் முழுவதும் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில்  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் நிருபர்கlகளிடம் பேசுகையில், பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நலனுக்காக வேண்டுகிறேன். முன்னாள் பிரதமர்களின் பிறந்தநாட்கள், ஏதேனும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது.

நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினமாகவும், இந்திரா காந்தி பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. அதுபோல், மோடி பிறந்தநாள், வேலையில்லா திண்டாட்ட தினமாகவும், விவசாய எதிர்ப்பு தினமாகவும், விலைவாசி உயர்வு தினமாகவும், பொருளாதார மந்தநிலை தினமாகவும், நெருக்கமான முதலாளித்துவ நண்பர்கள் தினமாகவும், சி.பி.ஐ. சோதனை தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக நீங்கள் பல்வேறு துறைகளிலும் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். அதனால் நாட்டை எங்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவை கடவுள் வழங்கட்டும். உங்கள் தோல்விகளுக்காக நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மோடியின் வானளாவிய உறுதிமொழிகளையும் மீறி, வேலையில்லாதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்ன ஆனது? அதே சமயத்தில், 61 லட்சம் அரசு வேலைகள் ஏன் காலியாக இருக்கிறது? விவசாயிகள், தீர்வுக்கான அறிகுறியே தெரியாமல் 9 மாதங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், கியாஸ், பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வால் மக்கள் நிலை திண்டாட்டமாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவை பொருளாதாரத்தை முடக்கி விட்டன. சிறு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. இருப்பினும், உங்கள் நண்பர்களுக்காக இந்தியாவை விற்பனைக்கு வைத்திருக்கிறீர்கள். கொரோனா தீவிரமாக இருந்தபோது, மோடி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருந்தார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார் என தெரிவித்தார்.