அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் கொண்டு செல்லப்படும் குழந்தை ராமர் சிலை..!

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, அதற்கான பூஜைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிராண பிரதிஷ்டை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிரபேந்திர மிஸ்ரா, “ஜனவரி 22-ம் தேதி நண்பகல் 12.30 மணிதான், பிராண பிரதிஷ்டை செய்வதற்கான முகூர்த்தம். இதற்கான வழிபாடுகள், சடங்குகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

குழந்தை ராமர் விக்ரகம் நாளை காலை கருவறைக்குள் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அப்போது, சிலைக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்படும். மற்ற சடங்குகளும் மேற்கொள்ளப்படும். ராமர் சிலைக்கு மட்டுமல்லாது, கோயிலில் உள்ள வேறு தெய்வச் சிலைகளுக்கும் இந்தச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறுதியாக, புனிதமான நேரம் வரக்கூடிய, வரும் 22-ம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்படும்” என தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா சாஸ்திரங்களுக்கு எதிராக, புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது..!

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடக்கிறது. இந்த கும்பாபிஷேகவிழாவில் கலந்து கொள்ளப்போவது இல்லை என்று உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்ஸே்வரானந்த் சரஸ்வதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவிமுக்ஸே்வரானந்த் சரஸ்வதி பேசுகையில், நானும், கோவர்தன் மடம்,சிருங்கேரி சாரதா பீடம், துவரகா சாரதா பீடத்தை சேர்ந்த நான்கு சங்கராச்சாரியார்களும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம். ராமர் கோயில் திறப்பு விழா சாஸ்திர விதிகளின் படி நடக்க வேண்டும் என்பதே சங்கராச்சாரியார்களின் விருப்பம். ஆனால் அயோத்தியில் சாஸ்திர விதிக்கு எதிராக நடக்கிறார்கள். கோயில் கட்டுமானம் இன்னும் முடியவில்லை.

 

ஆனால் ராமர் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்யப்போகிறார்கள். அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவசர, அவசரமாக ராமர் கோயிலை 22-ம் தேதி திறக்க வேண்டிய அவசியம் என்ன? நம்மிடம் அவகாசம் இருக்கிறது. ராமர் சிலையை நன்றாக செய்து பிரதிஷ்டை செய்யலாம். பணிகள் முடியாத கோயிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்கள். இதனை எப்படி நாங்கள் ஏற்போம்?

இதுசரியில்லை என்று நாங்கள் சொல்லியே ஆக வேண்டும். இதை சொன்னால் எங்களை எதிரி என்கிறார்கள். மோடிக்கு எதிரானது என்கிறார்கள். இதில் மோடி எதிர்ப்பு எங்கிருந்து வந்தது?. நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் தர்ம சாஸ்திரத்துக்கு எதிரானவர்களாக இருக்கக்கூடாது. தர்ம சாஸ்திரத்தின்படியே நாங்களும் நடப்போம். மக்களையும் நடக்கச்சொல்வோம். ஏனென்றால் தர்ம சாஸ்திரத்தில் புண்ணியம், பாவம் இருக்கிறது. ராமரை யார் நமக்கு சொன்னது? தர்ம சாஸ்திரங்கள் தான் சொல்லிக்கொடுத்தன. எனவே முழுமையடையாத கோவிலை கும்பாபிஷேகம் செய்வது அறியாமையின் செயல். இந்த நிகழ்வு அரசியலாக்கப்படுகிறது.

ஏனென்றால், இந்த விழா சாஸ்திரங்களுக்கு எதிராக, புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக நடத்தப்படுகிறது. எனவே அயோத்தி விழாவில் பங்கேற்க விரும்பாத நான்கு சங்கராச்சாரியார்களின் முடிவை மோடிக்கு எதிரானது என்று கருதக்கூடாது. நாங்கள் சாஸ்திரங்களுக்கு எதிரானவர்களாக இருக்க விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அயோத்தி செல்லாததற்கு என்ன காரணம்? வெறுப்பு காரணமாக அல்ல. சாஸ்திர விதியை பின்பற்றுவதும், அவை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதும் சங்கராச்சாரியார்களின் கடமையாகும். ஆனால் அயோத்தியில் சாஸ்திர விதி புறக்கணிக்கப்படுகிறது. கோவில் முழுமையடையாத நிலையில் கும்பாபிஷேகம் நடப்பது மிகப்பெரிய பிரச்னை என தெரிவித்தார்.

ராம ஜென்மபூமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா..! இது பாஜகவின் நிகழ்ச்சி..! இது பாஜகவின் பேரணி…!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

இந்தவழக்கில் “1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சாட்டப்பட்ட முதல் 10 பேரில் பலர் சிவ சேனாவைச் சேர்ந்தவர்கள். பாபர் மசூதியை இடித்ததற்காக சிவ சேனாவைச் சேர்ந்த 109 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது” என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் ராம ஜென்மபூமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழில், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், “…இதெல்லாம் அரசியல், பாஜகவின் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள விரும்புகிறார்கள்? இது தேசிய நிகழ்வு அல்ல. . இது பாஜகவின் நிகழ்ச்சி, இது பாஜகவின் பேரணி. ‘உஸ்மே பவித்ரதா கஹான் ஹை?’… பாஜகவின் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் (அயோத்தி) செல்வோம்.” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம்… மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை..!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வந்துள்ளதா, அதில் பங்கேற்பீர்களா என உத்தவ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அயோத்தி செல்வதற்கு அழைப்பு தேவையில்லை.

குழந்தை ராமர் அனைவருக்குமானவர். அவர் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. ராம பக்தி என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. எப்போதெல்லாம் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் செல்கிறேன். மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்தபோதும் நான் அயோத்திக்கு சென்றிருக்கிறேன். அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்காக சிவ சேனா மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.

ராமர் கோயில் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ஒரு இடைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையே எனது தந்தை பால் தாக்கரே இழந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம். மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோவிலை அலங்கரிக்கும் வகையில் ராமர் சிலைகளை வடித்த முஸ்லிம்கள்!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டு 2.7 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் தான் திறப்பு விழாவையொட்டி களிமண்ணில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை வடிக்கும் சிற்பிகளான மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகியோர் அயோத்தி கோவில் வளாகத்தில் நிறுவப்பட உள்ள ராமர் சிலைகளை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.