அண்ணாமலை குற்றச்சாட்டு:மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவை மாடுகளுக்கு விற்கும் விடுதி ஊழியர்கள்?

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், இன்றைய தினமலர் இணையவழி செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 – 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?

தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும்.

இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 – 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 – 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு. ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றுடன் முடியும் நிதியாண்டில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை. வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது.

பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு? உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் குறித்து மீடியா வெளிச்சத்திற்காக விஜய் பேசுகிறார் என அண்ணாமலை விமர்சனம்..!

மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல், மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய் என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக பரபரப்பான அரசியல் சூழலில் அமித் ஷாவின் அவசர அழைப்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று, டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்; மாநில தலைவராக எனது கருத்தை கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். கூட்டணி தொடர்பாக பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம். எனது கட்சியை வலிமைப்படுத்தவே உழைத்து வருகிறேன்; தொண்டனாகவும் பணி செய்வேன். பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம் என்று கூறினார்.

மேலும் அண்ணாமலை தொடர்ந்து பேசுகையில், மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். மைக் எடுத்து பேசி, கைகாட்டிவிட்டு போவதில்லை அரசியல்; களத்தில் வேலை செய்ய வேண்டும். சக்திமிக்கவர்களை பேசினால் மைலேஜ் கிடைக்கும்; அதனால் பிரதமர் பற்றி விஜய் பேசுகிறார்.

தினமும் போராடுவது ஒரு அரசியல்; கட்சி தொடங்கி 3 முறை வெளியே வருவது ஒரு அரசியல். கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை: “சேகர்பாபு ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் இருந்தவர்..! தமிழ்நாடு விளங்குமா..!?”

“சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு. இப்படிப்பட்டவர் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாக அண்ணாமலை தெரிவித்தார். திருச்சியில் தமிழக பாஜக சார்பில் மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் MLA, வானதி சீனிவாசன் MLA உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 -ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை.

ஆனால் திமுகவினர் வடமாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாகப் அண்ணாமலை பேசினார்.

எஸ்.வி.சேகர் அதிரடி: அண்ணாமலை அரசியலில் பூஜ்யம்..!

அண்ணாமலை அரசியலில் பூஜ்யம், ஒன்றுமே தெரியாது என எஸ்.வி.சேகர் அதிரடியாக தெரிவித்தார். நடிகரும், முன்னாள் MLA -வும், எஸ்.வி.சேகர் கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “தமிழகத்தில் பாஜகவுடன் எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும், அந்த கூட்டணி மண்ணைக் கவ்வும். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலிலும் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெறும், மீண்டும் ஆட்சி அமைக்கும். போன முறையாவது அதிமுக தயவால் பாஜக 4 சீட்களில் வென்றது. இந்த முறை அதுவும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் பாஜக வளரவே இல்லை. அது வீக்கம் மாதிரி. பலூர் ஊதினால் பெரிதாகும், அதில் சக்தி இருக்காது. 2026-ல் பாஜக புஸ்ஸுனு போய்விடும். தமிழ்நாட்டில் பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அது மண்ணை கவ்வும். திமுக தலைமை கேட்டுக் கொண்டால் திமுகவிற்காக பிரச்சாரம் செய்வேன். ஆனால் எந்த அரசியல் கட்சியிலும் இனி நான் சேரப் போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “ப்ரோ.. ப்ரோ” என்று சொல்வதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். ரசிகர்கள் பிடித்த நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவர் தான் தொண்டர்களுக்கு செலவு செய்ய வேண்டும். களத்துக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க சுற்றி வரவேண்டும். அப்போதுதான் அவருக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது தெரியும். இல்லையென்றால் நானும் அரசியலில் இருக்கிறேன் என சீமான் போல நிற்க வேண்டியது தான்.

நாடாளுமன்ற மறுசீரமைப்பின் போது வட மாநிலங்களுக்கு எந்த விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அதே விகிதாச்சாரப்படி தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும். அண்ணாமலை ஒரு உளறல் பேர்வழி. அவருக்கு வாய்தான் பேசுகிறது, பேசுவது எல்லாம் பொய். கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை காவல்துறை அதிகாரியாக இருந்தபோது, அவரை பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அண்ணாமலை முந்திக்கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அவரது அரசியல் தமிழ்நாட்டில் நடக்காது. அண்ணாமலை அரசியலில் பூஜ்யம். ஒன்றுமே தெரியாது” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

அண்ணாமலை: 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா , வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், எல்லோருக்குமான கல்வி திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஐசிடி பாடத்திட்டம் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐசிடி அறிவியல் பாடத்தில் ஒரேயொரு சேப்டராக கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மிகப்பெரிய திட்டத்தில் குளறுபடி செய்துவிட்டு, நாங்கள் செய்வது சரி என்று தமிழக அரசு பேசிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதேபோல் பாஜகவை பொறுத்தவரை தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்திருக்கிறார்.

