மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி: பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்..!

மத்திய பிரதேசத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார்.

இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதையடுத்து, தனது சர்ச்சை பேச்சுக்கு பா.ஜ.க. மந்திரி குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரினார். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

குன்வார் விஜய் ஷா: பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி கர்னல் சோபியா குரேஷி..!

பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்தது இந்திய ராணுவம். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. நேற்று இரவு ஜம்மு – காஷ்மீர் விமான நிலையம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், பதான்கோட், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இவற்றை இந்தியா விமானப்படை நடுவானில் சுட்டு வீழ்த்தியது. 4 பாகிஸ்தான் விமானங்கள், 8 ஏவுகணைகள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல் படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசுகையில், “பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்” என்று பேசினார். இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

Himanshi Narwal: முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நிறுத்துங்கள்

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் அதிகாரியாக இருந்த வினய் நர்வாலும், ஹிமான்ஷி நர்வாலும் ஏப்ரல் 16 அன்று திருமணம் நடைபெற்றது.

நர்வாலும் ஹிமான்ஷியும் தங்கள் தேனிலவை ஐரோப்பாவில் கொண்டாட திட்டமிட்டு இருந்த நிலையில் விசா பிரச்சினைகள் காரணமாக அது பின்னர் கைவிடப்பட்டது. திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு, புதுமணத் தம்பதிகள் கடந்த 19 -ஆம் தேதி காஷ்மீருக்குப் புறப்பட்டனர். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தேனிலவு கொண்டாட்டத்தின் போது, ஏப்ரல் 22 -ஆம் தேதி, வினய் நர்வாலின்,ஹிமான்ஷி நர்வால் கண் முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பைசரன் புல்வெளியில் இறந்து கிடந்த தனது கணவரின் அருகில் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஹிமான்ஷி நர்வால் புகைப்படம் காண்போரின் மனதை சுக்கு நூறாக உடைத்தது.

இந்நிலையில், அரியானாவில் கர்னாலில் வினய் நர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரத்த தான முகாமில் ஹிமான்ஷி நர்வால்,கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அவர் எங்கிருந்தாலும், அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் விரும்பும் ஒரே விஷயம் அதுதான். இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன்.

யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அதேநேரம் நீதியையும் விரும்புகிறோம்” என ஹிமான்ஷி நர்வால் தெரிவித்தார்.

Mehbooba Mufti: சமூக ஊடகங்களில் வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பை பரப்பும் பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் இடமிருந்து “தொடர்ந்து ஏற்படும் அமைதியின்மை காரணமாக அச்சத்தில் வாழ்கிறோம்” என்று துயர அழைப்புகள் வருகின்றன. சில கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்கள் வீடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலையிட்டு, அனைத்து காஷ்மீர் மாணவர்களும் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மெஹபூபா வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்புபவர்களுக்கு ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும். அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண இதுபோன்ற பிளவுவாத சக்திகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை வேண்டும் என மெகபூபா முப்தி தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் கேரள சுற்றுலா பயணியின் கேமராவில் பதிவை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜித் ரமேசன் என்பவர், கடந்த 18-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக காஷ்மீரிலுள்ள சுற்றுலா பகுதிகளுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து சென்றார்.

ஸ்ரீஜித் ரமேசன் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து கொண்டு இருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளும் அவரது வீடியோவில் சிக்கினர். பஹல்காம் நகரத்தில் இருந்து ஏழரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேதாப் பள்ளத்தாக்கு என்ற சுற்றுலா தலத்தில் இருந்து படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் இவையாகும். அவர் தனது மகளின் நடன வீடியோவை இங்கே படம் பிடித்துக்கொண்டு இருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளின் உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. இருப்பினும், தீவிரவாதத் தாக்குதல் கடந்த 22-ஆம் தேதி நடந்தது.

அதன்பின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் ஓவியங்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இவற்றை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம், தனது செல்போனில் பதிவான வீடியோ காட்சிகளுடன் தீவிரவாதிகளின் முகமும் ஒத்துபோவதாக ஸ்ரீஜித் ரமேசன் அடையாளம் கண்டுள்ளார்.

இதன் மூலம், அவர் நேரடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை அணுகி, அவர்களிடம் வீடியோ காட்சி ஒப்படைத்தார். அந்த வீடியோவை ஸ்ரீஜித் ரமேசனிடம் பெற்றுக் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மை மற்றும் தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

நரேந்திர மோடி கேள்வி: பயங்கரவாதிகள் வருகிறார்கள்..?, தாக்குகிறார்கள்..? , தப்பிக்கிறார்கள்..? ராணுவம் உங்கள் கையில் இல்லையா..?

பயங்கரவாதிகள் வருகிறார்கள்..?, தாக்குகிறார்கள்..? , தப்பிக்கிறார்கள்..? ராணுவம் உங்கள் கையில் இல்லையா..? என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், 2012 -ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய மத்திய அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மீது நரேந்திர மோடி தெரிவித்த விமர்சனங்கள், மோடிக்கே எதிராகத் திரும்பியுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மோடியின் பழைய பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு 2012 -ஆம் ஆண்டு மும்பையில் நடந்த ஒரு பேரணியில் நரேந்திர மோடியின் உரை, “பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் சென்று கொண்டு இருக்கின்றன.பணம் சென்று சேர்கிறது. முழு பணவியல் அமைப்பும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் ரிசர்வ் வங்கியின் கைகளில் உள்ளது. இந்த அமைப்பு முழுவதும் உங்கள் கையில். இடையில் யாரும் இல்லை.

