சல்மான் கானை பின்தொடரும் புல்வாய் இன மான்..! மன்னிப்பு கேளுங்கள் இல்லாவிட்டால்…!

புல்வாய் இன (black buck) மானைக் கொன்றதற்காக எங்கள் கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 கோடி தொகை வழங்க வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து சல்மான் கானுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த மிரட்டல் சம்பவம் குறித்து மும்பை போக்குவரத்து பிரிவு காவல்துறைக்கு, “லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் என்று கூறி ஒரு நபரிடமிருந்து எங்களுக்கு செய்தி ஒன்று வந்தது. அதில், சல்மான் கான் தொடர்ந்து உயிர்வாழ விரும்பினால் அவர் எங்களின் கோயில் ஒன்றுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். சல்மான் கான் அவ்வாறு செய்யவில்லையென்றால் கொலை செய்யப்படுவார். எங்களின் கும்பல் இப்போதும் செயல்பாட்டில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது” என தெரிவித்தனர்.

பாஜக சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்: நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..!

நடிகை கஸ்தூரி தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும்; தமது கருத்துகளுக்காக நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிராமணர்கள் நேற்று பாதுகாப்பு வழங்க கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை கஸ்தூரி, தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பாஜகவின் டெல்லி மேலிட இணை பொறுப்பாளரான சுதாகர் ரெட்டி வீடியோ வெளியிட்டார். அதில் நடிகை கஸ்தூரியின் இழிவான விமர்சனங்களுக்கு கடு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும்; தமது கருத்துகளுக்காக நடிகை கஸ்தூரி தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; அண்ணன் தம்பியாக பாசத்துடன் பழகிவரும் தமிழர்களுக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் இடையேயான ஒற்றுமையை நடிகை கஸ்தூரியின் இத்தகைய பேச்சுகள் பாதிக்கும் என்றும் சுதாகர் ரெட்டி அந்த வீடியோவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

நரேந்திர மோடி: டெல்லி மற்றும் மேற்கு வங்க மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்..!

“மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்து வருவதால் இத்திட்டத்தின் பயன்களை அம்மாநில மக்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ.12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் , “டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

அரசியல் காரணங்களுக்காக தங்கள் மாநிலத்தின் சொந்த மூத்த குடிமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது மனித நேயத்துக்கு எதிரானது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னால் சேவை செய்ய முடிகிறது. ஆனால், டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் சுவர்கள் காரணமாக உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை” என நரேந்திர மோடி தெரிவித்தார்.