இதனை நான் தேர்தல் களத்தில் எதிர்கொள்வேன். 2026-ல் திமுகவின் அரசியல் பாரம்பரியத்தில் கடைசியாக ஆட்சியில் இருந்த நாளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் தாமரை வேஷத்தில் மட்டுமே இருக்கிறோம்.  தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் இலக்கு பாஜகவின் வளர்ச்சி மட்டும்தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், காலம் இருக்கிறது.

2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கேள்வி: விஜய் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா..!?

எரிகிற நெருப்பில் விஜய் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, சென்னை விமான நிலையம் வெறும் ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ளது. டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரில் 4 ஆயிரம் ஏக்கரிலும் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை வளர்ச்சி அடைந்து வருவதால், ஆயிரம் ஏக்கரை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை எப்படி நடத்த முடியும்.

சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு இரண்டரை கோடி பயணிகளை கையாளுகிறது. இதுவே அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் என்ற நிலை உருவாகும். எனவே, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழகத்தில் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்கிறது. 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், விமான நிலையம் அமைவதற்காக இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூரும், மாமண்டூரும் இடம்பெற்றிருக்கிறது. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாமண்டூரை நீக்கிவிட்டு பரந்தூர், பண்ணூரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதில் மத்திய அரசு பல ஆய்வுகள் நடத்திய பிறகுதான், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து பரந்தூரை தேர்வு செய்தது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளும் அனுப்பிய பட்டியலில் பரந்தூர் இடம் பெற்றிருந்தது. இடத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசுக்கு ஒரு சதவீதம் கூட பங்கு கிடையாது. சென்னை அருகில் விமான நிலையம் வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அதை எங்கு கட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது.

சென்னைக்கு அருகில் விமான நிலையம் வேண்டாம் என்கிறாரா விஜய், விமான நிலையம் வேண்டும் என்றால், எந்த இடத்தை தேர்வு செய்து அவர் கொடுப்பார், ஏனென்றால், பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும். டங்ஸ்டன் பிரச்சினை வேறு, விமான நிலைய பிரச்சினை வேறு. எனவே, பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக கையாண்டு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வருவார்கள்.

எரிகிற நெருப்பில் விஜய் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா? தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சி தொடங்கி ஒராண்டாகிறது. இந்த ஓராண்டாக பரந்தூர் பக்கம் விஜய் ஏன் செல்லவில்லை. இவ்வளவு நாட்கள் என்ன செய்தார், விஜய் மக்களை சந்தித்தது அரசியலா அல்லது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையா, டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை ஜனவரி 22-ஆம் தேதி சந்தித்து அதற்கு நிரந்தர தீர்வை கொடுக்க இருக்கிறோம். யுஜிசி வரைவு வழிகாட்டு முறைகளை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை: திமுகவினருக்கும், முரசொலிக்கும் திருவள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை…!

திமுகவினர் திருவள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார், தற்போது செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பாஜக யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை.

பாஜக கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழர்களின் அடையாளம் பெருமை. அதில் துணை முதல்வரும், அவரது மகனும் பங்கேற்பது தவறல்ல. ஆட்சியரை எழுப்பிவிட்டு அவரது இருக்கையில் மகனின் நண்பர்களை அமரவைத்தது தவறு. அமைச்சர் மூர்த்தி நடந்துகொண்ட விதம் அநாகரிகம். அதிலும் ஆட்சியர் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என பதிலளித்தது முட்டாள் தனமானது. அரசியல் லாபம் கருதிக்கூட இருக்கையை விட்டுக் கொடுத்து இருக்கலாம். அமைச்சர் மூர்த்தி பவர் இருக்கும் வரை ஆடுவார். அதிகாரிகள் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.

திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.

ஈரோடு இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த தேர்தலில் ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து திமுகவினர் சித்திரவதை செய்து துன்புறுத்தினர். மீண்டும் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாககக்கடாது என்பதற்காக பாஜக போட்டியிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சினைக்கு திமுக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியில் ஜெயிப்போம் என யாரும் சொல்ல முடியாது.