ஆனாலும் ஏன் உங்களால் இதைத் தடுக்கவோ அல்லது பயங்கரவாதிகளைப் பிடிக்கவோ முடியவில்லை? நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகள் வருகிறார்கள், தாக்குகிறார்கள், தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனாலும் யங்கரவாதிகள் வெளிநாட்டில் இருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்? எல்லைகளைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு இல்லையா?” என நரேந்திர மோடி பேசி இருந்தார். இந்நிலையில் “மோடி தன்னைத்தானே கேள்வி கேட்கிறார்” என்ற வாசகத்துடன் சநரேந்திர மோடி கேள்வி கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 7 மாத இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை மறுத்த மருத்துவர்..!

நீங்கள் கொலைகாரர்கள். மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.என கூறி 7 மாத இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பின் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில்,மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இஸ்லாமியர் என்பதால் 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கஸ்தூரி தாஸ் நினைவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவரான டாக்டர் சி.கே. சர்க்கார், “உங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என் மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்கிறார்கள், நீங்கள் கொலைகாரர்கள். உங்கள் கணவர் இந்துக்களால் கொல்லப்பட வேண்டும்,

அப்போதுதான் இந்துக்கள் அனுபவித்த வலியை நீங்கள் உணர முடியும். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக மாறக் கற்பிக்கப்படும் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளுக்கு மட்டுமே நீங்கள் சிகிச்சைக்காகச் செல்ல வேண்டும்.திரும்பி வராதே, நீங்களெல்லாம் ஒரே மாதிரிதான்” என்று கூறி, அவர் 7 மாதமாக சிகிச்சை அளித்து வந்த முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

“இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், மனம் உடைந்துள்ளோம். கடந்த ஏழு மாதங்களாக டாக்டர் சர்க்காரின் பராமரிப்பில் இருக்கும் எனது கர்ப்பிணி மைத்துனிக்கு நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவருக்கு சிகிச்சையளிக்க அவர் வெளிப்படையாக மறுத்ததைக் கண்டு திகைப்பு ஏற்பட்டது.

அப்போதிருந்து அவள் அழுது கொண்டிருக்கிறாள். துயரத்திலும் பயத்திலும் இருக்கிறாள். தனக்காக மட்டுமல்ல, அவளுக்குள் வளரும் உயிருக்காகவும். அவளுக்கு ஆதரவு, இரக்கம் மற்றும் கவனிப்பு தேவைப்படும் நேரத்தில், அவள் வெளிப்படையான தப்பெண்ணத்தையும் கொடுமையையும் சந்தித்தாள்” என்று அந்தப் பெண்ணின் உறவினரான வழக்கறிஞர் மெஹ்ஃபுசா கதுன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அட்டாரி வாகா எல்லை மூடல் எதிரொலி- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா அறிவுறுத்தல்

அட்டாரி வாகா எல்லை மூடல் எதிரொலி- இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமான ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர்.

இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர். இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியாவிற்கான பயண ஆலோசனையை கனடா புதுப்பித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாகா அட்டாரி எல்லை மூடல்- பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு

சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… வாகா- அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும் போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு, அண்மைக்காலமாகவே சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தார்கள். மெல்ல மெல்ல நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தை பயங்கரவாதிகள் அழிக்க வேண்டும் என்று நினைத்து தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சவூதியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதேபோல ஜம்மு காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புப் படையினருடனும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் தற்போது பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

சிந்து நதி இனி பாகிஸ்தானிற்குள் பாயாது… இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும்,  வாகா-அட்டாரி எல்லைகளை மூடல் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்,  இந்தியாவை விட்டு ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும். – பாகிஸ்தானியர்களுக்கு இனி சார்க் விசா வழங்கப்படமாட்டாது. – இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு பாகிஸ்தானின் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைப்பு போன்ற அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டது.

மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..!

காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை… மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் முக்கிய கோடை கால சுற்றுலாத்தலமாக ஜம்மு – காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய ஊர்.

இந்த பஹல்காம் பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள்.

இங்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அதிவேகமாக களம் இறங்கினார்கள். அப்போது திடீரென அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டுள்ளனர். இதில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனிடையே சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் காவல்துறை விரைந்து சென்று பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிலர் சமூக வலைத்தளங்களில் காஷ்மீர் குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்து வெறுப்புகளை பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தான் காஷ்மீரின் நடந்த மனித நேய சம்பவங்களை பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவரை தனது தோளில் சுமந்தபடி காஷ்மீரி ஒருவர் காப்பாற்றினார். இதை பகிர்ந்த நெட்டிசன், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, மனிதநேயம் இன்னும் சத்தமாக பேசியது. காயமடைந்த சுற்றுலாப் பயணியை மீட்க தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார் ஒரு காஷ்மீரி – இதுதான் உண்மையான காஷ்மீர்.

காஷ்மீர் வன்முறையாளர்களால் வரையறுக்கப்படவில்லை.. அதேநேரம் இரக்கம், தைரியம் மற்றும் அன்பு ஆகியவற்றால் காஷ்மீர் இருக்கிறது. நாம் உண்மையில் யார் என்பதை உலகம் பார்க்கட்டும். இதுதான் இந்தியாவின் சகோதரத்துவம் என நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.