இரவில் நன்றாக தூங்கச் செல்பவர்கள் காலையில் எழுந்திருப்பதில்லை. எனவே 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும். தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது. காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை: தமிழகத்தில் காவல்துறையை பாதுகாப்பதற்காக ஒரு துறையை உருவாக்கும் நிலை..!

தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது, காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தவெக தலைவர் விஜய்யை சமீபத்தில் திராவிட கட்சித்தலைவர் ஒருவர் கூட்டணிக்கு அழைத்தார், தற்போது செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கூட்டணியில் சேருங்கள் என அழைத்துள்ளார். அவர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை. பாஜக யாரையும் கூப்பிட வேண்டிய அவசியமில்லை.

பாஜக கட்சி தமிழகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழர்களின் அடையாளம் பெருமை. அதில் துணை முதல்வரும், அவரது மகனும் பங்கேற்பது தவறல்ல. ஆட்சியரை எழுப்பிவிட்டு அவரது இருக்கையில் மகனின் நண்பர்களை அமரவைத்தது தவறு. அமைச்சர் மூர்த்தி நடந்துகொண்ட விதம் அநாகரிகம். அதிலும் ஆட்சியர் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என பதிலளித்தது முட்டாள் தனமானது. அரசியல் லாபம் கருதிக்கூட இருக்கையை விட்டுக் கொடுத்து இருக்கலாம். அமைச்சர் மூர்த்தி பவர் இருக்கும் வரை ஆடுவார். அதிகாரிகள் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்கக்கூடாது.

திமுக பிறக்கும் முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் சொல்லி வந்திருக்கிறார். அதனை வள்ளுவர் ஆரிய கைக்கூலியாக இருந்துகொண்டு திருவள்ளுவர் கருத்துகளை திணித்துள்ளார் என பெரியார் கடுமையாக சாடினார். அவரது வழியில் வந்த திமுகவினர் வள்ளுவரை பற்றி பேச அருகதை இல்லை. குறிப்பாக முரசொலிக்கு அருகதை இல்லை.

ஈரோடு இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். கடந்த தேர்தலில் ஈரோட்டில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து திமுகவினர் சித்திரவதை செய்து துன்புறுத்தினர். மீண்டும் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாககக்கடாது என்பதற்காக பாஜக போட்டியிடவில்லை. திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் பிரச்சினைக்கு திமுக அரசு பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலை செய்கிறது. அதற்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதியில் ஜெயிப்போம் என யாரும் சொல்ல முடியாது.

இரவில் நன்றாக தூங்கச் செல்பவர்கள் காலையில் எழுந்திருப்பதில்லை. எனவே 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும். தமிழகத்தில் காவல் துறைக்கு பாதுகாப்புக்கு கொடுக்க வேண்டியுள்ளது. காவல் துறை நடத்திய பொங்கல் விழாவில் வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது. எனவே திமுக ஆட்சியில் காவல் துறையை பாதுகாப்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை: திமுக அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்…!

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய எட்டு இடங்களில் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திரா என்ற காவலர் பணி முடிந்து தனது வீட்டுக்குச் சென்ற போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இளைஞர்கள் அவரது செயினை பறித்து சென்றனர்.

ஒரே நாளில் சென்னையில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் குற்றவாளிகளை கைது செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,” சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். திமுக அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பாஜக தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

திமுக அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற்கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலைக்கு வாய்ப்பா…!?

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜக மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த 2021-ஆம் ஆண்டு மாநில தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையின் பதவி காலம் நிறைவடைகிறது.

தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கிளை நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை தொடர்ந்து புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி நாளை மறுநாள்சென்னை வருகிறார். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தலைவர் தொடர்பாக கலந்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் வலிமையான தலைமை வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். பாஜ கட்சியின் விதிமுறைப்படி இரண்டு முறை ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில் அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தலைவர் பதவியை குறிவைத்து மேலும் ஒன்றிரண்டு பேர் காய் நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வை எதிர்கொள்ள வலிமையான தலைமை தேவை என்ற அடிப்படையில் டெல்லி மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது.

சென்னை வரும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முதல் மூன்று பேர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேல் இடத்திற்கு அனுப்ப உள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வார இறுதிக்குள் புதிய மாநில தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.